Monthly Archives: January 2017

Bhakti Song 606

புரிஞ்சிருக்கு

மனம் போனபடி போகட்டுமா
இல்லை மதிசொன்னபடி கேட்கட்டுமா
இரண்டு வழியுமே வேண்டாமென
இறைவா உன்னிடம் வரட்டுமா
எது உண்மை என எனக்குள்ளே
எத்தனை கேள்விகள் தோன்றிடுது
எல்லாமே எனது கற்பனை என்று
இறுதியில் உள்ளமும் சொல்கின்றது
அன்றாட வாழ்வுமே கற்பனையா
அதிலே வாழ்வுமே சொப்பனமா
கற்பனையான சொப்பன மென்றால்
என்னிந்தப் பாடுகள் பொய்யாகுமா
உடலின் தேவைகள் பொய்யில்லையே
உள்ளத்தின் போராட்டம் பொய்யில்லையே
உடல் உள்ளம் இரண்டுட வாழும்
என்னிந்த வாழ்வும் பொய்யில்லையே
இந்த உண்மை புரிந்திருக்கு
உடலும் உள்ளமும் ஏற்றிருக்கு
இடையில் புகுந்த அறிவுமட்டும்
ஏனோ குழப்பம் விளச்சிருக்கு
என்ன செய்வது தெரியவில்லை
எதனை ஏற்பது புரியவில்லை
விடை தெரிந்த உன்னிடம்வந்தபின்
குழப்பம் சற்று குறைச்சிருக்கு
ஆயினும் அதிலும் சந்தேகம்
அடிக்கடி ஏனோ வந்திருக்கு
இறுதியாக இதற்கு முடிவு இல்லை
என்பது மட்டும் நன்கு புரிஞ்சிருக்குe=
மத்திகிரி, 13-1-17, இரவு, 8.30

Bhakti Song 605

நகைக்கிறான்

எண்ணி எண்ணி நகைக்கின்றான்
ஏளனமாய்ச் சிரிக்கின்றான்
என்ன வெல்லாம் சொன்னோமென
மீண்டும் நம்மைக் கேட்கின்றான்
எத்தனை போட்டோம் ஆர்ப்பாட்டம்
எடுக்காய் எத்தனை பேசிவிட்டோம்
அவற்றின் நினைவு இன்றில்லை
அக்கறை சற்றும் நமக்கில்லை
கூடிக் கூடி வாதிட்டோம்
கூடவே கேள்விகள் பலகேட்டோம்
மெத்தப் படித்தோர் எனக்காட்ட
மிஞ்சிய சொற்களை உதிர்த்துவிட்டோம்
கொண்ட கொள்கையில் நிலைக்கவில்லை
கூறிய கருத்துக்கள் புரியவில்லை
பேச்சின் திறனை க் காட்டிடவே
பேசிய பேச்சுக்குக் குறைவில்லை
தனித்து நிற்பவர் எனக்காட்டத்
தர்க்கங்கள் கூடப் பலசெய்தோம்
எதிர்க்கருத்துக்கு இடமில்லை
என்று பலரை முடக்கிவிட்டோம்
இறுதியில் தனியே விடப்பட்டோம்
இறைவனும் கூட கைவிட்டான்
ஆயினும் அகந்தைக்குக் குறைவில்லை
அடக்கம் சற்றும் வரவில்லை
“நான்” என்ற எண்ணம்கொண்ட
தற்குறி தன்னை த்தள்ளிவிட்டு
எளியவர் தன்னை ஏற்றுக்கொள்வான்
எள்ளி நகைத்து நமைப்பார்ப்பான்
மத்திகிரி, 12-1-17, இரவு, 1.30

