Monthly Archives: September 2016

Bhakti Song 534 – ஒருவிதப் பரவசம்

என்னவோ எனக்கொன்று

சொல்லிட வருகிறாய்

என்னவென்று எனக்கும்

புரியவே இல்லை

ஏனிதைச் செய்கிறாய்

என்பதும் கூட

இதுவரை எனக்கும்

விளங்கவே இல்லை

 

உணர்ச்சியின் விளைவென

ஒதுக்கவும் முடியலை

உள்ளத்தின் கிளர்ச்சியென

ஏற்கவும் இல்லை

ஆயினும் உள்ளத்துள்

ஒருவிதப் பரவசம்

அதைக்கூடப் புரிந்திட

எனக்கும் முடியலை

 

ரோமமும் சிலிர்க்குது

கண்களும் பனிக்குது

நாவுமே குழையுது

நாடியும் ஒடுங்குது

ஆடவும் தோனுது

அனைத்தினும் மேலாக

அமைதி ஆளுது

 

அதனைச் சொல்லவே

நாவும் தயங்குது

ஆயினும் உள்ளமோ

உந்தியே தள்ளுது

எனக்கு நடந்ததை

எப்படிச் சொல்ல

என்பது தெரியாமல்

வார்த்தையும் தயங்குது

 

ஆயினும் அதனையும்

சொல்லத்தான் வேண்டும்

அந்தப் பரவசம்

பிறர்கொள்ள வேண்டும்

நான்கண்ட ஆனந்தம்

பிறர்கொள்ள வேண்டும்

பேரின்ப வெள்ளத்தில்

அவர்மூழ்க வேண்டும்

 

மத்திகிரி, 26-9-16 (27-9-16) இரவு 12.30

Bhakti Song 533 – அடைக்கலம் வேண்டும்

அடைக்கலம் தேடி உன்னடி வரவேண்டும்

அங்குதான் நானொறு ஆறுதல் பெறவேண்டும்

கணக்கற்ற கலக்கங்கள் மனதிடை எழும்போது

காப்பாய் என்றுதான் உன்னடி வரவேண்டும்–அடைக்கலம்…

 

புரியாத குழப்பங்கள் புவிமீது பல உண்டு

புரிந்தாலும் விடையில்லா கேள்விகள் சிலவுண்டு

இவற்றாலே ஏமாந்த நேரங்கள் பல உண்டு

Continue reading

Bhakti Song 524 – Charity

மனித நேயம்

இரங்கிடும் மனதையும் இறைவனே தருகிறான்
இரக்கம் என்பது அவனது கொடையாம்
எளியோற்கு இரங்கி உதவுதல் என்பது
இறைவனே நமக்கும் தந்த வரமாம்

இரக்கம் இன்றி வாழ்தல் என்பது
இதயம் உள்ளோர்க்கு இயலா ஒன்றாம்
இரக்கம் பெற்ற நமக்கும் அதுவும்
இயல்பாய் அமைவது இன்னும் சிறப்பாம்

இரக்கத்தினாலே நம்மையும் மீட்டான்
என்பதை எண்ணிப் பார்த்திடும் போது
இரக்கம் இன்றி வாழ்தல் என்பது
எண்ணிட முடியாப் பாதகச் செயலாம்

எளியோர்க் கிரங்கி உதவுதல் என்பது
ஈகை அல்ல என்பதை உணர்வோம்
உதவிட நமக்கும் உதவிடும் அவரே
நன்மை நமக்குச் செய்கிறார் என்போம்

எத்தனை பேர்க்குக் கடனும் பட்டோம்
என்பதை எண்ணிப் பார்க்கும் போது
இரங்கிச் செய்யும் எவ்விதச் செயலும்
பட்ட கடனையும் தீர்த்துவிடாது

இதனை எண்ணிப் பார்த்து விட்டாலே
இரங்குரோம் என்ற எண்ணம் வராது
இறுதி வரையில் “மனிதனாய்” வாழ
இரக்கம் போல வேறொன்றும் உதவாது

மத்திகிரி, 19-9-16, மதியம் 2.40

English Translation

God gives the spirit of mercy
and it is a gift from God alone
and to help the needy one
is a boon given by God to us

living without having mercy
is impossible for anyone who has a heart
and as we receive it from God
it only adds more value in our life

when we think that
Because of mercy alone He redeemed us
living without mercy
is indeed a crime in us

Helping the poor with mercy
is not charity, let us understand this
only they alone actually
helping us to do that, let us realize this

when we think that
we are indebted to so many people
all that we do for others
never will repay that debt

once we remember this
we will never have the spirit that we are helping others
to live as a human till the end
nothing will help us like the spirit of mercy

Mathirigiri, 19-9-16, 2.40 pm

I strongly believe in charity. Of course I too agree that, ‘throwing a bone to the dog is not charity but sharing in the same bone when we are as hungry as the dog’, but instead of proclaiming such ideology, even if we could throw some bone to a dog in its need is more essential than having a philosophical talk about it.

