Monthly Archives: April 2017

Bhakti Song 637

அமைதியாய்த் தூங்கு

எனக்கென்ன தயக்கம்
இனியில்லை கலக்கம்
உன்னிடம் சொல்லிட
இனியில்லை வெட்கம்

தனித்து வருந்திடத்
தேவையும் இல்லை
தஞ்சம் அடைந்தபின்
துயரினி இல்லை

தேவை இதுவென
நீயுமே அறிவாய்
கேட்குமுன் தந்து
நீயுமே அருள்வாய்

ஆயினும் கேட்கவும்
தெரியா திருந்தால்
அறிந்தே அதையும்
நீயே தருவாய்

இப்போ எனது
தேவை எதுவென
எனக்கு நிச்சயம்
தெரியவே இல்லை

எது செய்தாலும்
நீதான் செய்கிறாய்
என்பதும் எனக்கு
விளங்கவும் இல்லை

புயலின் நடுவே
அகப்பட்டுக் கொண்ட
படகுபோல் எனது
நிலையும் ஆச்சு

போகும் திசையும்
அறியா ததினால்
கவலை மட்டும்
அதிகம் ஆச்சு

படகின் அடியில்
தூங்கிடும் உன்னை
தட்டி எழுப்பிட
மனதும் இல்லை

ஆயினும் நிலைமை
மோசம் ஆனால்
அழைப்பேன் உன்னை
தயக்கமும் இல்லை

ஆகையால் நீயும்
அமைதியாய்த் தூங்கு
அடிமையும் காவலில்
தவறுவ தில்லை

மத்திகிரி, 27-4-2-17, இரவு, 11.10

Tamil Song 307

குரங்கின் தீர்ப்பு

சரியா தவறா தெரியவில்லை
எடுத்துச் சொல்ல எவருமில்லை
சரியென சிலபேர் சொல்கின்றார்கள்
தவறென பலபேர் மறுக்கின்றார்கள்

குரங்கு பங்கிட்ட உணவாக
ஆனது இறுதியில் நிலைஎனது
குரங்கு யாரிதில் என்பத்துதான்
கேள்வியும் இங்கே இப்போது

தனியே வாழ்வது தவரென்றார்கள்
பிறருடன் வாழ்வதே சரிஎன்றார்கள்
இரண்டிலும் எவ்விதப் பயனுமில்லை
பிறந்ததே இங்கு தவரென்றார்கள்

சரியோ தவறோ பிறந்துவிட்டோம்
பிறருடன் இணைந்தே வாழ்ந்திருக்கோம்
தனித்தே வாழ நினைத்தாலும்
பிறரை அதற்கும் சார்ந்திருக்கோம்

இதையும் சரியாய் புரியாது
இடையில் சிலபேர் நுழைந்துகொண்டு
குரங்குபோல் தீர்வு காண்கின்றார்கள்
இறுதியில் நமக்குமே பயனுமின்றி

அந்தக் குரங்கு வேராருமில்லை
அதுதான் நமது மனசாட்சி
அதற்கே அதிகம் இடம்கொடுத்தால்
இறுதியில் நடக்கும் அதனாட்சி

அது சொல்வதை கேட்டுக்கனும்
அப்புறம் அலசி பார்த்திடனும்
நமது வழக்கை தீர்த்து வைக்க
பிறரின் உதவியை நாடனும்

மத்திகிரி, 5-5-2017, இரவு, 10.10

Bhakti Song 636

மவுனமாய் நிற்கிறேன்

புரிந்திடும் திறமை என்னிடம் இல்லை
புரிந்தாலும் செயல்பட வலிமையும் இல்லை
எளிதாக வந்து எனக்கு நீ சொன்னபின்
இத்தனை ஆராய்ச்சி தேவையே இல்லை

உன்னை முற்றுமாய் உணர்ந்தவர் யாரு?
உன்சொல் அனைத்தையும் புரிந்தவர் யாரு?
அண்டத்தைப் படைத்து—காத்து—அழிக்கும்
ஐயனே உன்னை உரைப்பவர் யாரு?

