Monthly Archives: January 2017

Bhakti Song 614

கவலையில்லை

என்னோடே வீணே வழக்காடி
என்னென்ன ஆதாயம் நீயடைந்தாய்
என்மீது குற்றங்கள் சுமத்தியதால்
எவ்விதம் நீயும் பயனடைந்தாய்
ஒருபோதும் ஓய்வாக இருந்ததில்லை
உள்ளான அமைதியைக் கண்டதில்லை
பட்ட பாட்டிற்குக் கணக்குமில்லை
பாரம் சுமக்காமல் வாழ்ந்ததில்லை
தப்பிக்க எத்தனை எத்தனித்தும்
ஒருமுறைகூட நான் வென்றதில்லை
பெற்ற சிற்சில வெற்றிகளும்
நிரந்தரமாய் இங்கு இருந்ததில்லை
வழக்கு என்றுமே வந்தபின்னே
வாய்மூடி இருந்து பயனுமில்லை
என்பக்க நியாயத்தை எடுத்துரைக்க
என்னைவிட்டால் இங்கு யாருமில்லை
ஆயினும் உன்னிடம் வாதாடி
எவ்விதப் பயனும் கண்டதில்லை
முன்னமேநீ தீர்மானம் செய்தபின்னே
எதிர்வாதம் செய்வதில் பயனுமில்லை
தீர்ப்பு எதுவான போதினிலும்
திண்டாடப் போவதோ நானுமில்லை
ஏனென்று உனக்கு அதுதெரியும்
அதனாலே கவலையும் எனக்குமில்லை
மத்திகிரி, 30-1-17, இரவு 11.30

Bhakti Song 613

உனதென்று ஆனேன்

நான் உனதென நாதனே ஆனபின்
எனக்கென இங்கு ஏதுமே இல்லை
உனக்கு உள்ளதை எனக்கெனத் தந்தபின்
எனக்கெனத் தனியாகக் கேட்கவும் இல்லை
அன்றே என்னை ஆட்கொண்ட பின்னே
அடிமை என்றுதான் உன்னடி வந்தேன்
அதன்பின் என்னை நானுமே மறந்து
என்னையே நீயாள முழுமையாய்த் தந்தேன்
சுயபுத்தி சார்ந்துநான் சிலசெய்த போது
சரியில்லை என்றுநீ சொல்லி விட்டாய்
உன்சித்தம் மட்டும் ஆகட்டும் என்று
ஒருவார்த்தை பேசாது பணிந்து நின்றேன்
அறியாமை என்னும் மனயிருள் கவ்வ
அடிக்கடி தவறுகள் நான்செய்த போது
ஏற்றபடி நீ என்னைத் திருத்தி
மீண்டும் உன்பாதைக்கு ஓட்டியே வந்தாய்
நீகாட்டும் கருணையை நான் எண்ணும்போது
ஏனிந்தக் கரிசனை என்றுநான் எண்ண
நீடித்த பொறுமையின் எல்லையைக் காட்ட
நாயனைப் பலமுறை நீயுமே மீட்டாய்
இந்த உண்மையை உணர்ந்த பின்னாலே
உனதென்று என்னைநான் தந்துவிட்டேனே
ஏழை என்னையும் ஏற்றுக் கொண்டபின்
எனதென்ற எண்ணத்தை இழந்துவிட்டேனே
மத்திகிரி, 28-1-17 (29-1-17௭), இரவு 12.45