Bhakti Song 523 – Need Humility

பணிவுவேண்டும்

சேவல் கூவிடும் காலையிலே-உன்
சேவடி பணியும் வேளையிலே
மனம், மொழி கடந்த நிலையினிலே
திருவடி வந்தேன் தனிமையிலே

உளமுடன் உணர்வையும் சேர்த்துக்கொண்டு
உன்னையே மனதில் எண்ணிக்கொண்டு
உன்திருப் புகழினைப் பாடிக்கொண்டு
உன்னைத் தொழுதேன் பணிவுகொண்டு

அன்பு, பணிவு எளிமையையே
அவனிக்குக் காட்டினாய் உண்மையிலே
அவற்றையே நானும் அணிந்துகொள்ள
வந்தேன் உன்னிடம் வேண்டிக்கொள்ள

உனது அடியான் என்பதிலே
உயர்வு உண்டு உண்மையிலே
ஆயினும் அதற்கும் தகுதிவேண்டும்
அதையும் நீயே தரவேண்டும்

உனது வேதத்தின் உயர்வினையே
உணர்ந்து கொள்ள உண்மையிலே
அகக்கண் திறந்து அருளிடுவாய்
அதற்கும் அறிவைத் தந்திடுவாய்

அறிவுக்கு ஏற்ற பணிவுவேண்டும்
அத்துடன் அடக்கமும் சேரவேண்டும்
உனக்கே அடிமை செய்யவேண்டும்
உனக்காய் நானும் வாழவேண்டும்

இதற்கும் உனது கருணைவேண்டும்
அதனை அடையப் பக்திவேண்டும்
பக்தியைப் பெறவும் பணிவுவேண்டும்
பணிந்து உன்னிடம் பெறவேண்டும்

மத்திகிரி, 18-9-16, காலை, 6.00

English Translation

In this morning when the rooster makes noise
and when I bow at your feet
transending heart and language
I came unto your feet all alone

Joining heart with senses
thinking only you in my heart
and singing your glory
I worship you humbly

You truly showed
humilty and love to the world
I too came to ask you
to put them on me

Truly there is noblness
to be as your bhakta
but I need to be qualified for this
and you alone should bestow it to me

In order to understand
the greatness of your veda
kindly open my inner eyes
and give mind (buddhi) for that too

I need humbleness as per the knowledge
and along with it I need simplicity
and I should do only your seva
and should live only for you

For this I need your grace
and I need bhakti to receive it
and to recive bhakti I need humility
and I should receive it only from you

Mathigiri, 18-9-16, 6.00 am.

As I got up very early, after having a cup of tea, I had a relatively calm atmosphere which is a rare event here at Mathigiri as I am often disturbed by too much sounds and noises. But this morning it was relatively calm and I heard the voice of a rooster near by. Then inspired by that calm atmosphere I wrote this song worshiping the Lord.

Bhakti Song 531 – பக்தியால் பணிவேன்

அருளே அமுதே ஆனந்தமே

அன்பின் வடிவாகி வந்தவனே

தருணம் ஈதே என்றேனே

தந்தருள் கிருபை என்பேனே

 

முதலே, முடிவே மூத்தவனே

முக்கிக்கு வழியாகி வந்தவனே

மும்மலம் தன்னை அறுப்போனே

முழுமுதற் பொருளாய் இருப்போனே Continue reading

Bhakti Song 522 – No Use

பயனில்லை

எள்ளி நகையாடி ஏளனம் செய்யலாம்
எடுத்து எறிந்து எகத்தாளம் பேசலாம்
இறைவனை ஆயிரம் கேள்விகள் கேட்கலாம்
இதற்கெல்லாம் இறைவன் பதில்கூற மறுக்கலாம்