எனக்குள்ள எல்லையை நானுமே அறிவேன்
என்திறன் எதுவென நானுமே உணர்ந்தேன்
அலைகடல் துரும்பென உலகினில் வாழும்
அடிமையின் வாழ்வின் வெறுமையை அறிவேன்

நொடிகள் தோரும் நிலையை மாற்றி
நிலையில்லா மனதிலே ஆட்டம் போட்டு
தடுமாறித் திகைத்து வழிமாறிச் சென்று
ஒருநாளும் அமைதி என்னிலே காணேன்

அலசடிபட்டு அடிபட்டு வதைப் பட்டு
அன்றாட வாழ்வில் அகப்பட்டு உதைபட்டுக்
கந்தலாய்ப்போன இந்த நிலையிலே
கடவுளே உன்னை எப்படி அறிவேன்

வாய்மூடி மவுனமாய் வார்த்தைகள் இன்றி
வந்து உன்முன் நிற்கவும் அஞ்சி
ஒதுங்கி ஓரமாய் ஒடுங்கியே நிற்கிறேன்
உன்னருள் பார்வைக்குக் காத்துமே கிடக்கிறேன்

மத்திகிரி,26-4-17, மதியாம் 2.00

Tamil Song 306

கொண்டாடி வாழலாம்

அவசரம் ஏதுமில்லை
அவசியம் ஒன்றுமில்லை
அன்றாட வாழ்வையும்
கொண்டாடி வாழலாம்

எதற்குமே நேரமில்லை
என்றுதான் ஓடுறோம்
எதற்காக ஓடுறோம்
என்பதே தெரியாமல்

வீட்டுக்கு வந்தாலும்
வெளிப்பாரம் போகாது
வெளியிலே போனாலும்
வீட்டுப்பாரம் குறையாது

எதற்காக வாழறோம்
எவர்க்காக உழைக்கிறோம்
என்பதும் தெரியாமல்
ஏன்னோ வாழறோம்

எனக்காக வாழலை
என்றுமே சொல்லுறோம்
எல்லோரும் அதைத்தான்
பிறரிடம் சொல்கிறார்

பிறர்பாரம் சுமக்கிறேன்
என்றுமே சொல்லி
தனபாரம் சுமப்பதை
அறியாமல் இருக்கிறோம்

பிறருடன் நாம்வாழ
நம்முடன் பிறர்வாழ
பிறர்க்காக வாழாமல்
பிறருடன் வாழ்கிறோம்

இந்த உண்மையை
புரிந்து கொண்டாலே
அன்றாட வாழ்வையும்
கொண்டாடி வாழலாம்

மத்திகிரி, 3-5-2017, இரவு 11.30

Bhakti Song 635

கொஞ்சித்தான் பாரேன்

இதுதான் உண்மை ஏற்றுக் கொள்வாய்
ஏழை என்னை நீ ஏந்திக் கொள்வாய்
தவழவும் தெரியாத குழவியாய் வந்தேன்
கரங்களில் ஏந்திக் காத்துக் கொள்வாய்

உன்னிடம் வந்து நிற்கும் போது
உடலும் மனமும் தன்போல் தளருது
எடுப்பார் பிடிப்பார் இருக்கும் போது
என்னவோ உடலும் ஆட்டம் போடுது

தனித்தே நீரில் தள்ளிவிட்டால்
தத்தளித்தேனும் வெளியே வருவேன்
என்னை ஏந்தி நீ நீந்தும் போது
எத்தனை சுகமாய் உன்மேல் சாய்வேன்

செல்லம் கொடுத்துக் கெடுத்தது யாரு?
சொன்னதை எல்லாம் கேட்டது யாரு?
ஒற்றைப் பிள்ளை போல் கண்ணுள் வைத்துப்
பொத்திப் பொத்தி வளர்த்தது யாரு?

பழகிப் போன வழக்கத்தினாலே
அடிக்கடி சற்று அடமும் பிடிப்பேன்
இதுவரை விட்டுக் கொடுத்தது போல
இன்னும் விட்டுக் கொடுப்பது யாரு?