Bhakti Song 612

ஒரு ஏக்கம்

சந்தம் இசைத்து நான் பாடுகிறேன்
சன்னதி ஒன்றையே நாடுகிறேன்
சிந்தையால் உன்னையே சேவிக்கிறேன்
சேவடி தன்னிலே வாழுகிறேன்
முந்தய தீவினை போனதுவே
முப்பாழும் தன்னாலே நீங்கினவே
முக்தேசனே உன் சத்திய வார்த்தையால்
மும்மலங்கள் முற்றாய் ஓய்ந்தனவே
அண்டங்கள் அனைத்தும் படைத்தவனை
அறிந்திடும் மேன்மையைத் தந்தஉனக்குத்
தொண்டனும் எளிய சொல்கொண்டுமே
சொல்லிட வந்தேன் துதிகளுமே
சிலநொடி உன்னடி அமரும்போது
சீவனை உன்னுடன் இணைக்கும்போது
உள்ளத்தில் உவகை ஊற்றெடுக்க
உன்புகழ் பாடிடத் தோன்றிடுதே
எண்ணத்தால் உன்னைத்தான் எண்ணும்போது
என்னுளத்தில் ஆனந்தம் பொங்கிடுதே
உலகை அந்நேரம் நான் மறக்க
ஊனுடல் உனக்கென ஆகிடுதே
அந்தப் பேரின்ப வெள்ளத்திலே
அமிழ்ந்து திளைத்து மூழ்க்கும்போது
கரையேறி மீண்டும் வந்திடாமல்
அதனுள் ஆழ்ந்திட உள்ளம் ஏங்கிடுதே
மத்திகிரி, 28-1-17, (29-1-17) இரவு 12.15

Bhakti Song 611

தோல்வி தந்தாய்
இறுதியில் உன்பாதமே
வந்துநான் சேர்ந்தேன்
பலவிதம் போராடித்
தோற்ற பின்னாலே
இதுகூட நன்மைக்கு
என்றுநான் அறிந்தேன்
உள்ளான அகந்தையும்
அழிந்த பின்னாலே
சிறுசிறு வெற்றிகள்
பெற்றிட்ட போது
ஏறிய போதைக்கு
அளவுமே ஏது
எவரையும் மதிக்காது
என்னுள்ளம் திமிர
ஏற்ற நேரத்தில்
விழுந்ததுன் பிரம்பு
அடைந்த தோல்விக்கு
ஆயிரம் காரணம்
அறிவின் துணையினால்
நானுமே வைக்கலாம்
ஆயினும் உன்னிடம்
தோற்ற பின்னாலே
அதனையும் ஏற்றேன்
உன்ணெண்ணம் போலே
என்னுள்ளே தாழ்மையோ
இயல்பாக இல்லை
எத்தனை முயன்றாலும்
அகந்தையும் நீங்கலை
ஆயினும் என்னைநீ
ஆட்கொண்டதாலே
என்னையும் காத்திட
தோல்வியைத் தந்தாய்த்
இன்னும் என்மீது
இரக்கமும் வைத்ததால்
ஏற்ற நேரத்தில் காலத்தை
மீண்டுமே காத்தாய்
எஞ்சிய காலத்தில்
உன்சித்தம் செய்ய
அண்டியே வந்தேன்
திருவடி மீண்டும்
மத்திகிரி, 24-1-17, (25-1-17) இரவு, 12.15

Hybrid Nationalism

No human can remain alone without being influenced by others. Though there are some original thoughts, most of them, in the course of their development, influence and are influenced by other thoughts paving for the emergence of new kinds of thoughts.

For example, some of our critics see that what we do as Hindu bhaktas of the Lord and say it is simply a parallel of what they are doing in the church. In my response to such criticism, first, I say that we cannot remain in isolation in life. So naturally we are influenced by others.

But I try to do everything to experience and express my bhakti in Muktinath as my birthright. Of course, even what I inherited as my birthright wasn’t completely original as I’ve been influenced by so many other cultures and traditions. But, I can also point out that as a Hindu bhakta of the Lord, my life has so many parallels from my own Indian tradition rather than only aping the Church.

In fact the nine forms of bhakti (Navadana bhakti1) already cover almost all that we do as Hindu bhaktas, which one can also see in the Indian church tradition also. Both individual personal sadhana and corporate worship are part of our Indian (Hindu) tradition, as is well-documented from various references from Vedic times to the present day.

Although Indian Christianity inherited so many of its religious expressions from the West, still it is part of our Indian dharmic tradition and cannot escape from Hindu influences. I must acknowledge that the intercessory prayer that we do is the same as what Christians do, though such prayer is not completely absent in the Hindu tradition (kuttup prarthanai is a form of corporate prayer).

