Monthly Archives: August 2016

Tamil Song 226 – தப்பித்தால் போதும்

முடியலை என்பது தெரிந்திருக்கு

விடவும் முடியலை புரிஞ்சிருக்கு

இடையிலே வந்து மாட்டிக்கொள்ள

விழிகள் இரண்டும் பிதுங்கிருக்கு

 

வேண்டாம் போதும் என்றாலும்

விடுதலை மட்டும் கிடையாது

விட்டு ஓடிட முயன்றாலும்

தப்பிக்க மட்டும் முடியாது

Continue reading

Bhakti Song 499 – சொல்லிவைத்தேன்

என்னசொல்ல அழைக்க

என்மீதுநீ இரங்க

எதற்காக நான்சொல்ல

உனக்கது தெரிந்திருக்க

 

மறைக்க உன்னிடம்

மறைவாக ஒன்றுமில்லை

மறைக்க வேண்டிய

தேவையும் எனக்கில்லை Continue reading

Tamil Song 225 – பக்குவம்

பலகற்றுப் பார்த்தாலும்

பயனேதும் காணாரே

பக்குவம் என்பது

மனதில் இல்லாரே

 

பேச்சாலே எவரையும்

வென்றிட இயலாது

பேசுவதில் பக்குவமும்

இல்லாத போது Continue reading

Bhakti Song 498 – நதியோர மரம்

நதியோரம் நட்ட மரமாக வாழ்ந்து

நன்மைகள் மட்டும் பலனாகத் தந்து

ஏற்ற காலத்தில் கனிதர வேண்டும்

இதை மட்டும் எனக்குநீ செய்யவேண்டும்

இதை மட்டும் எனக்கு நீசெய்ய வேண்டும்

 

தீயோரைக் கண்டால் தூரவே ஓடி

துன்மார்க்கரைக் கண்டால் பயந்து விலகி

பாதகம் செய்வோரைக் கண்டாலே அஞ்சி

பாவத்தில் பாதையில் போகாமல் வாழ்ந்து Continue reading

Bhakti Song 497 – தரும்போது பெறவேண்டும்

நீதரும் போது நான்பெற வேண்டும்

நம்மையோ-தீமையோ எதுவான போதும்

நான் பெறும் போதும் உன்நினைவு வேண்டும்

நல்லதற்கே என நான் எண்ண வேண்டும்

 

தாயறிவாளே தன்சேயின் தேவையை

தன்னைத் துறப்பாளே அதனின் சேவையில்

நன்மை-தீமை அறியா குழவியை

தாயன்றி இங்கு புரப்பார் எவருமே இல்லை

Continue reading

Bhakti Song 496 – போதும்

இதுபோல் என்றும் இருந்தால் போதும்

இணையடி தன்னைப் பணிந்தால் போதும்

உடலும் மனமும் தளர்ந்த போதும்

உன்னை நினைத்து வாழ்ந்தால் போதும்

 

அருளும் அன்பும் தந்தால் போதும்

அத்துடன் உனது உறவும் போதும்

பக்தியில் திளைத்து பணிகின்ற போதும்

முக்தியின் மேன்மையை உணர்ந்தால் போதும் Continue reading

Bhakti Song 495 – இழந்து பெற்றேன்

இழந்தேன் உன்னைப் பெறவேண்டி

ஏழைவந்தேன் அருள் வேண்டி

தருணம் இதுநீ தரவேண்டி

தாள் பணிந்தேன் உனைவேண்டி

 

அருளே, அருவே என உன்னை

உருகி உருகிக் கொண்டாடி

வந்தேன் தந்தேன்நான் என்னை

புகழ்ந்து மகிழ்ந்து பண்பாடி Continue reading

Bhakti Song 494 – இதுவே நல்லது

அறிவைக் கொண்டு செய்வது எல்லாம்

ஆண்டவன் செயல்லெனச் சொல்லிடுவோமா

அறிவின் துணையுடன் எழுவதைக் கூட

ஆண்டவன் சொல்லெனச் சொல்லிடலாமா

 

இறைவன் வார்த்தை இதுவெனச் சொல்லி

எவற்றை எல்லாம் தொகுத்து வைத்தோமோ

அவற்றை எல்லாம் இறவனே வந்து

அவசியம் நமக்குச் சொல்லித் தந்தானா

Continue reading

Bhakti Song 493 – அவசர வழக்கு

அடிக்கடி உன்னிடம் வருவேனே

ஆத்திரம் அவசரப் படுவேனே

கடுகடுப் பாக இருப்பேனே

குறைகளை சொல்லி நிற்பேனே

 

முணுமுணுப்பது எனது இயல்பாச்சு

மோதுதல் எனது குணமாச்சு

குற்றமே காணப் பழகியதால்

Continue reading

Bhakti Song 492 – உறவைக் கொண்டாடுவோம்

உறவின்றி உலகையே புரிந்திட இயலாது

உறவின்றி உன்னையே அறிந்திட ஆகாது

உறவின்றி இறைவனை கொண்டாட முடியாது

உறவின்றி உண்மையில் வாழவும் கூடாது

 

ஆன்மீக வாழ்விற்கு அடித்தளம் எதுவாயினும்

ஆண்டவன் உன்னுடன் உறவுமே கொண்டாலும்

“யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”

என்பதை உணராமல் ஆன்மீகம் கிடையாது Continue reading