Monthly Archives: July 2015

Tamil Song 128

128 வெகுசிலர்

 

தத்தளிக்கும் போதிலே

தண்ணீரில் குதித்து

தன்னுயிரைப் பணயம்வைத்து

தரைசேர்ப்பார் ஒருசிலர்

Continue reading

A Tribute to Kalam Baba

127 கலங்கரை விளக்கு

கனவு கானச்சொல்ல கற்றுத் தந்தாய்
கருத்தாய் அதற்காக வாழச் சொன்னாய்
“அக்கினி சிறகடித்து”1 பறக்கச் சொன்னாய்
அடுத்தவர்க் கென்று வாழச் சொன்னாய்

கடலோரம் முத்தாக கரை ஒதுங்கி2
காலெமெனும் பள்ளியிலே மெருகாகி
ஏவுகனை ஏறி விண்ணில் பாய்ந்து3
ஏற்றமிக புகழினையே நாட்டி வைத்தாய்

வல்லரசு நாடாக நாம் வரவேண்டி
வலிமையுள்ள ஆயுதத்தை ஆக்கித் தந்தாய்4
சொந்த பெலன்கொண்டு நாம் முன்னேற
சொல்லரிய திட்டங்கள் வகுத்துத் தந்தாய்5

எதிர்கால இந்தியா ஏற்றம் பெற
எத்தனையோ கனவுகள் காணவைத்தாய்
எவ்வளவோ மேன்மைகள் கண்ட நீயோ
என்றுமே எளிமையாய் வாழ்ந்து நின்றாய்

எதிர்காலம் இளைஞர் கையில் என்ற
எண்ணத்தை அவர்களுக்கு ஊட்டி விட்டாய்
ஏறுநடை போட்டு அவர்கள் முன்னேற
ஏற்றமிகு உரைகள்பல நீ ஆற்றிவைத்தாய்

காலமெனும் ஓட்டத்தில் உன் உடல்போனாலும்
“கலாம்” என்ற கலங்கரை விளக்காக நின்று
காலம் பலகடந்து ஒளி காட்டி
கோலோச்சுவாய் முடிசூடா மன்னனாக

28-7-15, மத்திகிரி, இரவு 3.30௮.௩0

1. அவர் எழுதிய புத்தகம்
2. அவர் கடலோர இராமேஸ்வரத்தில் பிறந்தார்
3. முதல் ஏவுகணை திட்டத்தை வடிவமைத்தவர்
4. அணுசக்தியை  ஏற்படுத்தித் தந்தவர்
5. தற்கால விண்வெளிக் கூடங்கள் ஏவ உதவும் கிரோஜனிக் இயந்திரத்தை
ஆரம்பித்து வைத்தவர்.  அணுகுண்டு சோதனைக்குப் பின் அமெரிக்கா உட்பட பல
வெளிநாடுகள் பல தடைகளை ஏற்படுத்தியும், உள்ளாட்டிலேயே விண்கல ஏவுதற்கான
இயந்திரங்களை உருவாக்கி அதில் வெற்றிபெர முன்னோடியாக இருந்தவர்

Tamil Song 127

127 கலங்கரை விளக்கு

 

கனவு கானச்சொல்ல கற்றுத் தந்தாய்

கருத்தாய் அதற்காக வாழச் சொன்னாய்

“அக்கினி சிறகடித்து”1 பறக்கச் சொன்னாய்

அடுத்தவர்க் கென்று வாழச் சொன்னாய்

 

கடலோரம் முத்தாக கரை ஒதுங்கி2

காலெமெனும் பள்ளியிலே மெருகாகி

ஏவுகனை ஏறி விண்ணில் பாய்ந்து3

ஏற்றமிக புகழினையே நாட்டி வைத்தாய்

 

வல்லரசு நாடாக நாம் வரவேண்டி

வலிமையுள்ள ஆயுதத்தை ஆக்கித் தந்தாய்4

சொந்த பெலன்கொண்டு நாம் முன்னேற

சொல்லரிய திட்டங்கள் வகுத்துத் தந்தாய்5

 

எதிர்கால இந்தியா ஏற்றம் பெற

எத்தனையோ கனவுகள் காணவைத்தாய்

எவ்வளவோ மேன்மைகள் கண்ட நீயோ

என்றுமே எளிமையாய் வாழ்ந்து நின்றாய்

 

எதிர்காலம் இளைஞர் கையில் என்ற

எண்ணத்தை அவர்களுக்கு ஊட்டி விட்டாய்

ஏறுநடை போட்டு அவர்கள் முன்னேற

ஏற்றமிகு உரைகள்பல நீ ஆற்றிவைத்தாய்

 

காலமெனும் ஓட்டத்தில் உன் உடல்போனாலும்

“கலாம்” என்ற கலங்கரை விளக்காக நின்று

காலம் பலகடந்து ஒளி காட்டி

கோலோச்சுவாய் முடிசூடா மன்னனாக

 