Often the criticism is levelled from the Hindutva group, assuming we are just Christianity disguised in Hindu form. Though we can counter their arguments by proving that it is our birthright to follow this path and we have no need to defend it, there is no point of explaining to them about our conviction, because once they have made up their mind about our approach to it is mere waste of time and words.

However as a counter argument, I would like to point out that what they promote as ‘Hindutva’ is nothing but a ‘hybrid variety’ which cannot naturally multiply itself like the original or desi (local) variety. Here I don’t need to take time to point out that this ‘Hindutva’ Nationalism is imported from Europe, particularly from Nazi German which is purely racial and divisive in nature. That is why no matter how they try to promote this kind of ‘hybrid nationalism’ artificially among Indians, it never induces a strong sense of true nationalism among the common masses as Mahatma Gandhiji managed to invoke by giving a call to fight against the British.

Gandhiji’s nationalism was inclusive and it never divided people based on any criteria. It didn’t create ‘the Other’ among Indians by creating any sense of hatred about the British. However, this ‘hybrid nationalism’ can survive only by creating ‘the Other’ just for the sake of survival.

I am a strong Nationalist, even to some extent an ultra-nationalist. But while I agree with some of their cultural nationalism, I am dead against the way it is promoted and sustained by creating ‘the Other’ so that it can be sustained.

If we study our own Indian tradition of both the ancient and recent past — this so-called ‘NATIONALISM’ is not the original part of our Indian or Hindu worldview. It is artificially induced in our society, and it still struggles to take root among the common mass.

As I pointed out in Understanding Hinduism, though the Right wing groups try to promote it by encouraging people to celebrate and participate in certain events which they think will sustain such Nationalism, considering the size of our population not even a fragment of our people have followed this hybrid nationalism. I have previously mentioned Kargil day, which most of us have now forgotten.2

In the more recent past, our P.M. Modi sent an invitation for people to send Diwali greetings to our soldiers, which is good and we all should do (I have done it). But again considering the size of our population, I think only a tiny fraction would have sent such greetings.

It is sad that in this way, we Indians have not had the spirit of Nationalism and don’t honour our soldiers in proper way which they deserve. Personally, I have great respect and I serve them when I get the opportunity. In 2014, one soldier travelling with me was coming to finish some work in Chennai from Delhi. I helped him carry some of his heavy luggage and also arranged to keep it at Raman’s house until he was to continue his trip to his native place in Karaikkal. I even dedicated the book Understanding Hinduism to the soldiers of India who are guarding our civilization.

But before we seriously take up any issue or principle, we should stop and think, read, understand, and reflect rather than suddenly changing our position based on emotion.

Here I need not give any reference about the way Nationalism came from outside India and wasn’t a part of our civilization’s worldview. Liah Greenfeld’s ‘Nationalism & Modernity’, (Critical Quest, New Delhi, (1995, 2012) will give short but precise details about the concept of Nationalism and its origin and development in the West. Of course the Indian Hybrid Nationalists (Hindutva) will reject any kind of scholarship from the west in a sweeping generalization as they cannot stand to face the sincere and scholarly critical views about them (except those who have converted to their ideology). But simply closing their eyes and rejecting others view won’t hide the truth forever.

So the parallel is inevitable in life. However, there are certain parallels which may look parallel but might be a product of something indigenous, not unlike this kind of hybrid nationalism which cannot be reproduced, like any other hybrid items that we have at present—in vegetable, fruits and in animals (birds, chicken and egg).

Dayanand Bharati

5-1-17, Mathigiri.

 

Endnotes

1. “[In the] Bhagavata Purana…we come across as many as nineteen different classifications of bhakti, ranging from a threefold devotion to a thirty-six fold devotion, although a ninefold devotion (7.5.23; 11.6.9) comprising sravanam (hearing, 11.6.9), kiertanam (chanting, 12.3.52), smarnam (remembering, 12.12.54), padasevanam (service at Bhagavan’s feet), archanam (offering worship), vandanam (praising, 11.27.9), dasyam (servitude and humility), sakhyam (friendship), atmanivedam (self-surrender, 11.29.34) is more frequently recognised and recommended.” (Nath, Vijay (2001). Puranas and Acculturation: A Historico-Anthropological Perspective, New Delhi: Munshiram Manoharlal. 2001, 173-174)