அதை மட்டும் என்னிடம் எதிர்பாராதே
ஆத்திர அவசரப் பட்டுவிடாதே
செல்லமாய் எடுத்துக் கொஞ்சியே சொன்னால்
சொன்னதைக் கேட்பேன் செய்துதான் பாரு!
மத்திகிரி, 26-4-2017, மதியம் 3.05

Tamil Song 305

பேச்சே இல்லை

யாரிடம் சொல்லி
நானிப் புலம்ப
எவரிடம் சொல்லி
வீணாகக் கலங்க
புரியாத மனிதர்
பலர் சூழும்போது
பேசிப் பார்ப்பதில்
பயனுமே ஏது

ஆயிரம் நெருக்கம்
சூழ்ந்திடும் போது
அடுத்தவர் பற்றிய
எண்ணமும் ஏது
சூழ்நிலைக் கைதியாய்
வாழ்கின்ற போது
விடுதலை வேண்டி
எவரிடம் கேட்பது

நானே விரும்பி
ஏற்றுக் கொண்டபின்
பிறர்மீது குறைகூறி
பயனுமே இல்லை
காலம் தன்போல்
விடைதரும் வரையில்
வீணே புலம்பினும்
விடைகாண்ப தில்லை

பொன்னாலே விலங்கை
பூட்டிக் கொண்டேன்
புரிந்தேதான் வந்து
மாட்டிக் கொண்டேன்
காவல் கைதியாய்
இதுவரை உள்ளேன்
தண்டனை எப்போது
தெரியாது இருக்கேன்

பிணையில் எடுக்க
எவருமே இல்லை
வழக்கு முடியும்
வாய்ப்புமே இல்லை
தீர்ப்பே இன்னும்
தெரியாத போது
விடுதலை என்ற
பேச்சும் ஏது

மத்திகிரி, 3-5-2017, இரவு 11.10

Bhakti Song 634

இதுதான் என்னிலை

உண்மையாய் உன்னை அறியவில்லை
உனக்கென நானும் வாழவில்லை
உழல்கிறேன் மனக் கும்பியிலே
வெளியே வரவும் மனதுமில்லை

கள்ளம் கபடம் போகவில்லை
கசப்பும் வெறுப்பும் நீங்கவில்லை
என்னமாய் என்னை ஏய்க்கிறேன்நான்
இதுதெரியாமல் நானும் இல்லை

உன்னை முற்றுமாய் நம்பவில்லை
உறுதியாய் உன்னைப் பற்றவில்லை
உதட்டால் உதிர்க்கும் சொற்களிலே
துளியும் உண்மை இருக்கவில்லை

சந்தேகம் என்னும் பேயுடனும்
சஞ்சலம் என்ற நாயுடனும்
சற்றேனும் நானும் தயக்கமின்றிச்
சஞ்சரிக்கின்றேன் அனுதினமும்

இதுதான் என்னிலை இப்போது
இதைநான் மறுக்கத் தெம்பேது
விடுதலை பெறவும் விருப்பமில்லை
வெளியே சொல்லவும் வழியில்லை

உள்ளே வைத்துக் குமுறுகிறேன்
உனக்கு மட்டுமே சொல்லுகிறேன்
கேட்பதும் மறுப்பதும் உன்பாடு
சொல்வது மட்டுமே என்பொறுப்பு

மத்திகிரி, 25-4-17 (26-4-17) இரவு 12.15

Tamil Song 304

இறுதித் தீர்ப்பு

நிமிடம் தோறும்
எண்ணத்தை மாற்றி
நேரம் தோறும்
குணத்தை மாற்றி
வார்த்தையில் ஆயிரம்
வித்தைகள் காட்டி
வாழ்கிறோம் வாழ்வில்
வேடிக்கைக் காட்டி

தனது தவறை
ஏற்பதும் இல்லை
பிறரின் பிழைகளை
பொறுப்பதும் இல்லை
சொல்லில் மனதின்
கோபத்தைக் காட்டி
சுட்டே எரிக்கிறோம்
வார்ததைகள் கொட்டி

தன்பக்க செயலைச்
சரியெனக் காட்டி
தர்க்கங்கள் மூலம்
வாதத்தைக் கூட்டி
பிறரின் நியாயத்தை
ஏற்கவும் மறுத்து
பேசுவோம் பலவித
திறமைகள் காட்டி

