Monthly Archives: November 2016

Song 595

நமது உயர்வு

வரும்போது வரட்டும்
வருந்தியே அழைக்காதே
வந்தவன் சேர்ந்தபின்
மீண்டுமே இழக்காதே
தரும்போது தருவதைப்
பெறவும் மறுக்காதே
தரமாட்டேன் என்றாலோ
வருந்தியே கேட்காதே

ஏற்ற நேரமும்
எதுவென அறியானோ
உன்தேவை எதுவென
அவனுமே புரியானோ
இதுவரை காத்தவன்
இப்போது மறுப்பானோ
இதுவென்ன புதுக்கேள்வி
உன்னையும் மறுப்பானோ

நீகேட்ட பின்னாலே
உனைத்தேடி வரவில்லை
நீசொன்னாய் என்பதால்
தன்னையே தரவில்லை
படைத்த பின்னாலே
அவனது பொறுப்பாச்சு
இதைமட்டும் அறிவது
உனது அழைப்பாச்சு

தந்ததை ப் பெறுவதில்
தனியொரு சுகமுண்டு
தரும்நேரம் எதிர்ப்பார்த்து
வாழ்வதில் மகிழ்வுண்டு
பெற்றதைப் பேணியே
காப்பதில் பயனுண்டு
பெறும்வரை பொறுப்பதில்
நமக்குமே உயர்வுண்டு

குருகுலம், 22-12-16, மதியம் 3.10

The Spirit of the Scripture

“Beauty is in the eye of the beholder.”

This is true not only for aesthetic experiences, but in our approach in every field of human activity. For example, if any one approaches a religious scriptures only to dig out some anthropological, sociological, political, historical, ethical or moral issues or message, she will miss the very spirit of the Scripture in which it is written. If one wishes to read or research for things other than spiritual issues, there is nothing wrong with it and she will definitely get it. But if any votary of any sampradaya wishes to find things other than what is required for her faith/bhakti, she will miss the very spirit of the Scripture for which it is recognized in her sampradaya. The author(s) of any particularly scripture never wrote keeping all these other needs of human being in mind other than what is required for the faith/bhakti of the followers of that particular sampradaya.

This trend to dig out all sorts of messages in a scripture aside from the original purpose is not new. But a supra-rationalistic follower of any faith with her dry intellectualism will miss the very spirit of the scripture. Just read few poems in Divyaprabandam, Tiruvasagam, Surdas, and Meerabai or in our case Muktiveda1. If a votary cannot find any teaching and guidance for her faith, she cannot claim to be a sincere and serious followers of that particular sampradaya. Continue reading

Song 594

உன்னிடம் என்ன பேச்சு

என்னதான் செய்ய எண்ணம்நீ கொண்டாய்
ஏதுநான் செய்ய சித்தம்நீ கொண்டாய்
முன்பாக ஒன்றையும் சொல்லவும் மாட்டாய்
மீறிநான் கேட்க கோபமும் கொண்டாய்

என்னவோ செய்துகொள் உன்சித்தம் ஆச்சு
தெய்வம்நீ உன்னிடம் இனியென்ன பேச்சு
வாதிட்டுப் பார்த்தேன் பயனென்ன வாச்சு
நீசொன்னதே தீர்ப்பு என்று முடிவாச்சு

ஏன்பிறந்தேன் நான் மனிதனாய் இங்கு
இதற்குக் காரணம் யாரென்று சொல்லு
என்தவறு இதில் ஏதுமே இல்லை
படைத்த நீயும் பதில்தர வில்லை

ஒருபுறம் பாரம் என்றுதான் தவிக்கிறேன்
மறுபுறம் பேறுதான் என்றுமே மகிழ்கிறேன்
பாரமும் தாங்காது பலமுறை புலம்புறேன்
பேற்றினை எண்ணியே ஆனந்தம் கொள்கிறேன்

இரண்டும் நிரந்தரமாகவே இல்லை
இவற்றை எண்ணிட நேரமோ இல்லை
உனக்கும் அதைப்பறிக் கவலையும் இல்லை
இதுஎம்பாடு என்பதே உன்நிலை

சேலம, 18-12-16, இரவு 11.30

Song 593

என்னதான் காரணம்

எண்ணாமல் இருந்திட என்னதான் காரணம்
இரங்காமல் இருப்பது எவ்விதம் நியாயம்
ஏழைநான் அழைத்தேன் உன்னை அனுதினம்
இரங்கக் கூடாதோ மீண்டும் ஒருதரம்

கூப்பிட்ட நேரத்தில் ஓடியே வந்தாய்
கூறும்முன் என்நிலை புரிந்து கொண்டாய்
ஏற்றதைச் செய்து என்னையும் மீட்டாய்
இப்போது மட்டும் ஏன்கேட்க மறுக்கிறாய்

