Monthly Archives: October 2016

Song 565

ஆடிய ஆட்டம் என்ன

போட்டது கொஞ்சமா ஆட்டமும் நான்
பொழுதெல்லாம் ஆடினேன் தாண்டவம் தான்
இச்சை-கோபத்தை ஆடையாக்கி
மோகத்தை அணியாகக் கழுத்தில் பூட்டி
காம-லோப சதங்கை கட்டி
அவை தந்த இசைக்கேற்ப ஆட்டமாடி
மருங்கிலே மாயை சேர்த்துக்கட்டி
பேராசை மைகொண்டு புருவம் தீட்டி
உள்ளுக்குள் ஆயிரம் ஆசை கட்டி
குழப்பத்தை அத்துடன் சேர்த்துக் கூட்டி
மனதில் பலவித ஜதிகள் செய்து
மேனியைப் பலவிதம் நான்வளைத்து
பலவித நடனங்கள் ஆடிவிட்டேன்
பாவத்தை இவ்விதம் சேர்த்துவிட்டேன்
மூடன்நான் வேறெது செய்துவிட்டேன்
மேனியும் தளர்ந்ததால் நிறுத்திவிட்டேன்
அதன்பின்னே உன்னிடம் வந்து விட்டேன்
அருள்தந்து மீட்டிடக் கதறிவிட்டேன்.

மத்திகிரி, 30-10-16, மதியம் 2.10

Song 564

சலித்துவிட்டேன்

ஆயிரம் முறைநீ கேட்டாலும்
அதைத்தான் மீண்டும் சொல்லிடுவேன்
தேவையின்றி அலைக்கழித்தால்
திரும்பத் திரும்ப வந்திடுவேன்

நான்தான் உனக்குக் கிடைத்தேனா
நாடகம் நீயும் நடத்திடவே
அட வேண்டாம் போதும் விட்டுவிடு
இனிவேடிக்கை வேண்டாம் நிறுத்திவிடு

ஊருக்கு இளைத்தவன் நான்தானா
உனக்கும் கிடைத்தவன் அடியேனா
எடுப்பார் பிள்ளை ஆனேனா
இடித்துச் சொன்னேன் புரியாதா

அதிகம் ஒன்றும் கேட்கவில்லை
அடங்க மறுத்துப் புலம்பவில்லை
கொட்டக் கொட்ட குனிந்துவிட்டேன்
கொஞ்சம் இரங்கிடு கெஞ்சிவிட்டேன்

செத்த பாம்பை அடிக்காதே
சேதம் அதிகம் விளைக்காதே
புதைத்ததைத் தோண்டி எடுக்காதே
புரியாதவன் போல் நடிக்காதே

எத்தனை முறைதான் கேட்டிடுவேன்
இதைவிட எப்படிச் சொல்லிடுவேன்
எழுதி எழுதிச் சலித்துவிட்டேன்
எனவே இத்துடன் முடித்துவிட்டேன்

மத்திகிரி, காலை, 4.45, 30-10-16

Bhakti Song 565 – ஆடிய ஆட்டம் என்ன

போட்டது கொஞ்சமா ஆட்டமும் நான்

பொழுதெல்லாம் ஆடினேன் தாண்டவம் தான்

இச்சை-கோபத்தை ஆடையாக்கி

மோகத்தை அணியாக கழுத்தில் பூட்டி

காம-லோப சதங்கைக் கட்டி

அவை தந்த இசைக்கேற்ப ஆட்டமாடி Continue reading

Bhakti Song 564 – சலித்துவிட்டேன்

ஆயிரம் முறைநீ கேட்டாலும்

அதைத்தான் மீண்டும் சொல்லிடுவேன்

தேவையின்றி அலைக்கழித்தால்

திரும்பத் திரும்ப வந்திடுவேன்

 

நான்தான் உனக்கு கிடைத்தேனா

நாடகம் நீயும் நடத்திடவே

அட்வேண்டாம் போதும் விட்டுவிடு

இனிவேடிக்கை வேண்டாம் நிறுத்திவிடு

Continue reading

Song 563

அவன் நாடகம்

நடக்கிற வரையில் நடக்கட்டுமே
நடத்துறான் அவனும் தினம்தினமே
நாமென்ன செய்ய இதனிடையில்
நடப்பதை வேடிக்கை பார்ப்போமே

அவனுக்கு இல்லாத அக்கரையா
அவன்தான் நடத்துறான் புரியலையா
இத்தனை தவிப்பு ஏனுனக்கு
எப்படிச் சொல்வேன் நானுனக்கு

ஒருமுடி கூட உதிராமல்
உன்னால் காத்திட முடிந்திடுமா
இதனைப் புரிய மறுக்கின்றாய்
எடுத்துச் சொன்னாலும் முறைக்கின்றாய்

அதைவிடு வேறொன்று சொல்லுகிறேன்
அதையேனும் நீ எண்ணிப்பார்
ஒருநாள் நோயில் கிடந்தாலும்
உன் நிலையைநீ நினைத்துப்பார்

சோறு தண்ணீர் இறங்காது
சேர்த்ததும் உனக்கு உதவாது
அவனே இரங்கி அருளாவிட்டால்
அதனின்றும் மீண்டிட முடியாது

சொந்தம் பந்தம் இருந்தாலும்
தாங்கியே உன்னைப் பிடித்தாலும்
சிகிச்சை ஆயிரம் செய்தாலும்
சுகத்தை அளிப்பது யார்சொல்லு?