2. In my travels I have often noticed a lack of nationalism among Indians. As I wrote in Understanding Hinduism:

“On July 26, 2001, while I was at Ranikhet (in Uttarkhand) some of my shishyas (on my instruction) and I lit a candle to celebrate Vijay Divas (victory day for the Kargil war with Pakistan in 1999). But none of our neighbours lit any candle, though it was announced both in TV and radio calling people to celebrate the day nationwide. This suggests that a spirit of nationalism is not part of our tradition. Politicians and other patriots can at times host successful events, but a spontaneous spirit is lacking.

“This is not limited to Ranikhet as I have seen in various parts of India that people themselves do not voluntarily participate in patriotic acts. Badrinath shows that our feelings go towards dharma rather than towards nation:

“Nationalism arises in India not in response to any inner impulse of Indian society but as a Western graft. An outcome of a variety of very complex political and economic and emotional factors to which German romanticism had contributed greatly, nationalism had become by the nineteenth century a dominant passion of Europe. That passion was introduced into India artificially. Much of the Western history of nationalism came to be grafted upon Indian society whose traditions and values were rooted not in the concept of nationality, or rashtra, but in the idea of dharma, and the understanding of social relationships that followed from it.” (Badrinath, Chaturvedi (1993). Dharma, India and the World Order. Bonn: Pahl-Rugenstein. 1993, 103)”

Understanding Hinduism, New Delhi: Mushiram Manoharlal, 2005, pp. 295-296.

Bhakti Song 610

அவன்கைக் கருவி

நேரம் காலம் நமக்குத் தந்தான்
நிதியும் நலமும் சேர்த்துத் தந்தான்
நாலு பேர்க்கு நன்மை செய்ய
நம்மை மீட்டு வாழ்வும் தந்தான்
பெரியதாகச் செய்ய வேண்டாம்
பெயரும் புகழும் எடுக்க வேண்டாம்
பிறரும் கூட அறிய வேண்டாம்
முடிந்த சேவை செய்தால் போதும்
பிறரின் தேவை அவனே அறிவான்
பேணிக் காக்க அவனே வருவான்
உவந்து நாமும் இணைந்து கொள்ள
நமது பங்கை ஏற்றுக் கொள்வான்
வீண் வாதம் ஏதும் இன்றி
விருப்பு வெறுப்பு இரண்டும் இன்றிக்
கிடைக்கும் வாய்ப்பை எற்றுக் கொள்ள
இன்னும் அதிகம் அவனே கொடுப்பான்
பிறரின் தேவை மனதில் எண்ண
பெரியதாகும் நமது உலகும்
சுயநலத்தைக் குறைத்துக் கொள்ளப்
பிறரின் தேவை கண்ணில் தெரியும்
உள்நோக்கம் ஏதும் இன்றி
உதவும் போதும் அகந்தை இன்றி
இறைவன் கையின் கருவியாகி
இந்த உண்மை புரிந்து வாழ்வோம்
மத்திகிரி, 23-1-17, மதியம் 2.10

Bhakti Song 609

முறையிடும் உரிமை

சித்தமும் கலங்கிப் பித்தன்நான் தவிக்க
சித்தமும் கொள்ளாயோ தயவுமே வைக்க
சத்தமிட்டேநான் ஓலமும் இட்டாலும்
சற்றேனும் கொள்ளாயோ இரக்கமும் வைக்க
நித்தமும் பூமியில் எத்தனை தவிப்பு
நிலையற்ற வாழ்விலே நித்தமும் கசப்பு
எத்தனை இன்பத்தை எவ்விதம் தேடினும்
எல்லாமே மாயைதான் என்பதால் வெறுப்பு
உடலோடு மனதின் தேவைக்காய்ப் போராட்டாம்
ஊரோடும் உறவோடும் ஆடுறேன் சதிராட்டம்
இத்துடன் உன்சித்தம் தன்னையே எண்ணிட
என்னதான் செய்திட பதில்நீயும் சொல்லணும்
வேண்டாம் என்றெண்ணி விட்டோட முடியலை
வேண்டாத பாரத்தைச் சுமக்கவும் முடியலை
தானாக வந்ததே சுமையாகிப் போனபின்
நீதந்த பாரத்தை நானென்ன செய்வது
சுமக்கத் தந்ததைச் சுமந்துதான் ஆகணும்
மேலும்நீ வைத்தாலும் ஏற்கத்தான் வேண்டும்
வேண்டாம் என்றாலும் விடப்போவதில்லை நீ
விரும்பியே கேட்டாலும் தரப்போவதில்லை நீ
என்னாலே ஆவது முறையீடு செய்வது
அதன்பின்னே மெளனமாய் உன்சித்தம் ஏற்பது
இந்த உரிமைதான் எனக்குமே உள்ளது
இதைநீ உணர்ந்து கொள்வதே நல்லது
மத்திகிரி, 21-1-17, மதியம் 2.50