28-7-15, மத்திகிரி, இரவு 3.30௮.௩0

  1. அவர் எழுதிய புத்தகம்
  2. அவர் கடலோர இராமேஸ்வரத்தில் பிறந்தார்
  3. முதல் ஏவுகணை திட்டத்தை வடிவமைத்தவர்
  4. அணுசக்தியை ஏற்படுத்தித் தந்தவர்
  5. தற்கால விண்வெளிக் கூடங்கள் ஏவ உதவும் கிரோஜனிக் இயந்திரத்தை ஆரம்பித்து வைத்தவர். அணுகுண்டு சோதனைக்குப் பின் அமெரிக்கா உட்பட பல வெளிநாடுகள் பல தடைகளை ஏற்படுத்தியும், உள்ளாட்டிலேயே விண்கல ஏவுதற்கான இயந்திரங்களை உருவாக்கி அதில் வெற்றிபெர முன்னோடியாக இருந்தவர்

 

 

English Translation:

127 Light House (A tribute to Kalam Baba)

 

You taught us to see vision/dream

And toil for it with full dedication

You ask us to soar with “Wings of Fire”1

And advised us to live for others

 

You are like a pearl which is thrown (by a wave) on the seashore

And cultured (to shine) in the school of life

And you soared to the sky in the Rocket

You established a noble glory.

 

In order to become a Super Power

You created a powerful weapon2

To make progress without your own strength

You gave so many super plans for the country.5

 

To attain glory in the future for India

You make us see many dreams

Though you attained so many glories

Yet you lived a simple life.

 

You fed the youth

That the Future is in their hands

And to make progress with dignity

You gave so many lectures to them.

 

Though your mortal body might be gone in the flood of time

Remaining as the Light House known as ‘Kalam’

By showing light by transcending so many generation

You will rule ever as an uncrowned King of us.

 

  1. The book which he wrote
  2. He born in Rameshwaram
  3. He created the first Satellite launching plan
  4. He worked on using Atomic power in India
  5. After the Pokaran atomic explosion, though sanction was imposed on India by America and other countries, to overcome all such impediments, he planned for the development of cryogenic motor to launch several satellites and we succeeded in it.

28-7-15, Mathigiri 8.30 pm.

 

Baba Kalam

After Mahatma Gandhiji the one INDIAN I respect is Baba Kalam.  Though others address him as Dr. Kalam, I prefer to call him Baba Kalam. He deserves to be addressed this way as he epitomized his own jnana and karma in his bhakti to the nation with a sprit of a sannyasi. Thankfully he never remained a politician, but handled politicians very tactically —particularly in the episode of Sonia’s attempt to become the PM.

Dr. Pranap Roy (of NDTV) was interviewing Baba Kalam once while he was addressing the students at Rashtrabati Bhavan. He asked him, “Should the President be a politician or a non-politician?” Baba Kalam wisely answered, “This is a political question.”

Wherever his mortal body will be put to rest, the Presidency of Indian will always be divided as before Baba Kalam and after Baba Kalam. To honor his contribution to the nation, I wish that his statue should be put in front of the Rashtrabati Bhavan, as it will dignify that building permanently.

He lived a noble life and ended with a noble death — that too while doing his dharma of INSPIRING THE YOUTHS.

Db
28-7-15

Honoring Parents

I often say that the Muktiveda doesn’t give patterns for us to imitate, but rather principles for us to interpret and apply to our context. Honoring parents is one such principle.

In order to know some of the contexts in which the word ‘honor’ occurs in the Muktiveda, I checked a few instances at random. In almost all the contexts, this word means showing respect, concern, love, compassion, relationship, etc. Interestingly, in the same way it is also used in showing honor to God.

Keeping this in mind, we need to consider not only the context of the Muktiveda but also our particular social/cultural and even religious context when we interpret this principle in honoring our parents. We know well that however we belong to the universal body of the Lord, we cannot uniformly apply this principle.  Continue reading

Charity in All

Somewhere I read the phrase, “Unity in essentials, concession in peripheral and charity in all.”

This came in my mind when I was thinking about the concept of “agreeing to disagree”. No two people are going to agree with each other on everything in life. Thankfully, we need not agree with others on everything. Having a different opinion doesn’t need to result in a disagreement, but rather in seeing the thing from a different perspective. This is called “interpretation”. Continue reading

What is Spirituality?

‘Spirituality’ needs to be defined, if possible, although no one can give a clear definition about it or claim to have understood it totally.

As a bhakta of Mukitinath, “Love your God and love (or serve) your neighbour (meaning whoever is in need) could summarise this spirituality. Summarizing even further, I use my favorite word, relationship, both with God and others (including non-humans).

For a typical Hindu, ‘spirituality’ could mean many things. ‘Aanmiiham’ in Tamil, ‘Atmikta’ in Hindi, and perhaps ‘Adyatmika’ in Sanskrit although this word does not have a standard definition. But for the majority of Hindus, spirituality is personal and individualistic. For example, in Tamil we often say, ‘Anmiiha vidudalai’ (liberation in anmiiham). But what is this liberation is a big question. In general we take it to mean liberation from the karma. Continue reading

Vanakkam and Namaste

Recently one bhakta asked what ‘Vanakkam’ (in Tamil) actually means. Its counterpart is ‘Namaste’ in Hindi. Though there was no specific reason for asking this question, I have noticed that some people object to saying ‘namaste’ with hands folded because it is supposed to be a sign of worship of that person and therefore equating her/him with God.