Bhakti Song 604

கவலை இல்லை

வேண்டா நினைப்புக்கு
நேரமே இல்லை
விருப்பு வெறுப்பென்ற
நிலையுமே இல்லை
காலத்தை நேரத்தைக்
கணக்கிட்டு வாழ்ந்தேன்
கவலைகள் குழப்பங்கள்
மிகுந்திடக் கண்டேன்
ஆயினும் அனைத்தயும்
உன்னிடம் சொன்னேன்
அதன்பின் என்னுள்
நிம்மதி கண்டேன்
ஏடுகள் ஆயிரம்
புரட்டியே பார்த்தேன்
எண்ணங்கள் பலவற்றை
எழுத்திலே வடித்தேன்
ஆயினும் அவற்றாலே
அறிவும் மயங்கிட
அனைத்தையும் உனக்கென
சமர்ப்பணம் செய்தேன்
இனி எனக்கென
நினைப்புமே இல்லை
உன்னை அன்றி
எண்ணமும் இல்லை
காலத்தை நேரத்தைநீ
ஆளுகை செய்திட
அதைப்பற்றிக் கவலையும்
எனக்கினி இல்லை
மத்திகிரி, 9-1-2017, மதியம் 2.10

Bhakti Song 603

இனிச்சுமப்பேனோ

உன்னிடம் வந்து
சொன்ன பின்னாலே
வீணான பாரம்
எனக்கேது மனதாலே
சொல்லிட நீயே
சொல்லியே தந்தாய்
“சுமக்க நானும்
ஆயத்தம்” என்றாய்
ஆயினும் சிலநேரம்
சஞ்சல மனதோடு
நான்படும் பாடு
பெரிதாகிப் போகுது
வீணாகச் சுமப்பதால்
பயனேதும் கிடையாது
எடுத்துத்தான் சொல்லுறேன்
ஏற்கவும் மறுக்குது
இதுஒன்றும் புதிதான
போராட்டம் கிடையாது
ஒருபோதும் இதன்மீது
வெற்றி கிடையாது
ஆயினும் அறிவேனே
மாற்று அதற்கொன்று
அதையே செய்கிறேன்
வழக்கமாய் நானின்று
மனமென்ன சொன்னாலும்
என்மதி அறியுமே
உன்னிடம் ஆறுதல்
நானுமே பெறுவேனே
இனியும் சுமப்பேனோ
என்பாரம் வீணாலே
எனக்கென நீவந்து
தோள்தந்த பின்னாலே
மத்திகிரி, 8-1-17, மதியம் 2.20

Bhakti Song 602

சமன்செய்யவேண்டும்

நான்செய்யும் காரியம்
நன்மையில் முடியட்டும்
நாலுபேருக்கு அதனால்
பயன்கொஞ்சம் கிடைக்கட்டும்
தேவையற்ற விதமாய்க்
காலத்தைப் போக்காது
தெய்வமே நானுந்தன்
சித்தம்மட்டும் செய்யட்டும்
உனக்குள்ளே வாழ்வது
உன்னத ரகசியம்
உனக்கென வாழ்வது
பேரின்பப் பரவசம்
ஆயினும் உலகிடை
நீவைக்கும் போது
உன்ணெண்ணம் அறிந்து
வாழ்வது அவசியம்
இரண்டு நிலையிலும்
எனைநீயே வைத்தாய்
இவற்றை இரண்டையும்
சமன்செய்யச் சொன்னாய்
ஒருபக்கம் சாயாது
சீர்தூக்கச் சொன்னாய்
உன்னுடன் இரண்டிலும்
வாழ்ந்திடச் சொன்னாய்
ஆயினும் இதுஒன்றும்
எளிதாக இல்லை
ஒன்றிலும் நிலைக்கின்ற
புத்தியும் இல்லை
எனவே உன்துணை
எனக்குமே வேண்டும்
இரண்டையும் சீர்தூக்கி
நீதர வேண்டும்
மத்திகிரி, 4-1-17, மதியம் 2.05

Bhakti Song 601

நீதந்த வாழ்வு

உன்னால் பெற்ற வாழ்க்கையிது
உன்னைப் போற்றும் நேரமிது
என்னை அறியும் காலமிது
உணர்ந்தே வந்தேன் இப்போது
காலை மாலை என்றில்லை
காத்துக் கிடக்கத் தேவையில்லை
சன்னதி என்றும் திறந்திருக்க
தாமதம் செய்யத் தேவையில்லை
குளித்து முடித்து உடுத்திக்கொண்டு
ஆயத்தம் பலவும் செய்துகொண்டு
படையல் ஏதும் எடுத்துக்கொண்டு
உன்னிடம் வரத் தேவையில்லை
நின்று, நடந்து, கிடந்தாலும்
வேலைகள் பலவும் செய்தாலும்
இடையிடை நான் உன்னை
நினைக்க நொடிகள் சிலபோதும்
இந்த பேறு நான் பெற்றேன்
இதனை எண்ணி வாழ்ந்திடுவேன்
உன்னிடம் பெற்ற அருளினையே
உணர்ந்து உன்னைப் பணிந்திடுவேன்
மத்திகிரி, 4-1-2017, காலை 5.30

