Monthly Archives: June 2016

Tamil Song 193 – மானுடம் இறந்தது

 

இந்தக் கொடுமையை என்ன சொல்ல

எவரிடம் சென்று நானும் சொல்ல

கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரமின்றி

சென்ற மாந்தரை என்ன சொல்ல

 

யாருக்கோ நேர்ந்தது என்று எண்ணி

எவரும் குரலும் எழுப்பவில்லை

எத்தனையோ பேர் நின்றிருந்தும்

யாருமே அக்கறை காட்டவில்லை Continue reading

Tamil Song 192 – ஆண்டிமடம்

There is a Tamil proverb: காரியம் பெரிசா வீரியம் பெரிசா (which is important get the work done or shouting to make others to do it). Though Vijay is relatively a good and obedient boy, sometime I have to shout at him to get some work done, which he will try to doge. As usual after shouting about a work which he is dogging, I said myself: காரியம் பெரிசா வீரியம் பெரிசா and wrote this poem.

 

ஆண்டி கட்டின மடத்திலே

ஆருக்கும் சோறு கிடைக்காது

வேண்டி எத்தனை கேட்டாலும்

ஒருகவளம் கூடக் கிடைக்காது

 

பிள்ளைகள் கூடி வீடுகட்டி

சொப்பு வைத்தே ஆடினாலும்

அவர்கள் செய்த கூட்டாஞ்சோறு

ஆருக்கேனும் உதவிடுமோ Continue reading

Tamil Song 191 – காரியத்தில் கண்வேண்டும்

Often I think that I need not give any reason or explain why I write poems or some articles in the name of ‘brain storm’. As I often say, I write only for my need. Unless I put down my thoughts in words, they will continue to echo in my mind not allowing me to do further thinking. That is the main reason for me to write anything. Of course there will be inconsistencies and contradiction if anyone try to analyse them with any overall theme. But I often write according to the need that comes in a particular situation. So contradiction and inconsistence will be there when others try to compare and contrast with other poems or articles written in the past. Above all, as I too evolve according to the age and understanding, that too is reflected in my poems and writings. But the question that best is: do I need to explain all of them, particularly the inconsistencies and contradiction? I feel ‘no’.   So I need not give any ‘self-explanation’ to any of my writings and if allow others to leave me ‘alone’ they are not going to incur any loss.

 

எதற்கு இந்த வீராப்பு

ஏன் வீணே பொல்லாப்பு

வாயை மூடி இருந்துவிட்டால்

வம்பு தும்பு கிடையாது

 

சத்தம் போட்டுப் பேசிவிட்டால்

சொல்வது நீதி ஆகிடுமா

வீணிலே வாய்த் திறந்துவிட்டால்

வாதித்து வென்றிட முடியுமா Continue reading

Bhakti Song 456 – எதுமேன்மை

ஊருக்கு காட்ட ஏதுமில்லை

உலகிற்கு சொல்ல ஒன்றுமில்லை

சட்டியில் ஏதும் இல்லாமலே

அகப்பையில் மட்டும் என்னவரும்

 

பொய்யானத் தாழ்மை இல்லையிது

புரிந்து சொன்ன உண்மையிது

ஏற்பது-மறுப்பது பிறர்விருப்பம்

இதற்குமேல் என்ன சொல்லட்டும்

Continue reading

Tamil Song 190 – பிறர்கு நட்டமில்லை

As I was watching a T. V. Debate (Neeya Naana, Vijay T.V. 9.00 to 10.30 pm, 26-6-16) on the challenges for the youths to enter into film industry. Both side argued their point vehemently. Those who warned said that while challenges are many, opportunity is less. Even those who succeeded has to toil a lot to maintain that success.

While I was listening, in the commercial break I wrote this song. For me those who defeated in any race need not be discouraged, as they really gave a stuff fight and competition to the one who finally own. In fact, for one person to win, so many other toiled. Then they also contributed to her success, which means they too partake in that success. Once we understand this, in any competition in life where we need to face challenge from others, we can feel encouraged that finally we defeated the very concept of ‘defeat’ itself. Of course in real life ‘defeat’ is also a reality, but if our defeat contribute directly or indirectly for others to get success we should feel comfort in that than thinking about our personal defeat.