அதிகம் கேட்க நானும் வரவில்லை
புதிதாகக் கூற எனக்கொன்றும் இல்லை
பழைய புலம்பல் என்றுமே எண்ணி
ஒதுங்கி நீபோவது சற்றும் சரியில்லை

எப்போதும் என்தேவை ஒன்றையே எண்ணுறேன்
அதை நிறைவேற்ற ஓயாமல் உழைக்கிறேன்
இடையிடை உன்னை சற்று நினைக்கிறேன்
அதிலும் சுயநலம் இழையோட காண்கிறேன்

பிறரைப் பற்றிய சிந்தையே இல்லை
பிறர்தேவை எதையும் நினைப்பதும் இல்லை
சேவை செய்கிறேன் என்பதும் கூட
என்தேவை நிறைவேற்ற என்பதே உண்மை

இதைநீ அறிந்ததுதான் என்னை ஒறுத்தாயோ
எதைநான் சொன்னாலும் கேட்க மறுத்தாயோ
இனிப்பயன் இல்லை என்றுமே எண்ணி
என்மீது இரங்க நீயும் மறுத்தாயோ

என்னதான் செய்வேன் என்குணம் மாறலை
எவ்வளவு முயன்றாலும் சுயநலம் போகலை
நீயும் கைவிடக் கதியென்ன வாகும்
இதற்கோ பதிலும் நீசொல்ல வேண்டும்

என்போக்கில் போக ஏன்விட வில்லை
என்னைத்தேடி மீட்க நான்கேட்க வில்லை
மீட்டதை மாற்றுதல் உனது பொறுப்பு
இதற்குண்டோ உன்னிடம் ஏதேனும் மறுப்பு

இதைவிட எப்படி என்நிலை சொல்வது
எதையேனும் மறைத்தேனோ அதைமட்டும் சொல்லு
எவரிடம் சென்று நியாயம் கேட்பது
இந்த உன் பிணக்கை எப்படித் தீர்ப்பது

மத்திகிரி, 12-12-16, இரவு 11.30

Song 592

போனது போகட்டும்

கழுத்திலே வைரத்தைக் மாட்டிக் கொண்டு
காடு முழுவதும் தேடினாலும்
கடைசி வரையிலே கிடைக்காது
கவனத்தில் இதைநீ கொண்டு விடு

எண்ணையும் திரியும் விளக்கில் இட்டு
ஏற்றிட ஒளியும் கிடைத்து விடும்
இவற்றை ஒன்றாய்ச் சேர்க்காவிட்டால்
இருளும் எப்படி நீங்கிவிடும்

முகத்தின் கரியைப் போக்கிடவே
ஆடியைத் துடைத்துமே பயனென்ன
மனதிலே மலங்களை வைத்துக் கொண்டு
மதிகெட்டு வாழ்ந்து பயனென்ன

பார்வை முழுதும் இழந்த பின்னே
பகலவனை இனிப் பாரேன் எனக்
கண்களைக் கையால் பொத்திக் கொண்டு
பகடியம் நீயும் பண்ணாதே

விழித்து எழுந்திடும் நேரமிது
மலங்களை நீக்கப் போராடு
போனது எல்லாம் போகட்டும்
புதிதாய் மனதில் பிறந்து விடு

மத்திகிரி, 9-12-16 மதியம் 2.00 Sur 428, p. 747

Song 591

எப்படி முடியும்

பித்துப் பிடித்தவன் போலவே ஆனேன்
பேதைமீது உன் இரக்கமும் காணேன்
சத்தமிட்டே நான் பலமுறை அழைத்தேன்
உன்சன்னதி என்குரல் எட்டவும் காணேன்

தன்னந் தனியாக இருப்பதும் தெரியாதோ
தயவு கொள்ள மறுப்பதும் முறைதானோ
ஏனென்று கேட்க நாதியும் இல்லையோ
என்நிலை அறிந்தவர் எவருமே இல்லையோ

தூதுமே அனுப்பிடத் துணையெனக் கில்லை
துயரினைப் போக்குவார் எவருமே இல்லை
பாழும் என் மனமோ மறக்கவே இல்லை
பலமுறை சொன்னேன் கேட்கவும் இல்லை

இதற்குமேல் நான் இனியென்ன சொல்ல
இதனினும் என்நிலை எப்படிச் சொல்ல
விடையெது வானாலும் உனை விடமாட்டேன்
உன்னடி விலகிடத் துணியவும் மாட்டேன்

எதுவரை கேளாமல் இருந்திட முடியும்
எனைவிட்டு நீயெங்கு சென்றிட இயலும்
மனதினுள் வைத்துப் பூட்டிய பின்னே
தப்பிக்க உனக்கு எப்படி முடியும்

