Monthly Archives: April 2016

Bhakti Song 411 – ஒரு இரகசியம்

ஆஹா இதுஒரு அதிசயம்

எவரும் அறியா இரகசியம்

என்னுள்ளே வந்து என்னுடன்வாழும்

இது உன்னதப் பரவசம்

 

பண் அமைத்துப் பாடினால்

பதம் அமைத்து ஆடுறான்

பக்தத்திலே நான் ஓடினால்

பாங்குடன் என்னைச் சேர்க்கிறான் Continue reading

Bhakti Song 410 – எது உண்மை

தத்துவம் பேசலாம்

தர்க்கமும் செய்யலாம்

தன்னுள்ளே உண்மையை

அறியா வரையில்

 

“உண்மை” எதுவென

உணர்ந்தவர் எவருண்டு

உண்மையில் “உண்மை”

எதுவென உணராமல் Continue reading

Bhakti Song 409 – வழிபிறந்தது

முடிவில்லா வாழ்விற்கு வழியும் பிறந்தது

முக்திக்குப் போகும் வாசலும் திறந்தது

முதுமையோ இளமையோ எதுவானால் என்ன

முக்தேசன் அருளுக்கும் ஈடாவ தென்ன

 

பிறக்குமுன் கருவிலே அழிந்தது கோடியே

பிறந்தபின் பிஞ்சிலே உதிர்ந்தது கோடியே

இளமையில் வாழ்வினை இழந்தவர் கோடியே

முழுமையாய் முதுமையில் சென்றவர் கோடியே Continue reading

Bhakti Song 408 – வருவது வரட்டும்

வருவது வரட்டும்

நானென்ன செய்யட்டும்

வந்தாலும் துணையாக

அவனுமே இருக்கானே

 

ஒவ்வொரு நொடியும்

என்னுடன் இருக்கிறான்

ஓய்வு ஒழிவின்றி

என்னையும் காக்கிறான் Continue reading

Tamil Song 158

வென்றவர் இல்லை

 

நொடிகள் தோறும் மாறும் மனதில்

நிலையில் லாமல் சிந்தனை தோன்ற

நினைக்கும் முன்னே எண்ணமும் மாறி

நிலையில் லாமல் ஆக்குது செயலை

 

நேற்று சொன்னது இன்று போச்சு

நித்தம் புதுப்புது வழக்கு மாச்சு

நரம்பில் லாத நாக்கும் கூட

நாளும் மாறுது வார்த்தையில் கூட Continue reading

Bhakti Song 407 – பயணம்

காலமென்னும் ஓட்டத்திலே

கலங்கியே தவித்தாலும்

காரணம் புரியாது

மருங்கியே திகைத்தாலும்

 

காலமெனும் நதியிலே

துடுப்பில்லா படகுபோல்

வாழ்வும் போகுது

வழியேதும் காணாமல் Continue reading

Tamil Song 157

சுமை

 

ஏனோ இந்த பிறவி எடுத்தோம்

எத்தனை துன்பம் இதனுள் துய்த்தோம்

நாமே கேட்டு வந்திட வில்லை

நாம் சொல்லும்போது எடுப்பதுமில்லை

 

நாளொருமேனி பொழுதொரு வண்ணம்

நன்மைகள் கண்டு வளர்ந்த போதும்

இடையிடை தோன்றும் இன்னல்கள் வந்து

எண்ணிலாத் துன்பம் தந்துமே வருத்தும் Continue reading

Bhakti Song 406 – முக்திவழி

வீதியில் போதகம் பண்ணினானே

விருந்துக்கும் கூட அழைத்தானே

ஆயினும் உம்மை அறியேனே

என்று கூறினால் என்னவாகும்?

 

முந்தினோர் புறம்பே காத்துநிற்க

பிந்தினோர் பந்தியில் புசிப்பாரே

நான்கு திக்கினும் வந்திருப்பார்

நாதனுடன் உண்டு வாழ்ந்திருப்பார் Continue reading

Bhakti Song 405 – வந்துதான் பாரு

வந்துதான் நீயுமே பாரு–அவன்

வாசலில் நின்று தட்டுறான் கேளு

சொந்தத் தன்மை தானும் துறந்திட்டு

சொந்தமாய் நமக்கு ஆகியே வந்தானை–வந்து…

 

தேடித்தான் நீயும் போக வேண்டாம்

தேசம் எங்கும் தேட வேண்டாம்

வேதம் ஓதி வேள்விகள் செய்து

வேண்டுதல் பலநீ செய்யவும் வேண்டாம்–வந்து…

Continue reading

Tamil Song 156

ஒரு ஓட்டம்

 

தேடித்தான் பார்க்கிறார் தெரிந்ததை சொல்கிறார்

தேடியது கிடைக்காமல் தெரிந்ததும் புரியாமல்

தொடர்ந்து இன்னுமே தொய்வின்றித் தொடர்கிறார்

தோல்வியை ஏற்காது தொடர்ந்தே ஓடுறார்

 

நாடியே ஓடுறார் நாளெல்லாம் தேடுறார்

நாலுபேர் சொல்லிடும் நல்லதைக் கேட்கிறார்

நல்லதைக் கேட்கினும் நன்மையை காண்கிலார்

நாலுபேர் சொல்லிட மீண்டுமே கேட்கிறார் Continue reading