நம்போல சிந்திக்க மானுடன் இல்லையே
நம்மோடு வழக்காடத் தேவையும் இல்லையே
புரியாத புதிராக அவனுமே இல்லையே
புரிந்தபின் மறுப்போர்க்குப் பதில்தேவை இல்லையே

தன் எல்லை அறியாத தற்குறியாகி
தான்கொண்ட அறிவுமே தலைக்குமே ஏறி
எல்லாமே இயலும் என்றுமே எண்ணி
என்னவோ பேசுறார் எகத்தாளம் பண்ணி

அறிவாலே மட்டுமே ஆராய முடியாது
ஆழ்மனதிற்கு அப்பாலே செல்லவும் முடியாது
மனதாலே எல்லாமே புரிந்திட முடியாது
மெளனத்திற்கு அப்பாலே விடையேதும் கிடையாது

அதிகப் பேச்சு ஆபத்தில் முடியும்
அறிவை நம்பிட ஆணவம் பிறக்கும்
எளிமை ஒன்றே ஏற்றத்தை அளிக்கும்
பணிவு மட்டுமே பக்தியைக் கொடுக்கும்

புத்தியின் மேன்மையைப் போற்றிக் கொண்டு
புரிந்து கொண்டேன் என்று எண்ணிக்கொண்டு
அறிவையே சார்ந்து வாழ எண்ணி
அழிந்த மாந்தர்கள் கோடி யுண்டு

அவருடன் வாதாடிப் பயனும் இல்லை
அவரைத் திருத்திட வழியும் இல்லை
அவர் போகும் வழியே போகவிட்டு
நம்பணி நாமுமே தொடர வேண்டும்

மத்திகிரி, 18-9-16, மதியம் 2.50

No Use

They can mock and laugh
and can talk arrogantly
and can ask thousands of question to God
and God might refuse to give answer to them

He is not human to think like us
and there is no need for him to confront us
and He never remains a riddle
and someone rejects him even after undertood, there is no need for any answer to them

not knowing his own limitation and becoming a fool
and become very proud of his own knowledge
‘all are possible for me’ they say
and say many thing mocking at God

we cannot analyse God only with our intellect
and we cannot go beyond our deep conscience
we cannot understnad everything by our mind
and there is no answer beyond silence

too much talk (debate) will become a snare
and once we depend upon our intelelct, it creates pride
simplicity alone will uplift us
and humility alone will give bhakti

and hailing intellectualism
and thinking that they understood everything
those who try to live depending upon their intellect alone
have perished in million

There is no use in arguing with them
and there is no means to correct them
allowing them to go in their own way
we should continue to do our seva

Mathigiri, 18-9-16, 2.50 p.m.

There is a Tamil saying that, “We have treatment for paralysis but not for adamant and arrogant natures.”* Those who fail to recognize the limitation of their mind/bhuddhi easily become very arrogant in their intellectual capacity to analyse and arrive their own conclusion. The danger for such people is that left alone, they will in the end struggle with their own mind and intellectual capacity. More one becomes intelligent more she should be humble. There is no point of reasoning with them. Allowing them to choose their own path, we should continue our journey in the Lord for which He choose us.

One clear teaching of Muktinath is ‘humility’. In spite of all doctrinal ambiguity there are many plain teachings in Muktiveda which helps me to keep my bhakti alive in the Lord, like: humility, teachability, simplicity, forgiveness, reconciliation, proper appraisal about oneself etc. We need not confront those who remain arrogant and adamant in many areas. Though God too won’t respond to them in their own terms, yet one Muktivedic warning is that ‘God resists those who are arrogant but shows His grace to those are humble’. I have seen in my life many who are in the end trapped by their own intellectual arrogant nature. Their dependence on their own ‘self-sufficiency’ in the end becomes a trap for them, which they cannot recognize because of their arrogant and adamant nature.

*வாதத்திற்கு மருந்துண்டு, திமிர்வாதம், பிடிவாதத்திற்கு மருந்தில்லை

Bhakti Song 530 – இணைந்து வாழும் மேன்மை

உனது உடலின் அங்கமானால்

உண்மையான உயர்வு பெறலாம்

உனது என்று ஆனபின்னே

உன்னதம் பெறலாம் உன்னில்தானே

 

