Monthly Archives: July 2016

Tamil Song 203 – ஊதிக் கெடுக்காதே

தேவை இல்லாமல் ஆராய்ந்து பார்க்காதே

தெளிவான விடைதேடி யோசித்தும் பார்க்காதே

ஆராய ஆராய அதிகம் குழம்புவாய்

தெளிவான விடைபெற ஓய்ந்துமே போவாய்

 

வந்ததை வந்தபடி ஏற்றிடப் பழகு

வீணான எதிர்பார்ப்பை நீக்கிடப் பழகு

வருவது என்னவோ வந்துதான் தீரும்

வந்ததை மறுத்தால் வேதனைப் பெறுகும் Continue reading

Tamil Song 202 – மனிதம் இழந்தோம்

இழந்தவர் அன்றோ இழப்பை அறிவார்

இழப்பின் வலியை வேறெவர் புரிவார்

அவரவர்க் கென்று இழப்பு இருந்தும்

அடுத்தவர் இழப்பை மற்றவர் புரியார்

 

பொன் பொருள் இழந்தால் சேர்த்துவிடலாம்

பெயர்-புகழ் இழந்தால் மீட்டும் விடலாம்

மனிதரை இழந்தால் மீண்டும் பெறலாம்

மனதையே இழந்தால் யாரென்ன செய்யலாம் Continue reading

Bhakti Song 471 – இதுபோதும்

வீணானப் போட்டி இனியும் வேண்டாம்

என்னை விரட்டிநீ வரவும் வேண்டாம்

எந்தப் போட்டிக்கும் வரவும் இல்லை

ஏனென்றால் எனக்கு விருப்பமும் இல்லை

 

ஓடத்தான் சொல்கிறாய் என்னையும் உன்னோடு

ஓடித்தான் பார்க்கிறேன் பின்னாலே உன்னோடு

ஏதுக்கு ஓடுறோம் என்பதை சொல்லாமல்

என்னையும் உன்னோடு ஓடிடச் சொல்கிறாய்

Continue reading

Tamil Song 201 – அவரே பாரம்

முன்னமே ஒரு முடிவுக்கு வந்தபின்

முயன்று பார்ப்பதில் பயனேதும் இல்லை

முனைந்து எப்படி கூறியே பார்க்கினும்

முரண்டு பிடிப்பவர் எண்ணமோ மாறலை

 

கூறுவதை முழுதாகக் கேட்கவும் மாட்டார்

கேட்டாலும் சரியாக யோசிக்கமாட்டார்

என்னதான் சொன்னாலும் ஏற்கவும் மாட்டார்

எதெற்கெடுத்தாலும் எரிச்சலும் கொள்வார் Continue reading

Bhakti Song 470 – பக்திக்கு இலக்கணம்

வாருங்கள் எல்லோரும்

வள்ளளைப் போற்றுவோம்

வாழ்த்திக் கொண்டாடி

அவனடி பணிவோம்

பக்தர்கள் சேர்வது

எத்தனை பேரின்பம்

பாடித் தொழுவது

அதனினும் ஆனந்தம்

Continue reading

Tamil Song 200 – வெறியாட்டம்

வெறி பிடித்திருக்கு மனிதருக்கு இங்கு

ஒருவரை ஒருவர் விழுங்குறார் அங்கு

எதன் பேரால் இந்தத் தீவிரவாதம்

எவர்க்கும் புரியாத அசுரரின் குணம்

 

எந்த மதமுமே இதனை ஏற்குமோ

இறைவன் பெயராலே செய்யவும் கூடுமோ

மனித மனம்கூட இதனை ஏற்குமோ

மாக்களும் கூட இப்படிச் செய்யுமோ Continue reading

Bhakti Song 469 – தெளிவான தீர்ப்பு

ஊதிப் பெரிதாகிக் காட்டுகின்றோம்

ஊர்தூற்ற சொல்லியே காட்டுகின்றோம்

உள்ளத்தின் உண்மை வேறாக இருக்க

உத்தம வேடமே போடுகிறோம்

 

உள்ளதை உள்ளதாய் கூறிவிட்டால்

நம் உள்நோக்கம் உண்மையில் புரிந்துவிடும்

உண்மை மறைக்க ஏதேதோ சொல்லியே

ஊர்மெச்ச வேடமே போடுகின்றோம் Continue reading

Bhakti Song 468 – அதிகம் எதிர்பார்க்காதே

நான்தானா கிடைத்தேன் நீவிளையாட

நல்லது, நீகூறு நான் என்னசெய்ய

இதற்காகவா என்னையும் படைத்தாய்

இதுயென்ன வேடிக்கை நீயென்ன செய்கிறாய்

 

உலகம் என்ன நாடக மேடையா

உனக்காய் அதிலே நான் ஆடனுமா

ஒத்திகை ஏதும் பார்க்கவும் இல்லை

வேடம் எதுவெனத் தெரியவும் இல்லை Continue reading

Tamil Song 199 – நம்குணம் புரியும்

Of course I do the same what I think that others are doing. Some time in the name of writing poem, I often expose my own nature than pointing out others mistake. After writing this poem I feel that this poem too is another way of ‘fault finding’. So when I think or accuse others as faultfinders, finally I feel exposed myself through my own words.

 

குறைசொலிப் பயனென்ன

உலகினில் எவரும்

குணம்காணப் பழகாது

இருக்கின்ற வரைக்கும்

 

சரி-தவறென

தீர்ப்பது யாரு

தான்சொல்ல வருவது

சரியெனும் போது Continue reading

Bhakti Song 467 – எல்லாம் ஆவான்

துணையாக இருப்பான்

துன்பத்தில் காப்பான்

துவண்டே போனாலும்

தோள்தந்து மீட்பான்

உள்ளத்தை அறிவான்

உதவிட வருவான்

உண்மையாய் இருப்போர்க்கு

உறுதுணை யாவான்

Continue reading