One can well understand that he said this in his context of defending his handshake to greet others. As a joke, I said, “There are three kinds of folding hands, one keeping the before one’s face, another in front of the heart and another above the head – which one do you mean?” Then I pointed out to him that in general when we say ‘vanakkam’ we keep our folded hands in front of our face and when we worship deities we keep them either in front of our hearts or on top of our heads. Continue reading

Bhakti Songs 361-370

361 அருள்பவன்

நம்பிடும் அடியார்க்கு

நலமே செய்வான்

நாடிடும் எளியோர்க்கு

அருளும் புரிவான்

துன்பத்தில் துவள்வோர்க்கு

துணையாய் இருப்பான்

துதித்துப் புகழ்வோர்க்கு

பக்தியை அருள்வான்

பிறர்நலம் நினைப்போர்க்கு

புகழை அளிப்பான்

புரப்பவர் அளிக்க

பொருளை அள்ளிப்பான்

பசிப்பிணி அறுப்போர்க்கு

தன்பதம் அளிப்பான்

பைந்தமிழால் பாட

பரவசம் அடைவான்

 

17-12-2015, மத்திகிரி, மதியம் 2.45

 

 

362. ஓட்டத்தை ஓடுவேன்

ஒவ்வொரு நாளாய் உன்னுடன் வாழ்ந்து

ஓட்டத்தை முடிக்கும் நோக்கமே வேண்டும்

ஓராயிரம் நெருக்கம் உலகினில் உண்டு

ஆயினும் அவையிடை உன் அமைதிவேண்டும்

 

ஆயுளும் ஓட தேகமும் வீழுது

அதனால் ஓட்டத்தில் தாமதம் ஆகுது

எப்படியேனும் என் ஓட்டத்தை முடித்து

உன்னிடம் வந்து சேர்ந்தால் போதும்

 

வயதிற்கு ஏற்ப விருப்பமும் மாறும்

வசதிக்கு ஏற்ப நிலைகளும் மாறும்

சூழ்நிலைக்கு ஏற்ப மனமும் மாறும்

ஆயினும் உன்னுடன் உறவு தொடரும்

 

மண்ணால் ஆன தேகம் அதனில்

மனதை வைத்து வாழ்ந்திருக்காமல்

விண்ணின் சாயல் விரைவில் அடைய

விருப்பம் கொண்டு வந்தேன் நானும்

 

ஆயினும் நீதரும் ஓட்டத்தை ஓடுவேன்

அதற்கு நீதரும் ஆக்கத்தை உணர்வேன்

ஓட்டதை ஓட உன்பணி முடிக்க

நீதரும் பெலத்தை நாளும் உணர்வேன்

 

23-12-2015, குருகுலம், மாலை 6.30

 

363 அறியாக் கருணை

இந்தக் கருணையை எவர்தான் அறிவார்

உந்தன் அருளை எவர்தான் புரிவார்

உள்ளம் தன்னில் உணர்ந்தோர் அன்றி

உரைப்பதால் மட்டும் என்றும் அறியார்

 

தத்துவங்கள் எவையும் பேச வேண்டாம்

தர்க்கம் பலவும் செய்ய வேண்டாம்

புத்தியாலும் நாம் அலச வேண்டாம்

பக்தி ஒன்று இருந்தால் போதும்

 

சாத்திரங்கள் பல அறிய வேண்டாம்

சடங்கு பலவும் செய்ய வேண்டாம்

கோத்திரம் குலம் பார்க்க வேண்டாம்

தன்குறையை மட்டும் உணர்ந்தால் போதும்

 

பதிலாய் ஒன்றைத் தரவும் வேண்டாம்

பாடி ஆடித் தொழவும் வேண்டாம்

பலபடியாய் நாம் துதிக்க வேண்டாம்

பாதம் தன்னை அடைந்தால் போதும்

 

ஏட்டில் எழுதி காட்ட வேண்டாம்

இசையைக் கூட்டிப் பாட வேண்டாம்

எவர்க்கும் புரியா அந்த நிலையை

எடுத்துக் கூறி விளக்க வேண்டாம்

 

புரிந்தோர் தம்முடன் ஒன்று கூடி

பணிந்து அவனின் புகழைப் பாடி

அறியார் அறிய வாழ்ந்து காட்ட

அறிவார் பலரும் அந்த கருணை

 

27-12-2015, குருகுலம், மாலை, 6.00

 

 

364 தவம் இதுவோ

 

இதுதான் மெய்த் தவமோ

இத்தனை நாள் அறியாதிருந்தேனே—இதுதான்…

 

ஒன்றும் பேசாதிருந்து

உன்னையே நினைந்திருந்து

சிந்தையில் துதித்திருந்து

சேவடி பணிவதுதான்–இதுதான்…

 

பொழுது போகவில்லையென

பலபல செயல்கள் செய்து

களைத்துச் சோர்வடையாமல்

கருதுடன் உன்னைபணிவதுதான்–இதுதான்…

 

அறிவைப் பெருக்க எண்ணி

அகப்பட்டெ தெல்லாம் படித்து

சிந்தையைக் குழப்பிடாமல்

திருவடியை நினைப்பதுதான்–இதுதான்…

 