 

தன்விளக்கம்தரத் தேவையென்ன

தரணி அறியத் தேவையென்ன

என்தேவைக்காக வாழும்போது

இதற்கு விளக்கம் தேனையென்ன

 

ஊருக்குள்ளே நாம் வாழ்தாலும்

உற்றம்-சுற்றம் இருந்தாலும்

நமக்கு என்று எண்ணம் உண்டு

நமக்கு என்று தேவை உண்டு

Continue reading

Tamil Song 189 – தோல்வியே தோற்கும்

Negative thoughts are more dangerous than lustful thoughts. Any lustful thought which will remain few seconds and minutes only will affect us personally. But negative thoughts will spoil our relationship with others and continue to bother us for long time. When we get irritated by any small act or word by others, we will continue to think why they are wrong and how we are right. Then all the negative thoughts will creep up in our mind and we will began to count all the wrongs in others. This will remain long time when we think, talk or discuss our problem with others. Even in prayer, if at all we pray for them, then we will began to argue and reason with the Lord, even began to accuse them in the name of prayer. I am not sure about others experience. But I went through this several times in life. It takes several days, weeks and even months to overcome this and mend my relationship with others. The struggle in this area is too bloody and we need to fight this battle till the end of our life.

 

தோல்வி அடைந்தோர் ஏராளம்

துன்பப் பட்டோர் மிகவதிகம்

வென்றவர் தம்மை கணக்கெடுதால்

விரல்விட்டே எண்ணிடலாம்

 

பந்தயம் தன்னை வெல்வதற்கே

பலரும் கூட ஓடினாலும்

இறுதியில் பரிசைப் பெறுவதுமே

அவரில் வென்றவர் மட்டுமன்றோ

Continue reading

Tamil Song 188 – எண்ணத்தை வெல்லனும்

I constantly have some longing in my heart and mind to go to that stage where I can remain quite and calm—to remain STILL. But what is that stage or nature, I cannot understand. Because even to think about it becomes an act in my mind. I long some kind of ‘sunyata’ which I cannot even experience to express. Of course this is not possible. But this longing is there always there in my life.

 

வேண்டாம் போதும் விட்டுவிடு

வேண்டாத வீணான எண்ணங்களை

விடுதலை நீயும் பெற்றுவிடு

உன்னிடமிருந்தே நீ இப்போது

 

காலில் விலங்கினைப் பூட்டிக்கொண்டால்

காப்பாற்ற யாரேனும் வந்திடலாம்

கண்தவறி குழியில் விழுந்துவிட்டால்

கைநீட்டி எவரேனும் ஏற்றிடலாம்

Continue reading

Tamil Song 187 – ஒரு ஏக்கம்

Several times I feel that knowing about my nature becomes a snare for me. If I don’t understand me then it is good. But the way I think that I know who am I becomes more dangerous. It is better for me not to know about my own nature. Generally there is a formula about this: we know about us; we and others know about us; we don’t know but others know about us. Both we and others do not know about us. But this formula rarely works in real life. The best way to know about us to observe our life and others and to learn from the mistakes to correct it. At the same time the real challenge is that most of the time we don’t know that the mistakes are mistakes and repeat the same in life. Even this analyse is not correct and may not help me further.

 

அதிகம் பேசியே ஆவதென்ன

அமைதியும் உள்ளுக்குள் இல்லாமலே

வாய்மூடி மெளனியாய் இருந்துமென்ன

ஆன்மாவில் ஆனந்தம் கொள்ளாமலே

 

சிந்தித்து சிந்தித்து ஓய்ந்து போனேன்

செயல்பல செய்துமே மாய்ந்துபோனேன்

சும்மா இருந்தாலும் தேய்ந்து போவேன்

சொல்லிப் பயனில்லை நானறிவேன் Continue reading

Bhakti Song 455 – சொல்லமாட்டேன்

யாரோ துரத்திட ஓடுகிறேன்-ஆனால்

எவரென்று எனக்கும் தெரியவில்லை

சட்டென்று திரும்பி நான் பார்க்கும்போது

என்பின்னாக யாரையும் காணவில்லை

 

ஆனாலும் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டு

யாரென்று அறிந்திடத் துணிவும் இல்லை

துணைக்கு ஆட்களைத் தேடினாலும்

என்னுடன் வந்திட எவரும் இல்லை

Continue reading

Bhakti Song 454 – இணையில்லை

திருவடி அன்றி புகலிடமேது

தெய்வமே அன்றி துணைநமக்கேது

கிருபை இன்றி காவலும் ஏது

கருணை யன்றி ஆறுதல் ஏது

 

கண்ணுக்குத் தெரியாது காக்கும் அவன்கரம்

கருத்துக்கும் எட்டாது தாங்கும் அவனறம்

மனதிற்கும் விளங்காது மாறாத அவன்குணம்

அறிவுமே அறியாது அவன்கொண்ட இரக்கம்

Continue reading