The Other and Going Overboard

Certain ideologies in the world need to create ‘the other’ to survive. This ‘other’ need not be a challenger or a counter-movement but should be an opponent. This enemy not only presents the positive value of their own ideology but also creates fear and insecurity in the mind of the people among whom they want to promote that ideology. They accuse ‘the other’ in order to keep their own survival. In most cases, this fear and ‘the other’ are created for political reasons or for their own survival rather than the interest of the common good of all mankind.

This practice goes by many names: religious fundamentalism, fanaticism, fascism, etc. But the promoters of such ideologies forgot that in the long run, any ideology created with a sense of hate for ‘the other’ will eventually divide itself, creating many ‘others’ amongst itself.

For me, religious fundamentalism in whatever forms it takes (‘cultural nationalism’, ‘way of life’, etc.) does the same. This not only creates a division among people, but also creates a negative perspective on everything outside of that ideology.

Sometime this spirit is also found among us who want to follow the Lord as Hindu bhaktas. Consciously or unconsciously we create ‘the other’ who follows the Lord in a traditional way or other ways they found appropriate for their need. But the unique teaching of the Muktiveda in the words of Dr. Paul Brand is: Continue reading

Song 600

இறைவன் சிரிக்க

எனக்கெனக் கடமைகள் இறைவனும் வைக்க
நானதை ஏற்று அவனுடன் நடக்க
துணைக்கு என்னுடன் வருபவர் எவரெனப்
பின்னிட்டு நானும் திரும்பியே பார்க்க

“தாமதம் செய்வதும் ஏனின்னும்” என்று
தட்டியே என்னை அவனுமே கேட்க
“நம்முடன் கூட பிறரும் இணைய
எத்தனை தெம்பும் நமக்கும் கிடைக்கும்”

என்றே நானும் பதிலும் கூற
இனிய முறுவல் செய்தே அவனும்
“சரி” என எனக்குச் சம்மதம் சொல்லித்
துணைக்கு வருவோரை எதிர்கொள்ள நின்றான்

பலரும் வந்தார் என்னுடன் இணையப்
பரவசம் கொண்டேன் துணையாய் அவர்வரப்
பயணம் தொடங்கிய பாதி வழியில்
பலரும் சென்றார் அவரவர் வழியில்

எஞ்சிய சிலபேர் இறுதி வரையில்
என்னுடன் வருவார் என்ற நிலையில்
இலக்கை அடையும் நேரம் பார்த்து
அவரும் சென்றார் தம்தம் வழியில்

இறுதியில் இறைவன் என்னையும் பார்க்க
நானும் அவனுடன் சேர்ந்துமே நகைக்க
உண்மை நிலையை நானும் உணர
இலக்கை அடைந்தேன் கடமை முடிக்க

மத்திகிரி, 3-1-2017, இரவு 11.30

Song 599

இனியேது

துன்பங்கள் துயரங்கள்
இனியெனக் கேது
துணையாக நீயும்
உடன் வரும்போது

தனிமையும் வெறுமையும்
தமியனுக் கேது
தயவுடன் நீயென்னைத்
தாங்கிடும் போது

போனதின் வருவதின்
பாரமும் ஏது
நிகழ்காலம் என்னுடன்
நீவாழும் போது

நண்பர்கள் பகைவர்கள்
என்பவர் ஏது
நல்லவர் அனைவரும்
என்றிடும் போது

நாட்டமும் வெறுப்பென்று
பேதமும் ஏது
நன்மையை மட்டும்தான்
சொல்லிடும் போது

நான்-நீ என்று
பிரிவினி ஏது
நானும் நீயுமொன்றாய்
வாழ்ந்திடும் போது

இதையுமே சொல்லிட
வார்த்தைகள் ஏது
எனக்கு நீயே
எல்லாமான போது

2-1-2017, இரவு 11.10 மத்திகிரி