Monthly Archives: May 2016

Tamil Song 172 – போராட்டம்

சுமக்கச் சொன்னதை

சுமந்துதான் ஆகனும்

சோதனை தன்னை

வென்றுதான் தீரனும்

எவரைச் சொல்லி

பயனேதும் இல்லை

இடிந்து கிடந்தால்

மீள்வதும் இல்லை Continue reading

Cross Stitch Meditation

I often say that with one mistake in life, we have to invest our whole life to correct it. This is not possible when we make mistakes in cross stitch. The border is particularly challenging. One initial mistake in calculation will end up with the border not connecting at the other end.

You can see it in this cross stitch; the border does not connect and the gap between the central rose is not even.

 

So I have a lesson to learn even through art.

20160516_171343

 

And some others:

20160429_104402

 

 

 

20160424_194945

Tamil Song 171 – பயனில்லை

அடைந்தபின் அறிந்தேன்

பயனில்லை என்று

ஆயினும் தொடர்ந்தேன்

உணர்ந்தேதான் நன்று

எடுத்துச் சொன்னாலும்

என்னக்கேற வில்லை

எவர்தடுத் தாலும்

நான்விட வில்லை

Continue reading

Tamil Song 170 – பதிலென்ன

ஓடாதே என் மனமே நில்லு

என்கேள்விகுப் பதிலும் நீ சொல்லு

ஓயாமல் போராடி என்னதான் கண்டாய்

இதுவரை சாதித்து எதனைநீ வென்றாய்-ஓடாதே

 

சும்மா இருந்தாலோ சோம்பேறி என்கிறாய்

சுறுசுறுபு கொண்டாலோ பறக்காதே என்கின்றாய்

வாய்மூடி இருந்தாலோ “குசும்பன்” என்கின்றாய்

வாயைத் திறந்தாலோ “வம்பன்” என்கின்றாய் Continue reading

Tamil Song 169 – முரண்பாடு

இது என்ன முரண்பாடு

என்னுள்ளே நான் காணும்

வீணான பெரும் பாடு

 

ஒருபுறம் கசப்பு மறுபுறம் இனிப்பு

ஒன்றிலே வெறுப்பு மற்றதில் விருப்பு

இதனிடை நான்கொண்ட வீணான தவிப்பு

எனக்கே புரியாத என்னென்ன நினைப்பு–இது என்ன Continue reading

Bhakti Song 434 – புதைக்க வேண்டும்

அந்த எல்லைக்குச் செல்ல வேண்டும்

அதனுள் நானும் ஒடுங்க வேண்டும்

“துரியமும்” கடந்த அந்த தூரமதை

துரிதமாய்ச் சென்று அடைய வேண்டும்

 

சொல்லுக்கும் மொழிக்கும் முடிவு கட்டி

எண்ணத்தை அதனுடன் மூட்டைக் கட்டி

சிந்தையை அவற்றுடன் சிறையும் வைத்து

சோம்பர் நிலையை அடைய வேண்டும் Continue reading

Bhakti Song 433 – புரிந்தது

புரியாதது புரிந்தது

புரியாதெனப் புரிந்தது

புரிந்ததை கூறிடவே

தெரியா திருந்தது

 

புரியாதெனப் புரிந்தாலே

புரியவும் தொடங்கலாம்

புரியத் தொடங்கியபின்

புரியாதெனப் புரியலாம் Continue reading

Bhakti Song 432 – சுமை

என்னநான் சொல்ல

ஏதுதான் செய்ய

என்னுள்ளே தவிக்கிறேன்

வேறென்ன சொல்ல

 

பொறுப்பென வந்தது

பாரமாய்ப் போனது

சுமக்க முடியாத

நிலையும் வந்தது Continue reading

Bhakti Song 431 – ஓய்வு

உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு வேண்டும்

ஓயாமல் உழைத்தாலே உளுத்துப் போகும்

ஆறுநாள் படைத்தவன் அடுத்தநாள் ஓய்ந்தானே

அதுபோல் நம்மையும் இருக்கத்தான் சொன்னானே

 

உறக்கம் போல் உடலுக்கு ஓய்வுமேயில்லை

உறக்கத்தை இழந்தாலே எல்லாமே தொல்லை

உள்ளாக அமைதியும் இல்லா விட்டால்

உறங்கியும் எவ்விதப் பயனுமே இல்லை Continue reading

Tamil Song 168 – துறவு

துணிவு வேண்டும் துறக்க

சொந்த பந்தம் வெறுக்க

சுயத்தைக் கூட அறுக்க

தன்னைத் தானே மறுக்க

 

துறவின் உண்மைத் தன்மை

சொல்லில் வடித்த தில்லை

துறந்து சென்ற எவரும்

“தன்” துறவைச் சொன்னதில்லை Continue reading