ஞானத்தை விரிவாக்க

ஞானியென பிறர்நினைக்க

பேதமையாய் பலகூறாமல்

வாய்மூடி இருப்பதுதான்–இதுதான்…

 

உன்னடி வந்தமர்ந்து

உன்னருளை நினைந்திருந்து

என்னையே இழந்திருந்து

உன்னுடன் வாழ்வதுதான்–இதுதான்…

 

27-12-2015, குருகுலம், மாலை, 7.15

 

 

365 காரணம் இருக்கு

 

அன்பும் இருக்கு

அருளும் இருக்கு

அத்துடன் எனக்கு

உன்துணையும் இருக்கு

 

ஆயினும் எனக்கு

உள்ளது வழக்கு

அதை சொல்வதற்கு

கூச்சமாய் இருக்கு

 

நான் எதற்கு

சொல்லனும் உனக்கு

இந்தநாடகம் எதற்கு

தேவை உனக்கு

 

முறை யிடுவதற்கு

முன்பாக எனக்கு

செவி கொடுப்பதற்கு

கடமை இருக்கு

 

அதை சொல்வதற்கு

நான் வருதவற்கு

தயக்கம் எனக்கு

கூடவே இருக்கு

 

நான் துறப்பதற்கு

எண்ணம் இருக்கு

அதை செய்வதற்கு

உன்துணை யிருக்கு

 

ஆயினும் எதற்கு

அளித்தாய் எனக்கு

பணி செய்வதற்கு

பாரம் சுமப்பதற்கு

 

தோள் கொடுப்பதற்கு

துணை இருக்கு

ஆயினும் எனக்கு

இதுபாரமாய் இருக்கு

 

விடு வதற்கு

முடியாமல் இருக்கு

சுமப்பதற்கு

தயக்கமாய் இருக்கு

 

என்னவோ எனக்கு

பட்டதை உனக்கு

சொல்வதற்கு

உரிமை இருக்கு

 

ஆயினும் எனக்கு

விடுதலை தருவதற்கு

அதிகம் உனக்கு

பொறுப்பு இருக்கு

 

இந்த வழக்கு

முடிப்பதற்கு

ஏனோ உனக்கு

காரணம் இருக்கு

 

ஆயினும் அதற்கு

நேரம் இருக்கு

அதைக்கூற உனக்கு

தயக்கம் எதற்கு?

 

31-12-2015, மத்திகிரி, காலை, 6.00.

 

 

366 முதுமை வந்தது

 

என்னால் முடிந்ததை நானுமே செய்கிறேன்

இதற்கு மேலானதை நீதான் பார்க்கனும்

என்னால் முடியும் என்றுநான் எண்ணாமல்

உன்னுடன் இணைந்துதான் எதையும் செய்யனும்

 

செய்திடும் செயலிலே மனதையும் வைக்கனும்

சிறிதே செய்தாலும் சீராகச் செய்யனும்

முடியாமல் போகும்போது முடிந்ததைச் செய்யனும்

முடியாதென ஒதுங்கினால் முடமாகித்தான் போகனும்

 

பணிப்பலச் செய்யவே பாரினில் வந்தோமே

பணியின்றி வாழ்வுமே பாழாகிப் போகுமே

அதிகப் பணிகளும் ஆபத்தாய் போகுமே

ஆயுளுக் கேற்றார் போல் வாழப்பழகனுமே

 

தோள்பலம் கொண்டு செயல்பட ஒருகாலம்

தோள்கொடுத்து பிறருடன் செய்வதும் ஒருகாலம்

தேகம் தளர்ந்திட பிறர்பெலன் கொண்டுமே

செயலை செய்வது முதுமையின் அடையாளம்

 

முதுமையும் வந்தது முழுமையாய் ஏற்கிறேன்

முடமாக்கிப் போடாதே உன்னையும் வேண்டுறேன்

என்னால் முடிந்ததை நானுமே செய்திட

என்னைநீ தாங்கிட உன்னையே வேண்டுறேன்

 

1-1-2016, மத்திகிரி, மதியம் 2.55

 

 

367 வாக்கை மறந்தாயோ

 

வாக்கை மறந்தாயோ வள்ளளே

வழித் துணையாக வாராயோ?

 

சோதிக்கும் காலமோ இது

சொல்லிடப் போமோ இது

ஏதுக்கிதை நீ அனுமதித்தாய்

சோதனைக்கேன் இடம் கொடுத்தாய்–வாக்கை

 

ஓடித் திரிந்தேனே தினம்

உன்பணி பல செய்தேனே

நாடிச் சென்றேனே சில

நல்லதைச் நான் செய்வதற்கு–வாக்கை

 

அதிகம் உழைத்தால் நானும்

களைத்துப் போவேன் என்றே

ஓய்வு கொடுக்க எண்ணி

இங்கு உட்கார வைத்தாயோ–வாக்கை

 

தேகமே சற்று ஓய்ந்துபோகுது

தோலும் கூடவே வாடிப்போகுது

ஊனும் சற்றே தளர்ந்துப் போகுது

உடலும் சற்றே தடுமாறும் போது–வாக்கை

 

உன்சித்தம் இனி எதுவானாலும்

அதன்படியே எனக்கும் ஆகட்டும்

உன்சித்தம் நாளும் அறிந்திடும்

மனம் மட்டும் தொடரட்டும்–வாக்கை

 