Bhakti Song 608

இலக்கைத் தெரிந்து கொண்டேன்

நான் என்ன செய்யட்டும் சொல்லிவிடு
நாளும் பொழுதும் நடத்திவிடு
உன்பேச்சை மீறியே நானறியேன்
உன்னடிமை இதைச் சொல்லிவைத்தேன்
ஒவ்வொரு நாளின் ஓட்டத்திலே
உன்னுடன் நானும் ஓடயிலே
ஒருபோதும் என்னை விட்டுவிட்டு
ஒருநாளும் நீயுமே ஓடவில்லை
தோளோடு தோள்சேர ஓடுகிறாய்
தேவைப்படும்போது தூக்கிக் கொண்டாய்
இளைப்பாறி நானுமே இரங்கி வர
இணைத்துக் கொண்டுமே ஓடுகிறாய்
என்னைப் பற்றியே எண்ணி நின்றால்
எச்சரித்து என்னை ஓட்டுகின்றாய்
பிறரின் செயலை நானும் சொன்னால்
பேசாமல் வாயைத்தான் மூடச்சொன்னாய்
எனக்கு நீவைத்த இலக்கை நோக்கி
இறுதி மட்டுமே ஓடச்சொன்னாய்
இடையில் வருவோர் போவோரெல்லாம்
என்பாரம் அல்ல என்று சொன்னாய்
இதையும் இப்போது புரிந்து கொண்டேன்
இலக்கை மட்டுமே தெரிந்து கொண்டேன்
முழு மனதுடனே ஓடிடுவேன்
முழுதாய் என்பங்கை முடித்திடுவேன்
மத்திகிரி, 20-1-17, இரவு 11.30

Bhakti Song 607

ஒரு வரம் கேட்கிறேன்

எண்ணாமல் எந்நாளும் இருந்திடுவேனோ
என்னுளம் வந்தபின் மறந்திடுவேனோ
உன்னாலே உருவாகி உலகிலே வந்தபின்
எந்நாளும் என்னையே எண்ணிடுவேனோ
கணந்தோறும் உனையெண்ணித் தொழுதிட வேண்டும்
உன்காவலில் நான்னென்னை மறந்திட வேண்டும்
அலைமோதும் எண்ணத்தை ஒருமுகமாக்கி
அத்தா உன்னன்பையே நினைத்திட வேண்டும்
நிகழ்வுகள் ஆயிரம் நிகழ்ந்திடும் போது
நினைவும் அவைவழி தொடர்ந்தே போகுது
நிகழ்வுடன் மனிதரின் தொடர்பையும் எண்ணி
அவர்களைப் பற்றிய எண்ணமும் கூடுது
உலகிடை நானுமே உழல்வதினாலே
உனக்கென நேரமும் அவற்றிடை இல்லை
ஆயினும் என்னுளம் நீ நின்றபின்னே
உன்னை மறப்பது எனக்கெளிதில்லை
அதனாலே மீண்டும் ஒருமுறை வந்தேன்
என்னன்பை உன்னிடம் சொல்லியே நின்றேன்
என்நேரம் உன்னையெண்ணும் எண்ணமே எனக்கு
வரமாக மீண்டும் தந்திடக் கேட்கிறேன்
மத்திகிரி, 19-1-17, மதியம் 2.20