தனித்து பெற்ற தகுதியெல்லாம்

தனக்குக் கூட உதவிடாது

தான் என்ற எண்ணம் கொண்டால்

உன்னில் எனக்குப் பங்கும் ஏது

Continue reading

Bhakti Song 521 – Will Celebrate

கொண்டாடுவேன்

இசையோடு உனைப்பாடி
இதயத்தில் உனைநாடி
என்னுள்ளே உனைத்தேடி
வந்தேனே திருவடி

கணநேரம் உனையெண்ணிக்
கண்மூடி அமர்ந்ததாலே
களிகொண்டு என்னுள்ளம்
துதிப்பாடும் தன்னாலே

இசையாலே மெருகூட்டி
அதனோடு பொருள்கூட்டி
சிந்தையால் உனையேத்தி
வந்தேனே உனைப்போற்றி

இதுவன்றோ பேரின்பம்
நான்கொண்ட ஆனந்தம்
எப்படிச் சொன்னாலும்
புரியாத பரவசம்

இதைத்தர நீவர
யாசித்து நான்பெற
எந்நாளும் பாடுவேன்
இதுபோல கொண்டாடி

மத்திகிரி, 17-9-16, மாலை, 7.30

English Translation

With music
seeking you in my heart
and searching you within me
I come unto your feet

even if I sit
only for few seconds
thinking only about you
my heat will sing automatically with joy

I come unto you by hailing you
by uplifting you in my mind
composing music
adding beautiful song to it

This is the pure bliss
the anand which I got
a kind of bliss
which I cannot understand

Once you come to give it to me
and I come to receive it
I will celebrate you always
like this everytime.

Mathigiri, 17-9-16, 7.30 pm

As I listend to some beautiful carnatic music I felt elated in my spirit. It is very difficult for me to think about my life without (carnatic) music. Sometime I feel adicted to it as my mother often complain that I am always listing to (carnatic) music than watching any other program. These days I even stopped watching much pannel discussion on any news but use that time to listen music.

Bhakti Song 520 – The Blessed Ones

பாக்கியம் பெற்றவர்

கொண்டாடிப் பாடிட வந்திடுவீரே
குறையென்ன வைத்தான் சொல்லிடுவீரே
அன்றாடம் நம்முடன் வந்தவன்தானே
அளவின்றி அள்ளியே தந்தவன்தானே

எண்ணியே பார்த்துச் சொல்லிடுவீரோ
இதுவரை அவன்செய்த நன்மைகளையே
எளிதாக அதனையும் மறுத்திடுவீரோ
இதற்குப் பதிலும் சொல்லிடுவீரோ

கேட்டவை எல்லாம் கொஞ்சமே ஆயினும்
கூடத்தான் தந்தான் சேர்த்துமே அவனும்
பெற்றதை எண்ணிப் போற்றிடுவீரே
மேலும் தருவதைப் பெற்றிடுவீரே

அவனுக்கு நிகர் அவனே என்று
அறிந்தே சொன்னேன் நானுமே நன்று
புரிந்தபின் இன்னும் தயக்கமும் ஏனோ
புனிதனைப் போற்றிட வெட்கமும் தானோ

ஒன்றாகப் பாடிப் பணிந்திடும் போது
உவகை எத்தனை பெருகியே பாயுது
வாயாரப் பாடி மகிழ்ந்திடும் போது
வையமும் அவனைப் புரிந்து கொண்டாடுது

இந்தப் பேரினைப் பெற்றவர் யாரு
என்பதை மட்டும் என்னிடம் கேளு
பக்தியால் அவனைப் பணிந்திடுவோரே
இப்பாக்கியம் பெற்றவர் என்பேன் நானே
மத்திகிரி, மாலை, 6.00, 17-9-16

English Translation

Come to sing and rejoice in him
tell me what you are lacking in him
he is the one who came with us each day
and the one who bestowed without limitation

Think of all the blessings
which he bestowed so far in your lives
can you easily forget them
give me the answer for that to me

though you asked very few things
he added more and gave you all
and praise him thinking what you have received
and receive more and more whatever he will give further

He is equal only unto him
and I say this knowing very well
once you too understood this why you hesitate
and do you feel shy to sing the praise of that holy one

as we join togetehr and praise
what kind of joy is over flowing
when we praise and hail him
the world is also celebrates understanding that

‘who is the one who received this ‘
only you ask about it to me
‘only those who worship him with bhakti
alone are the blessed one’, I will say this

Mathirigi, 17-9-16, 6.00 pm

As I went for my evening walk, some kind of worshipping sprit preoccupied my mind. While walking I began to sing some song. Then as inspiration came, I wrote this song in my mind and when I came down I wrote this song.