2-1-2016, மத்திகிரி, காலை 9.15

 

 

368 புரியாத உன்குணம்

 

கண்ணுக்குத் தெரியாது

காக்குது உன்கரம்

கருத்துக்குப் புரியாது

தாங்குது உன்னறம்

மனதிற்குப் புரியாது

இருக்குது உன்குணம்

மனிதர்கும் விளங்காது

மாறாத உன்மனம்

 

உலகுக்குப் புரியாது

உன்னத உன்னீகை

உனைத்தந்து எனைமீட்ட

ஒப்பிலா மீட்பை

எவர்க்கும் புரியாத

தெய்வீகப் புதிரை

உரைத்திட முயன்றேன்

என்ன பேதமை

 

தினம்தோறும் உடன்வந்து

திருக்கரம் நீட்டி

தொடர்ந்து நடந்து

என்கரம் பற்றி

தடுமாறும் நேரத்தில்

தூக்கி யணைத்து

தாங்கிப் பிடிப்பதை

உணருது பக்தி

 

நல்ல வேளைஇந்த

பக்தியைத் தந்தாய்

நாளும்பணிய ஒரு

புத்தியை அளித்தாய்

உன்னையே வணங்கிட

மனதையும் கொடுத்தாய்

உன்புகழ் பாட

சொற்களைத் தந்தாய்

 

கண்களால் எதற்கு

பார்க்கவும் வேண்டும்

கருத்துக்கு ஏனது

புரியவும் வேண்டும்

மனதும் முழுதாய்

உணராத போது

மனிதர்கு மட்டுமா

உன்குணம் விளங்கும்

 

கபடமே அறியா

குழந்தையைப் போல

களங்கமே இல்லாத

நீர்நிலைப் போல

சிந்தை தன்னை

உன்னறம் கொண்டு

தெளிவாக்க விளங்கும்

உன்குணம் எவர்க்கும்

 

2-1-2016, மத்திகிரி, 1.30 மதியம்

 

 

369 வேதமே ஆதாரம்

 

ஆதாரம் அன்றி ஏதுமே நிற்காது

அவன் அருளன்றி வாழ்வும் நிலைக்காது

ஓயாது அலைமோதும் வாழ்வில் கூட

அவன் வார்த்தையன்றி நங்கூரம் கிடையாது

 

ஓயாது போராடும் உணர்சி யினாலும்

ஒருநொடி நிலைக்காத சிந்தையாலும்

எதிலுமே நிலைக்காத புத்தியினாலும்

இறைவனை அறிவது ஒருக்காலும் முடியாது

 

தன்னையே தந்தான் நாமுய்ய வேண்டி

தன்னாவி தந்தான் நாம்வளர வேண்டி

தன்வேதம் தந்தான் நாம் அறியவேண்டி

தொண்டரைத் தந்தான் நாம்தொழ வேண்டி

 

தன்வரை பக்தியில் திளைதிருந் தாலும்

தனித்து அவனுடன் மகிழ்ந்திருந் தாலும்

பக்தியில் திளைக்க புத்தியில் சிறக்க

அவன் வார்த்தையன்றி வேறேதும் உதவாது

 

அவன்தேவம் தன்னை ஆதார மாக்கி

அவனாவி தன்னை ஆசானு மாக்கி

பக்தருடன் சேர்ந்து சீடரும் ஆகி

பணிந்தே கற்போம் சற்குருவை நாடி

 

3-1-2016, மத்திகிரி, இரவு, 11.30

 

 

370 உன்னருள்

 

எப்படியோ உன் கிருபைதான் தாங்குது

ஏந்தியே நாளும் என்னை சுமக்குது

என்பெலன் தன்னை சார்ந்து வாழாமல்

உன்னிலே நிலைக்க என்னையும் வைக்குது

 

சுமக்க முடியாமல் சுமக்கிறேன் வாழ்வை

சொல்ல முடியாது படுகிறேன் வேதனை

ஆயினும் எதுவுமே எல்லை தாண்டாமல்

அருளினைத் தந்து காப்பதுன் மேன்மை

 

சொல்லாலும் மொழியாலும் கூறவே முடியாது

சிந்தையாலும் கூட புரியவே இயலாது

உள்ளாக இருந்து உணர்வில் அடையும்

உன்கிருபையின் இயல்பை கூறவும் முடியாது

 

அருளுக்கு அருளினை அளித்தவன் அல்லவோ

அன்பர்க்கு எளியனாய் வந்தவன் அல்லவோ

அவனியின் பாவமே சுமந்தவன் அல்லவோ

அந்த உயர்வினை இன்னுமே சொல்லவோ?