மத்திகிரி, 7-12-16, மாலை,5.45

Song 590

வருவேன் உன்சன்னதி

சன்னிதி ஒன்றே
என்றும் நிரந்தரம்
சஞ்சலம் கொண்ட
வாழ்விலே என்றும்

உன்னிடம் வரவில்லை
உன்னருள் பெறவில்லை
உலகின் செயல்களில்
என்னையே இழக்கையில்

ஆயினும் இதற்குமோ
மாற்றமே எனக்கில்லை
அவற்றை மேற்கொள்ள
வழியும் இங்கில்லை

ஆயினும் அவற்றாலே
நிம்மதி பெறவில்லை
அவற்றோடு போராட
எனக்கும் தெம்பில்லை

இவற்றை விலக்கிட
வழியும் தெரியலை
எப்போது முடிவுறும்
என்பதும் புரியலை

வேடிக்கை ஏனோ
நீயும் பார்க்கிறாய்
வழியைக் கேட்டாலும்
சொல்ல மறுக்கிறாய்

ஆனாலும் வருவேன்
உந்தன் சன்னதி
அங்கே பெறுவேன்
நானுமே நிம்மதி

மத்திகிரி, 7-12-16, இரவு 11.10

Song 589

ஆடவேண்டாம்

இறைவனை அன்றி வெறெதையும்
ஏறிட்டுப் பார்க்க மாட்டேனென்றால்
எதனை எண்ணிநீ அஞ்சவேண்டும்
என்மனமே நீயும் சொல்லிடுவாய்

சொல், சிந்தை, மொழியாலே
சிந்தித்து அவனைப் போற்றிடவே
உலகில் வாழும் போதுகூட
உன்னை மாற்றுவார் எவர்சொல்லு

இரவும் பகலும் அவனையெண்ணி
உன்னத அன்பிலே மூழ்கினாலே
ஏதுமே உன்னையும் வஞ்சிக்காது
உள்ளமும் வீணிலே கலங்கிடாது

அவனுள் நீயும் வாழும்போது
ஆனந்தம் மேலிட ஆடும்போது
உலகம் போடும் தாளத்திற்கு
உடலும் மனமும் ஆடாது

உணர்ந்து இதனை நானும்சொன்னேன்
உன்னையும் என்னுடன் சேரச்சொன்னேன்
உவந்து என்னுடன் பாடச்சொன்னேன்
உன்னத அன்பினில் வாழச்சொன்னேன்

மத்திகிரி, 7-12-16, மதியம் 2.20 Sur 425, pa. 743

Song 588

நல்லது

சன்னிதி வந்தேனே
நிம்மதி பெறவேண்டி
என்நிலை சொன்னேனே
உன்னருள் தினம்வேண்டி

தகுதியைப் பாராது
தாங்குவாய் தயவுடன்
தமியனுக் கிரங்கியே
அருள்வாய் கனிவுடன்

மெளனமும் காப்பது
ஒருவிதம் நல்லது
உன்னிடம் சொல்வது
மட்டுமே சிறந்தது

பிறரும் புரியாமல்
இருப்பது வரமது
புரிந்த உன்னிடம்
வருவது உயர்வது

அவரச உலகிது
என்பது புரியுது
அடுத்தவர் நிலைகூட
நன்கு விளங்குது

அதனிடை வாழ்வது
வேதனை மிகுந்தது
அதையுமே புரிந்தபின்
இரக்கமே மிஞ்சுது

அவருடன் போட்டி
போடுவ தென்பது
அடியனுக் கியலாது
என்றுமே ஆனது

அதனால் உன்னிடம்
மட்டுமே சொல்லிட
அடிக்கடி வருவேனே
உந்தன் சன்னிதி

மத்திகிரி, மதியம் 2.50, 5-12-16

Song 587

குறை இல்லை

தனித்து நின்று புலம்பினாலும்
துணைக்கு அவனும் இருக்கும்போது
இனி எனக்குத் தாழ்மையேது
என்னை அறிந்து ஏற்கும்போது

கடந்த கால வாழ்வின்சில
காட்சி கண்முன் தோன்றும்போது
எனக்குள் குறுகி நிற்கும்போது
என்னையும் மன்னித்து ஏற்றுக்கொண்டான்

தைரியம் இழந்து தோல்வியுற்றேன்
தேறுதல் இன்றிச் சோர்வுகண்டேன்
என்மனம் என்னையே குற்றம்சொல்ல
எதிர்த்துப் பேச வார்த்தையற்றேன்

அந்நேரம் என்னிடம் வந்துநின்று
ஆறுதலான வார்த்தை சொல்லி
“உன் குற்றம் நானே போக்கிவிட்டேன்
இனிமேல் ஏதுமே இல்லை” என்றான்

உடனே பாரமும் போனதாலே
உள்ளமும் லேசாக ஆனதுவே
அதனைக் கொண்டாட எண்ணும்போது
புதிய பாடல் வந்ததுவே

தனித்து எப்போதும் நானுமில்லை
துணிவும் இன்றி வாழ்வில்லை
இறைவன் துணையாய் ஆனபின்பு
இனிமேல் குறையும் எனக்குஇல்லை

மத்திகிரி, 4-12-16, மதியம் 2.35