இதற்கும் மேலே சொல்லிடவும்
எனக்கும் கூடத் தெரியவில்லை
இதுகூட அவனது நாடகம்தான்
அதுவும் உனக்குப் புரியவில்லை

நடத்துற அவனை நாடிவிடு
நானில்லை “நீ” எனக்கூறிவிடு
அப்புறம் உனக்கும் புரிந்துவிடும்
அமைதி தன்னால் வந்துவிடும்

அனுபவம் தந்த பாடமிது
அதையே உனக்கு நான்சொன்னேன்
இதன் பிறகு உன்பாடு
இனிமுடியாது ஆளைவிடு

மத்திகிரி, 28-10-16, இரவு 11.05

Song 562

மீட்போன்

“மீட்பன்” என்ற பெயர் பெற்றாய்
மீட்கப்பட்டோரே அதை அறிவார்
அவரில் நானும் ஒருவன் அன்றோ
அறிந்த உண்மையைச் சொல்கின்றேன்
சுழன்று சுழன்று சுற்றி வந்தேன்
சோதனை வேதனை தாங்கி நின்றேன்
எனது அருகில்நீ இருந்தபோதும்
என்போக்கில் நான் வாழ்ந்திருந்தேன்

யாருக்கும் நானும் இளைக்கவில்லை
எத்தனை துய்த்தும் சளைக்கவில்ல
உடலின் இச்சைக்கு ஓயாமல் தேட
உன்னையும் தேடவோ நேரமில்லை

அலுத்துச் சலித்து ஓய்ந்து நின்றேன்
அடுத்துச் செய்ய ஒன்றும் இன்றி
காலில் விலங்கைப் பூட்டிக் கொண்டு
கைகளைக் கட்டிக் கடலில் வீழ்ந்தேன்

அமிழ்ந்து நானும் மாண்டு விடாமல்
அந்நேரம் என்பின் நீ குதித்து
கரையும் ஏற்றி விலங்கை நீக்கிக்
கட்டை அவிழ்த்துக் காட்சி தந்தாய்

அந்நேரம் அறிந்தேன் ஐயனே உன்னை
அதன்பின் உணர்ந்தேன் என்நிலை தன்னை
மீட்பைத் தர மீட்டுக் கொண்டதால்
“மீட்போன்: என்று தொழுதேன் உன்னை

மத்திகிரி, 28-10-16, மதியம் 1.45, Surdas, 398, p. 691

Bhakti Song 563 – அவன் நாடகம்

நடக்கிற வரையில் நடக்கட்டுமே

நடத்துறான் அவனும் தினம்தினமே

நாமென்ன செய்ய இதனிடையில்

நடப்பதை வேடிக்கை பார்ப்போமே

 

அவனுக்கு இல்லாத அக்கரையா

அவன்தான் நடத்துறான் புரியலையா

இத்தனை தவிப்பு ஏனுனக்கு

எப்படி சொல்வேன் நானுனக்கு

Continue reading

Bhakti Song 562 – மீட்போன்

“மீட்பன்” என்ற பெயர் பெற்றாய்

மீட்கப்பட்டோரே அதை அறிவார்

அவரில் நானும் ஒருவன் அன்றோ

அறிந்த உண்மையை சொல்கின்றேன்

சுழன்று சுழன்று சுற்றி வந்தேன்

சோதனை வேதனை தாங்கி நின்றேன்

எனது அருகில்நீ இருந்தபோதும்

என்போக்கில் நான் வாழ்ந்திருந்தேன்

Continue reading

Song 561

வீண்சிந்தை போக்குவோம்

நல்லவிதமாக நேரத்தைப் போக்கிட
நமக்கும் உள்ளது நல்லவழி பல
தேவை இல்லாத சிந்தையைப் போக்கித்
தேடலாம் இறைவனை அவனருள் நாடி

வேண்டாத பலவாதம் நாள்தோறும் இருக்க
அத்துடன் பிடிவாதம் சேர்ந்து கொள்ள
ஆயிரம் தர்க்கங்கள் அவற்றுடன் செய்ய
அமைதியை இழப்போமே மனதினுள் மெள்ள

வாதித்தால் எதிர்வாதம் நிச்சயம் வந்திடும்
அதனால் பிடிவாதம் இன்னும் பெருகிடும்
எதிர்வாதம், பிடிவாதம் வீண்வாதம் வளர்த்திடும்
வேண்டாத தர்க்கங்கள் ஆயிரம் பிறந்திடும்

இதற்கெனச் சிந்தையை இறைவனும் தந்தானா
இதுபோன்று நேரத்தை செலவிடச் சொன்னானா
ஆயிரம் ஆயிரம் நன்மைகள் செய்ய
அவனே பலவழி காட்டிட மறுத்தானா

அவனடி சென்று அமர்ந்தே பார்ப்போம்
அவன்சொல்லும் வார்த்தையை அமைதியாய்க் கேட்போம்
அதற்கென நேரம் அவன் தரும் போது
அதைவிட்டு வீண்சிந்தை செய்யாதிருப்போம்

இதைச்செயத் தவறி இழந்தது அதிகம்
இறையடி அண்டினால் பெறுவது அதிகம்
உணர்ந்து திருந்திட அமைதி பெருகும்
உணர மறுப்பது அவரவர் விருப்பம்

மத்திகிரி, 28-10-16, காலை, 6.00