இறுதியில் காலமும்
தனது தீர்ப்பை
இதுதான் என்று
சரிவர காட்ட
மறுக்கவும் முடியாது
ஏற்கவும் இயலாது
மனதுனுள் வைத்து
மருகுவோம் நாமும்

மத்திகிரி, 1-5-2017, காலை 3.45

The Best Religion

What are the qualities, aims of a good religion? There are many religions; what makes sanatana dharma stand out of the rest and be the best? I don’t mean any disrespect to other religions by this, but I’d like to hear a clear-cut answer (I usually get a diplomatic answer to this!). Your answer is going to count a huge deal for me because from the answers you gave previously I’ve developed a trust in you and by guiding me at this juncture you would save me from travelling half the distance in a lesser good path.

 

I think by reading my previous response on Truth, etc. you might easily guess what would be my response to this question also. First of all, every religion is man-made. Even this sanatana dharma is our own construction particularly in the context of facing the western (or Oriental) criticism about our indigenous faiths which they wrongly called ‘Hinduism’.

As I was born a Hindu, which is now accepted even by our Constitution as a (personal) religion, I am happy to be a Hindu, even without understanding all its various precepts. So my attitude with others religions are the same: each one has the right to remain in the religion in which they were born, or choose to go out of it.

Thanks for your encouraging words; I’m happy that at least there is one person on this earth who thinks that he trusts me. But I warn you not to do that. We don’t know each other and by reading a few responses if you come to this conclusion I need to be blamed for brainwashing you within a short time period with my responses which can be refuted easily by others.

How do you know the other paths you might want to travel are “lesser good paths”? This sounds like an absolute statement to me.

The first thing that you need to do as a young man is to have patience. If you want to become a body-builder, can you do it overnight? Similarly in this spiritual path you cannot decide by reading some responses to your questions by an unknown stranger like me.

Here, my humble advice would be: If you believe in God, wait upon Him/Her patiently. Continue to pray that He/She would send the right guru to guide you, gradually taking you along with him/her for maturity slowly but steadily.

This is also my experience. When we seek sincerely and honestly, God will send the right guru in our life. Then we need to have the discerning spirit to know that he/she is the guru for whom we are longing for. Then TRUST him/her and make an initial commitment—though you may not understand what all s/he says to you or feel comfortable with it. Trusting, making an initial commitment, and being ready to follow the teaching are the first steps to not become a ‘jack of all trades’ when it comes to spirituality.

But how do we know he/she is the right guru? One small tip: Anyone not keeping any personal interest with any selfish motive, but keeping only your need and interest and wishing to serve you for your own good could be that guru.

Bhakti Song 633

மீட்கும் வழியைப்பாரு

குறை சொல்லிப் பயனென்ன
குணம் காண மறுத்தென்ன
குருவே உன்சரண் வந்தபின்
கோபம் கொண்டல் லாபமென்ன?

சொல்லிச்சொல்லிச் சோர்ந்த்திட்டலும்
சொல்ல மறுத்துப் போய்விட்டாலும்
செக்கு மாடுபோல் உன்னைச்சுற்றி
வருவதன்றி வழியும் என்ன?

மன்னித்தாலும் மாறவில்லை
மந்த புத்தியும் போகவில்லை
மனமென்னும் குரங்குடன் நான்
படும் பாடும் ஓயவில்லை

பணிவிற்கும் குறை வில்லை
பக்தி பண்ண மறக்கவில்லை
பாழும் இந்த மனதினிலோ
மாற்றம் ஒன்றும் காணவில்லை

இதெல்லாம் நீ அறியாயோ
என்நிலையும் நீ புரியாயோ
இதன்பின் வழக்காடினால் உனக்கு
என்னபதில் நான் சொல்லவோ

சரிவிடு கோபிக்காதே வீண்
சண்டை செய்ய வந்திடாதே
இன்னும் கொஞ்சம் இரக்கம்காட்டு
என்னை மீட்கும் வழியைப்பாரு

மத்திகிரி, 25-4-17, மதியம் 2.10