Monthly Archives: March 2016

Bhakti Song 401 – மாற்ற முடியாது

சந்தேகம் கொண்டவர்

சஞ்சலம் கொள்ளுவார்

சட்டெனப் பிறர்மேல்

கோபமும் கொள்ளுவார்

 

இருமனம் கொண்டவர்

நிலையாக நில்லார்

எல்லோர் மீதும்

எரிச்சலும் கொள்ளுவார் Continue reading

Tamil Song 154

எவருக்கும் புரியாது

 

வலியும் வேதனையும் வந்தால்தான் புரியும்

வாழ்வின் பாரமும் சுமந்தால்தான் தெரியும்

நாம்படும் துயரம் பிறர்க்கு புரியாது

புரிய வைக்க நம்மாலும் முடியாது

 

எத்தனை மனிதர் துணைக்கிருந் தாலும்

எவ்விதம் தாங்கி சுமந்திருந் தாலும்

நம்போராட்டம் நமக்குத்தான் புரியும்

நாமதைக் கூற (பல) கேள்விதான் பிறக்கும் Continue reading

Bhakti Song 400 – எதைக் கூற?

கொஞ்சமோ எதைக் கூற

எந்த குறையைச் சொல்லி வாட

அஞ்சி அஞ்சி வந்து அபயமென்றிட

ஆறுதலாய் ஒரு வார்த்தையும் பெற–கொஞ்சமோ

 

கஞ்சத்தனமின்றி நன்மைகள் செய்தாய்

கலங்கும் நேரத்தில் ஆறுதல் சொன்னாய்

மிஞ்சிய அன்பால் என்னையும் வென்றாய்

மீட்டு அருளிட உன்னையும் தந்தாய்–கொஞ்சமோ Continue reading

Bhakti Songs 391-399

391 அருளுண்டு

 

அருளுண்டு மருளில்லை மனமே

அண்டிடும் அடியார்க்கு அருள்வான் தினமே–அருளுண்டு…

 

குறைகளைக் கண்டு குழப்பமும் கொண்டு

குணமின்றி வாழ்விலே கலக்கமும் கொண்டு

வெருண்டு, மருண்டு, அரண்டு, உருண்டு

விடைதேடி அவனிடம் சென்றிடும் போது–அருளுண்டு…

 

அஞ்சிடாதே அவனே காப்பான், நம்மை

ஆதரித்து கரையும் சேர்ப்பான், இனி

கலங்கிக், கதறி, பயந்து, வெதும்பி

காவலைத் தேடியே சென்றிடும் போது–அருளுண்டு… Continue reading

Lured by Hope Book Review

Though every biography is only an interpretation, the way the author interprets the character will not only present a scholarly work but also demonstrate the author’s skill to unfold a drama when you read it. This is what I felt when I read this wonderful biography of Michael Madhusudan Dutt, Ghulam Murshid, translated from Bengali by Gopa Majumdar, Lured by Hope: A Biography of Michael Madhusudan Dutt, New Delhi, Oxford, 2003.

What is more interesting is that the way it is translated by Ms. Gopa Majumdar makes the reader feel like it is not a translation. It forces the reader to identify with the character of the book. I felt this as I read the book and found it difficult to put down. If one has the time and interest, it can be read entirely in one stretch.

Like the author, I sympathize and get irritated with Madhu in how his romantic view of life ended in such a great tragedy. Particularly the way he died and was buried will move one’s heart as such a great poet of our country deserves a more noble death and a more dignified burial.1 But he reminds us of the insensibility of life; he ended up paying a heavy price for his romantic hope of life. It is true what the author says about him that, “His was such an extraordinary character that, during his lifetime, some hated him, some loved him, some even pitied him—but one could ignore or dismiss him.”(2) Continue reading

Tamil Song 153

அவர் அவர் பங்கு

 

ஆயிரம் கவலைகள்

அனுதினம் பாடுகள்

அணிவகுத்து வந்தால்

வாழ்வதும் எவ்விதம்

 

உடல்தேவை ஒருபுறம்

உளத்தேவை மறுபுறம்

இவற்றின் இடையே

பிறர்தேவை குறுக்கிடும் Continue reading

Tamil Song 152

கண்ணீர் வடிப்பார்

 

காரணம் புரியாது கண்ணீர் விடுகிறார்

கருத்துக்கும் புரியாது கலக்கம் அடைகிறார்

மனதுமே விரும்பாது வேதனைப் படுகிறார்

மனித வாழ்வின் அர்த்தமும் தேடுறார்

 

வந்த காரணம் அவர்க்கும் புரியாது

போகும் நேரமும் அவர்க்கும் தெரியாது

இடையில் வாழ்ந்திடும் வாழ்வும் கூட

இப்படி யானால் எவரென்ன செய்வது?

 

நல்லதை நாடித்தான் நன்மையும் செய்யுறார்

நாலுபேர் வாழவே முடிந்ததை புரிகிறார்

ஆயினும் இடையினில் சுயமும் குறுக்கிட

அமைத் தன்னை முதலில் இழக்கிறார்

 

தன்சுகம் தேடுதல் குற்றமே இல்லை

தன்தேவைக் குழைபதில் தவறேதும் இல்லை

அதற்காய் பிறர்நலம் பறிக்க முயன்றால்

அவரே இழப்பார் ஏனிது புரியலை

 

இதை உணராது பிறர்மீது பழிகூறி

இடையினில் தன்செயலை நியாயப் படுத்தி

எப்படியேனும் தப்பிக்க முயன்றால்

இப்படித்தான் நிதமும் கண்ணீர் வடிப்பார்.

 

21-3-16, மத்திகிரி, காலை, 9.45

Tamil Song 151

இன்னிசை

 

இன்னிசை கேட்டால்

இதயமும் உருகாதா

இயற்கையும் இணைந்தால்

இனிமையும் பிறக்காதா

 

மெல்லிய பனிதூவ

யாழிசை மெருகேற்ற

புள்ளினம் இசைகூட்ட

மேனியும் சிலிர்க்காதா

 

அழகிய இல்லாளும்

அமைதியாய்ப் பணிசெய்ய

சிறுசிறு நிகழ்வுமே

சிந்தையை நிரப்பாதா

 

இரைதேடும் பறவைக்கு

தன்கையால் பரிமாற

பிரிவின்றி அவன்படைப்பு

போற்றி மகிழாதா

 

மாண்புடன் இல்லத்தில்

இசையெனும் விருந்தோம்ப

இயற்கையைக் கொண்டாடி

வாழட்டும் துணையோடு

 

11-3-16. Mathigiri, 10.55 am.