Monthly Archives: October 2015

Tamil Song 132

என்னவோ பரபரப்பு

 

அவருக்கு ஆயிரம் வேளைகள்

அவரச உலகினில் அனுதினம் பாடுகள்

ஆர அமர்ந்து ஆராய்ந்து பார்க்க

இல்லை எவர்க்கும் பொறுமை காக்க

 

எழுந்தது முதலே என்னவோ பரபரப்பு

எதையோத் தேடி எத்தனைத் தவிப்பு

அதையே அடைய ஓடிடும் போது

உள்ளதையும் இழந்தால் யாரினிப் பொறுப்பு?

 

எட்டா தற்காக எத்தனை ஏக்கம்

உள்ளதைக் காக்க இல்லையே ஆக்கம்

வருவதை நினைந்து உள்ளதை இழந்து

வாடிடும் மனதிலோ எத்தனைத் துக்கம்

 

தான்மட்டும் தனியே தவிக்கவும் இயலாமல்

ஆயினும் பிறரை சேர்க்கவும் முடியாமல்

தானும் துய்க்காமல் பிறர்க்கும் அளிக்காமல்

வைக்கோலில் படுத்த நாய்போலே ஆனோம்

 

என்னவோ எனக்கு பட்டதைத் சொன்னேன்

ஏனென்றால் நானும் அவருடன் இருந்தேன்

இனிமேல் என்னால் ஓடமுடியாமல்

என்னுள்ளே புலம்பி எழுதியே வைத்தேன்

 

21-10-2015, மத்திகிரி, மதியம் 2.55

Song 12 – I Come To Your Feet

This is also set in Tamil pan isai (music). I started to write this in September 1985 and completed it on 5-4-1986 at Lucknow.

இப்பாடலும் தமிழ்ப் பண் இசையையே சார்ந்தது. இதை 1985-செப்டம்பரில் எழுத ஆரம்பித்து, 05-04-1986-ல் லக்னோவில் முடித்தேன்.

 

  1. நிர் மூடன்

 

நீசனும் நிர்மூடனுமாய்

நின்திருப்பாதம் வந்தேன்

நேயமாய் என்னையாண்டு

நீக்கியே பாவம் தன்னை

ஆவியின் அச்சாரம் ஈந்து

அன்புடன் என்னைக்காத்து

நேயமாய் நின்னைப்போற்றி

நித்தமும் வாழ்வேண்டி

காத்திடும் என்னை நீயே

கருணையே பொற்பாதம் தஞ்சம் Continue reading

Song 11 – Hail

I like Carnatic (South Indian classical) music, but my favourite form of music is Tamil Pan Isai (traditional Tamil music). The gentle form of it raises our spiritual awakening and helps us feel the presence of God. I started to write this song in September 1985 and completed in December 1985.

 

11. போற்றி போற்றி

 

ஒலியே வடிவெடுத்து

ஓரருள் வார்த்தையாகி

உலகினை உய்விக்கவே

உருவெடுத்து வந்தோய்–போற்றி

 

ஆதியில் தேவனாகி

அவரரும் புதல்வனாகி

அனைத்தையும் படைத்தெடுத்து

அவனியில் வந்தோய்–போற்றி Continue reading

Tamil Song 131

131 மின்னலே

 

வலியும் வேதனையும் வந்தால்தான் புரியும்

வாழ்வின் போராட்டம் வாழ்ந்தால்தான் தெரியும்

பிறரின் பாரங்கள் நமக்கும் புரியாது

புரிந்து கொண்டாலும் எவர்க்கும் உதவாது

 

கருஉருவாகும் போராட்டம் தன்னில்

கருப்பையில் வளரும் போராடி தன்னில்

வெளிவரும் உலகத்தில் வேதனையின் எல்லையில்

நாள்தோறும் வளரும் துன்பத்தின் துணையில்

 

ஆயினும் இதுமட்டும் வாழ்வுமே ஆகாது

இன்ப துன்பம் மட்டும் இறுதியும் ஆகாது

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்

என்பதே வாழ்வின் நீதியும் ஆனது

 

வருவது வரட்டும் ஏன்வீணில் வருந்தனும்

வாழ்ந்தே பார்க்கணும் ஏன்வீணில் கலங்கனும்

குறைவினில் முயன்று நிறைவினில் மகிழ்ந்து

இறுதிவரையில் நாமும் வாழ்ந்தே முடிக்கனும்

 

வேதனை இல்லாத இன்பமே இல்லை

வலிகலே இல்லாத செயல்களும் இல்லை

இவற்றின் இடையே மின்னலைப் போல

தோன்றி மறைவதே இன்பத்தின் நிலை.

 

16-10-2015, மத்திகிரி, 2.45pm.

 

English Translation

131 Mere lightning

 

One can understand pain and suffering only if she experiences it

The struggle in life will be realized when one actually lives

We cannot understand another’s burden

Even if we understand that won’t help anyone.

 

An embryo is formed after an encounter

It will grow in the womb by struggling with itself

It will come out going to the end of pain (both for the mother and the baby)

And it will grow in life with the company of suffering alone.

 

Yet this alone is not life

Pain and pleasure alone is not the end of life

Pleasure in pain and pain in pleasure

Become the reality of life

 

Come what may, why should we feel sorrow?

We have to live and why should we be troubled

Endeavouring in shortcomings and rejoicing in success

We have to complete this life by living it totally

 

There is no pleasure without any pain

There are no efforts without any toil (with pain)

Amidst this like a lightning

Appearing and disappearing is the truth about pleasure/joy

 

16-10-2015, Mathigiri, 2.45 pm.

 

Comments

In the night of October 14th, 2015, I suffered a lot due to my back pain. I could not even lie down on my bed. If I lay down the pain increased. It was after midnight and I could not call anyone to help. I don’t have any pain killers, though my mother has one I am not sure whether I can use it for me or not. So from 11.30 pm to 2.30 am I was sitting on the chair keeping pillows behind me. But as the pain didn’t come down, I could not sleep. When the pain increased even in the sitting position, I stood and slightly bent my body by keeping my hands on the table. In this way I spent my time with much pain. Then I woke up my mother and asked for her pain killer. She was much panicked on seeing my condition and immediately applied the ointment which she uses for her pain. Then I managed to sleep by sitting on the chair from 3.00 am to 3.30 am. After that, I decided to lie down on my bed again. But when I lay down the pain again aggravated. So bending my body like a ‘Z’, I slept with less pain till 5.00 am. But in my sleep when I turned on my back, due to shocking pain, again I got up and could not sleep. After taking my meal and another pain killer I managed to sleep on the 15th morning from 11.30am to 1.00 pm.

So when I was reflecting that experience this afternoon, I realized that most of the time PAIN and SUFFERING are the only reality in life and all the joy and pleasure that one enjoys is like a lightning that flashes for a fraction of second. But that joy and pleasure alone motivates us to pursue our life amidst the pain and suffering. The hope of enjoying some joy and pleasure alone is the driving force behind human life. For every fleeting pleasure and joy we human have to pay a heavy cost.

I have to find the reference from Manikkavasagar, who describes all the pain and suffering that we undergo from the day the fetus formed in the womb, growth, delivery, etc. Buddha has to flee from his pleasure seeking the solution to it. But the driving force of seeking pleasure and finding joy (anand, bliss) by all — including a sannyasi — who seeks eternal bliss (anand), undermines the suffering and pain a lot.

 

18-10-15