 

சொந்தம் எனக்காகி வந்த உன்னருளினை

சொந்தம் எனயாக்கி ஆண்ட உன்மேன்மையை

சிறுசங் கெடுத்து கடல்நீர் இரைத்தாற்போல்

சிலசொல்லில் கூற முயல்வதென் பேதமை

 

ஆயினும் பேதைக்கு அருள்வதுன் குணமாச்சு

அதுபோல் ஞானிக்கு மறைப்பதுன் இயல்பாச்சு

அருளினை அறிகின்ற மதிகொண்டு வாழாத

பேதைக்கு அருள்வது உனக்கும் உயர்வாச்சு

 

 

Bhakti Songs 351-360

351 சிலநொடிகள்

சில நொடிகள் நான் சிந்திக்க வேண்டும்

சித்தத்தை உன்பால் வைத்திட வேண்டும்

தத்துவக் கேள்விகள் தர்க்கங்கள் ஆயிரம்

தலைமீது ஏறி சிந்தையை ஆண்டாலும்–சில நொடிகள்…

 

படித்தவைகளை பலமுறை சிந்தித்து

பலப்பல தர்க்கங்கள் அவற்றிலும் எடுத்து

அலசி அவற்றை ஆராய்ந்து பார்த்து

அவற்றிலேயே மனதை நிறுத்தாமல்–சில நொடிகள்….

 

எத்தனைக் கருத்தை எழுதி வைத்தார்

எண்ணில்லா நூல்களைத் தொகுத்து தந்தார்

கருத்துக்குக் குறைவில்லை மறுப்புக்கு முடிவில்லை

அவற்றை வாதிட்டு அமைதி இழக்காமல்–சில நொடிகள்…

 

முடிவு காண முடியாமல் வாத்திட்டு

முடிக்கத் தெரியாமல் எதையேனும் சொல்லிட்டு

தொடரமுடியாமல் மனதாலே திகைத்திட்டு

அவர்போல் திகைகாமல் உன்பதம் அண்டிட்டு–சில நொடிகள்

 

 

அவர்போல் திகைகாமல் உன்பதம் அண்டிட்டு–சில நொடிகள்

23-11-15 (24-11-15) மத்திகிரி, இரவு 12.30

 

352. நீபோதும்

எதற்கும் நேரமில்லை

எவரிடத்தும் பொறுமையில்லை

என்போன்ற எளியோர்க்கு

அவரிடத்தில் இடமுமில்லை

 

பலர்கூடி வருகின்றார்

பலப்பல பேசுகின்றார்

கூறிய எவற்றிலுமோ

கொள்கையும் காணவில்லை

 

எத்தனையோ எழுதுகின்றார்

எவ்வளவோ வாதிக்கின்றார்

வாதத்தின் இறுதியிலோ

தெளிவும் பிறக்கவில்லை

 

எதற்கோ ஓடுகின்றார்

இலக்கும் தெரியவில்லை

அவருடன் ஓடவோ

அடிமைக்கும் தெம்பில்லை

 

எவரைக்கும் நீபோது,

எனகுன் உறவு போதும்

இவற்றிடை உன்னுடன்

வாழும்நிலை போதும்

 

பக்திஒன்று போதும்

பக்தனுக்குநீ போதும்

நம்மிடைப் பிரிவின்றி

வாழும் நிலைபோதும்

 

30-11-15, காலை 5.45, மத்திகிரி

 

 

353 ஓய்வாக இருப்பேனோ?

அதிகாலை எழுந்திருந்து

அமைதியாய் அமர்ந்திருந்து

ஐயாஉன் திருவடியின்

அருகினில் அண்டிவந்து

ஒன்றையும் சிந்திக்காது

உன்னையே நினைத்திருந்து

ஒருசில நொடிகளேனும்

ஓய்வாக இருப்பேனோ?

 

பலப்பல எண்ணம்கொண்டு

பலவித நோக்கம்கொண்டு

பொழுதெல்லாம் போராடி

பயனற்றுப் போகாமல்

உன்னைமட்டும் நினைக்கவேண்டும்

உன்னுடன்பேச வேண்டும்

நீசொல்லவரும் போது

உடன்நான் கேட்கவேண்டும்

 

உன்னுடன் உறவின்றி

உன்வேத நினைவின்றி

உன்னாவி துணையின்றி

உன்தொண்டர் குழாமின்றி

உலகின் இறைச்சலிலே

என்னையே இழக்காமல்

உன்னுடன் என்னைவைத்து

இரங்கிநீ காக்கவேண்டும்

 

30-11-2015, காலை 6.00, மத்திகிரி

 

 

354 திருந்துகிறோம்

கேட்கிறோம் எங்கள் தேவைக்கு ஏற்ப

கொடுக்கிறாய் நீஉன் குணத்திற்கு ஏற்ப

இரண்டுமே தன் எல்லையை மீறினால்

எவர்தான் தாங்குவார் நீயே சொல்லு?

 

ஏற்ற சமயத்தில் மழைதர வேண்டி

இறங்கி நீயும் கருணை செய்தாய்

ஆயினும் இப்படி அதிகம் பெய்தால்

அழிவதே அன்றி உய்வது எப்படி

 

உன்னைச் சொல்லி குற்றமே இல்லை

உன்மீது எந்தத் தவறுமே இல்லை

இயற்கை தன்போக்கில் செயலைச் செய்ய

ஆதிமுதலே அமைத்ததும் நீதான்

 

இடையில் நாங்கள் எம்கடன் மறந்தோம்

இயற்கையைச் சீண்ட தவறுகள் செய்தோம்

செயற்கையான பல தேவைகள் வேண்டி

எல்லைமீறி இயற்கையை வதைத்தோம்

 

விதைத்ததை நாங்களே அறுவடை செய்கிறோம்

வேடிக்கை மட்டுமே நீயும் பார்க்கிறாய்

தவறை எண்ணி திருந்த வேண்டி

தவறுக்கு ஏற்ற தண்டனை அளிக்கின்றாய்

 

தவறை எண்ணி திருந்த வேண்டி

தயவுசெய்வாய் மீண்டும் ஒருமுறை

திருத்திக் கொண்டால் நாங்களும் உய்வோம்

இல்லாவிட்டால் சேர்ந்தே அழிவோம்.

