Monthly Archives: September 1997

Bhakti Song 96 – Struggle along with me

கூடவே போராடு

எதிலும் ஓர் குறைவில்லை ஸ்வாமி

எல்லாம் எனக்கு நிறைவாய்த் தந்தாய்.

அழகைத் தந்தாய், அறிவைத் தந்தாய்

அமைப்பாய் ஓர் வடிவைத் தந்தாய்

மதியுடன் பல திறமைகள் தந்தாய்

மாண்புடன் வாழவே வழியும் தந்தாய்

எல்லாம் தந்தது போதாதென்று

உன்னையும் தந்தாய் உய்யவேண்டி

கேட்காமலே எல்லாம் தந்தநீ Continue reading

Bhakti Song 95 – What can I do?

I wrote this song just for fun and humour. I deliberately changed the events as a cautious one, but still lost due to my own lethargy. Once you read you will understand this humour.

என்ன செய்வேன்?

வருகின்ற நேரத்தை அறிந்திருந்தால்

விழித்திருப்பேன் உன்னை வரவேற்க

வரும்போது வரட்டும் எனயெண்ணி

சற்றெ அயர்ந்தேன் இளைப்பாற

புத்தியில்லா அப்பெண்களைப் போல்

புலம்பக்கூடாது பின்னே என்று

தீபமுடன் எண்ணை கொண்டுவந்தும்

தூங்கும்முன் மறந்தேன் எண்ணை ஊற்ற! Continue reading

Bhakti Song 94 – Unable

இயலவில்லை

ஏறெடுத்துப் பார்க்கவும் இயலவில்லை

என் பாவங்களை நினைக்கையிலே

தூரநிற்கவும் துணியவில்லை ஐயா

தொடர்ந்திங்கு பாவத்தில் வாழ்வதாலே!

வேறெங்கு போவேன் வழியேதுமில்லை

மனவேதனை கூற மொழியிங்கு இல்லை

“நீதிமான்” என்றே நீ கூறவேண்டாம்

நன்கறிவேன் அதற்கு நான்தகுதியில்லை

உன்நீதி தன்னை உணராமல் நானும்

ஊர்மெச்ச வேண்டி என்நீதி கூறி Continue reading