 

6-12-2015, மதியம் 2.55, மத்திகிரி

 

 

355 உனக்குப் புரியுமோ

 

சொன்னால்தான் உனக்கும் புரியுமோ

சொந்தம் உனக்கென ஆனபின்னாலும்

வருந்தி அழைக்கவும் வேண்டுமோ

இந்த வழக்கம் உனக்குமே பொருந்துமோ?

 

சொல்வதற் கெந்த மொழியும் உண்டு

சொல்லுதற்கு ஏது நேரமுண்டு

மனதின் எண்ணத்தை அறிந்தபின்னே

புரிந்துகொள்ள மொழி எதற்கு?

 

மீட்ட உன்னுடமை ஆனபினால்

கட்டிக் காப்பது யார் பொறுப்பு?

வீணில் தட்டிக் கழிக்கவும் முடியுமோ

இதுதகுமோ உனக்கு, சொல் எனக்கு!

 

கேட்கா தூரத்தில் இருந்தால் தான்

கூவி நானும் அழைக்க வேண்டும்

என்னுள் இருப்பவனை நான்னழைக்க

ஏன்வீணாய்க் கூவ வேண்டும்?

 

இதுவரை இல்லா இவ் வழக்கம்

ஏன்வந்தது சொல் எனக்கும்?

பதிலுக்காக காத்திருப்பேனோ

பக்தி செய்யவும் தாமதிப்பேனோ?

 

எந்த பதிலும் எனக்கும் வேண்டாம்

எந்த வகையிலும் சொல்ல வேண்டாம்

நாம் இருவரும் மெளனமாய் இணையும்போது

என்நிலை உனக்கும் புரியும் அப்போது

 

10-12-15, மத்திகிரி, மதியம் 2.30

 

356 பக்தியில் திளைத்திருப்பேன்

பாவியை மீட்டெடுத்தாய்

பக்தியால் வாழ்வளித்தாய்

பக்தி செய்வதற்கும்

புத்தியை நீயளித்தாய்

 

அன்னையாய் அரவணைத்தாய்

தந்தையாய் நீசுமந்தாய்

தமயனாய் துணையளித்தாய்

தோழனாய் உடன் நடந்தாய்

 

உலகிலே எனைவைத்தாய்

உனைச்சொல்ல உயர்வளித்தாய்

உனைப்பாட வரமளித்தாய்

எனில்வாழ உனையளித்தாய்

 

உனையறிய மறையளித்தாய்

உனைத்தொழ மனமளித்தாய்

உன்மேன்மை பெருகிட

பக்தர் குழாமளித்தாய்

 

புதுப்பாடல் புணைந்திடுவேன்

பொழுதெல்லாம் மகிழ்ந்திடுவேன்

பக்தனாய் வாழ்ந்திடுவேன்

பக்தியில் திளைத்திருப்பேன்.

 

10-12-2015, மத்திகிரி, மதியம் 2.40

 

 

357 கிறுக்காமல் இருக்கணும்

உன்னையே நினைத்திருந்து

உன்னுடன் வாழ்ந்திருந்து

உன்மேன்மை எண்ணியெண்ணி

உள்ளமும் உருகவேண்டும்

 

ஆயிரம் பணியிருக்கு

அதனாலே பொறுப்பிருக்கு

ஆயினும் அவற்றுள்ளே

அமிழாது காக்கவேண்டும்

 

தேவைகள் பல இருக்கு

தினம்தோறும் வாழ்வதற்கு

அவற்றையே தேடித்தேடி

அலையாது காக்கவேண்டும்

 

சிந்தையென்ற ஒன்றிருக்கு

சீர்த்தூக்கிப் பார்ப்பதற்கு

சீர்த்தூக்கிப் பார்ப்பதாலே

சித்தம்குலையா திருக்கவேண்டும்

 

எண்ணங்கள் தொகுத்துவர

வார்த்தைகள் வகுத்துவர

தேவையில்லா கருத்தாக்கம்

செய்யாமல் இருக்கவேண்டும்

 

ஏதோஒன்றை எழுதவேண்டி

எவ்விதக் கருத்துமின்றி

சொற்களை வார்த்தையாக்கி

சொதப்பாமல் இருக்கவேண்டும்

 

உன்னையே நினைத்திருந்து

உன்னடி தொழும்போது

கவிதையாக அதையெழுதி

கிறுக்காமல் இருக்கவேண்டும்

 

11-12-2015, மத்திகிரி, மதியம் 2.30

 

 

358 வேறுவழியில்லை

எதிலும் புதுமையில்லை

எவரிடத்தும் மாற்றமில்லை

என்னைமட்டும் மாறச்சொன்னால்

எப்படி என்னால் ஆகும்?

 

காலம் நேரம் மாறவில்லை

கவலை தேவை குறையவில்லை

மனிதரும் மாறவில்லை, என்

மனம்மட்டும் மாறிடுமா?

 

சூழ்நிலை மாறவில்லை

சொந்தபந்தம் மாறவில்லை

இயற்கையும் மாறவில்லை

என்னால் முடிந்திடுமா?

 

குணங்களும் மாறவில்லை

கொள்கைகூட மாறவில்லை

குற்றம்குறை குறையவில்லை

என்யியல்புமட்டும் மாறிடுமா?

 

நீயும்கூட மாறவில்லை

உன்குணமும் போகவில்லை

அந்தத் துணிவினாலே

அப்படியே நான்வந்தேன்

 

ஏற்றிடுவாய் என்னைநீயும்

வேறுவழி உனக்குமில்லை

ஏனென்றால் என்னைநீயும்

உள்ளபடி வரச்சொன்னாய்.

 

11-12-2015, மத்திகிரி, 2.55

 

 

359 எளிய பக்தி

 

பக்தனாய் வாழ்வது எத்தனை மேன்மை

பக்தியால் சித்தத்தை ஆளலாம் உண்மை

பலவித தத்துவம் உலவிடும் உலகில்

நங்கூரமாய் இருப்பது பக்தியென்ப துண்மை

 

வாழ்ந்த முன்னோர்கள் வரலாறு படித்தால்

வாழ்ந்த ஞானிகள் தத்துவம் பார்த்தால்

உத்தமமான வழி ஒன்றுத் தேடினால்

சத்தியமாய் அது பக்திஒன்றே யாகும்

 

அவரவர் எண்ணத்திற் கேற்ப உரைத்தார்

அதனிடை ஆயிரம் வாதங்கள் வைத்தார்

அவற்றை யெல்லாம் ஆராய்ந்து பார்த்தால்

ஆயிரம் கேள்விகள் மட்டுமே மிஞ்சும்

 

பக்திதரும் பக்குவம் அவையிடம் இல்லை

பகுத்துத் தொகுத்து ஆய்வு தொடர்வதால்

என்றுதான் இவர் முடிவு காண்பார்

என்போன்ற எளியோர்க்கு வழியும் சொல்வார்?

 

முடியாத ஒன்றை முயன்று பார்க்கட்டும்

முறண்பாட்டை களைய முயற்சி செய்யட்டும்

இதனிடை எளிய பக்தனாய் வாழ்ந்து

என்போன்ற எளியோர் முக்தி அடையட்டும்

 

12-12-2015, மதியம் 2.45 மத்திகிரி

 

 

360 மறக்க வேண்டுகிறேன்

கையெடுத்துக் கும்பிடுகிறேன்

கெஞ்சி ஒன்று வேண்டுகிறேன்

என்னைப் பற்றி எவருமே

ஏதுஒன்றும் சொல்லவேண்டாம்

 

காலமென்னும் ஓட்டத்திலே

கால்கடுக்க ஓடுகின்றேன்

இறுதியாக எப்படியோ

கரைநானும் சேர்வதற்கே

 

மனிதனாக பிறந்தபோதும்

மனிதனாக வாழ்வில்லை

மனதுஒன்று இருந்தும்கூட

முழுமையாகப் புரியவில்லை

 

புத்திபலதை மறுக்கிறது

பக்திசிலதை ஏற்கிறது

புத்திபக்தி இரண்டினிடையே

சித்தம் ஊசலாடிடுது

 

புத்தியிலும் வளரவில்லை

பக்தியிலும் சிறக்கவில்லை

எப்படியோ இறைவன்கருணை

ஏந்திஎன்னைக் காக்கிறது

 

அந்தக்கருணை யாறறிவார்

அவர்சொந்தம் ஆகாவிட்டால்

அடையாஒன்றை அறிதவர்போல்

வீண்வாதம் செய்கின்றார்

 

வந்தபோதுஓரு அடையாளம்

வையம்தானே தருகிறது

போகும்போது அதனுடனே

போகத்தானே சொல்கிறது

 

இடையிலெதனை மாற்றிடினும்

எந்தவேடம் போட்டிடினும்

இறுதியாகஏதோ ஒன்றை

ஏற்கவேண்டி இருக்கிறது

 

என்னவாக அதுஇருந்தும்

எவர் அதைத்தந்தும்

“பக்தன்” என்ற ஒன்றுமட்டும்

பணிந்துநானும் கேட்கின்றேன்

 

பாவியாக வாழ்ந்திருந்தேன்

“பக்தனாக்கி” ஆட்கொண்டான்

அந்தஓரு அடையாளம்

அடிமைக்கு என்றும்போதும்

 

எனவேஒன்றை வேண்டுகிறேன்

என்னைமறக்க கெஞ்சுகிறேன்

அவனைப்பெருக்கி என்னைச்சிறுக்கி

அவனுள்புதைக்க விரும்புகிறேன்

 

புதைத்ததை தோண்டியெடுத்து

கூறுபோட்டு பார்ப்பீரோ

கொடுமையான அந்தசெயலை

செய்யவேண்டாம் கெஞ்சுகிறேன்.

 

13-12-2015, மத்திகிரி, 2.00