Monthly Archives: April 2017

Tamil Song 303

என்னிடம் கற்கவேண்டும்

எனக்கென்னத் தெரியும்
எதுதவ ரென்று
எடுத்துச் சொல்லனும்
இதுசரி என்று

சுயமாய் சிந்திக்கத்
தெரியாத போது
என்மீது குறைசொல்லி
பயனினி ஏது

எடுப்பார் கைப்பிள்ளையாய்
இதுவரை இருந்தேன்
எவரென்ன சொன்னாலும்
சரியென்று கேட்டேன்

குணநலம் அறியா
பிள்ளைபோல் வாழ்ந்தேன்
குழந்தைபோல் இருப்பது
நலமென நினைத்தேன்

அறிவிலும் வளரலை
ஆற்றலும் எனக்கில்லை
ஆழ்ந்து சிந்திக்கும்
பக்குவம் எனக்கில்லை

புரிந்து கொள்ளப்
பொறுமையும் இல்லை
பேதைமை குணத்துக்கு
எல்லையே இல்லை

எப்படியோ என்
வாழ்வுமே போச்சு
இறுதி ஓட்டம்
ஓட வந்தாச்சு

தள்ளாடித் தடுமாறித்
மெதுவாக ஓடறேன்
எவரேனும் கைதந்தால்
ஓட்டதை முடிப்பேன்

என்னிட மிருந்து
பிறர் கற்கவேண்டும்
எப்படி வாழக்
கூடாது என்று

அந்த ஒன்றைத்
தவிர என்னில்
நன்மை ஒன்று
எதுமே இல்லை

மத்திகிரி, 28-4-2017, மதியம் 1.30

Bhakti Song 632

காப்பதுன் பொறுப்பு

நீதான் இதுவரை அழைத்துமே வந்தாய்
நீந்திக் கரைசேரக் கைதந்து காத்தாய்
நானில்லை நீதான் என்பதை அறிந்தேன்
நாளும் உன்பாதம் பணிந்துமே நின்றேன்

உறவாகி என்னிடம் நீ வருகின்றபோது
உளமாரப் பணிந்து நான் தொழுகின்றபோது
இருவர் இடையிலே உருவாகும் அன்பு
உணர்த்திடச் சொல்லில்லை இதையுமே நம்பு

உனது உறவை அறிகின்ற போது
உறவாட வருகிறேன் நானுன்னைத் தொழுது
தொழுகின்ற போது உன் உறவை எண்ணிடத்
தேம்பியே அழுகிறேன் உன்னருளை நினைந்து

பெற்றது கொஞ்சமோ புனிதனே நானுனைப்
பற்றிய நாள்முதல் அடைந்தேன் புண்ணியம்
குறையென்ற சொல்லொன்று இதுவரை அறியேனே
கும்பிட்டு வாழ்கின்ற பேற்றினைப் பெற்றபின்

தகுதியைப் பாராது தருகின்ற போது
பெறுவதில் தடைகளும் எனக்கிங்கி ஏது
என் தகுதியாக நீயான பின்பு
ஏதுமே பிரிக்காது காப்பதுன் பொறுப்பு

இறுதியில் கரையேறி வருகின்ற போது
இருகரம் நீட்டி எனை ஏற்கின்ற வரையில்
கண்ணீரின் அருவியால் உன்தாளினைக் கழுவியே
காலம் காலமாய் வாழ்கிற வரையில்—நீதான்

மத்திகிரி, 24-4-2017, இரவு 11.30

Tamil Song 302

சொல்லிப் பயனில்லை

பழசும் புதுசும் பார்த்துவிட்டேன்
கொள்கை பலவும் கேட்டுவிட்டேன்
எடுத்தேன் கவிழ்த்தேன் என்போர்க்கு
ஏதுமே சரியில்லை தெரிஞ்சிக்கிட்டேன்

தத்துவம் பலவும் பேசிடுவார்
தர்க்கங்கள் அனைத்தையும் செய்திடுவார்
தன்வரை என்று வரும்போது
சொன்னது அனைத்தும் மறந்திடுவார்

ஏட்டிக்குப் போட்டி பேசிடுவார்
எதிர்வாதம் பல செய்திடுவார்
எடுத்து அவர்பிழை காட்டும்போது
எவரும் சரியில்லை என்றிடுவார்

வாய்ச்சவடாலுக்கு குறைவில்லை
வாதம் செய்வதும் குறையவில்லை
வாழ்க்கை என்று வரும்போது
செய்வது ஒன்றும் சரியில்லை

இவரைச் சொல்லிக் குற்றமில்லை
இடம் கொடுத்தோர்தான் சரியில்லை
நாமும் அவரில் ஒருவறேன்றால்
இதையும் சொல்லிப் பயனில்லை

மத்திகிரி, 24-4-2017, மாலை 6.30

Bhakti Song 631

பாட அழைத்தாய்

எதற்காக நீ என்னை உன்னிடம் அழைத்தாய்
எதைச்சொல்லித் தரவென்று என்பிழை பொறுத்தாய்
குணம் நலன் அறியாத சிறுவனாம் என்னை
உன்துதி தினம்பாட உருவாக்கி வைத்தாய்?—எதற்காக….

உனக்கென உனைநாடும் அடியவர் உண்டு
உன்சித்தம் அறிந்திட்ட பக்தர்கள் உண்டு
உன்சொல் அதன்படி வாழ்பவர் உண்டு
இவை ஏதுமே இல்லாத என்னையும் கண்டு—எதற்காக…

நல்லதை நாளும் நாடிய தில்லை
நல்லோர் கூட்டத்தில் சேர்ந்ததும் இல்லை
நாளும் பொழுதும் எனக்கென வாழ்ந்த
நலம் அறியாத பேதையாம் என்னை—எதற்காக…..

மனதின் தேவையை மட்டுமே அறிந்தேன்
மாமிச சிந்தையில் அனுதினம் வாழ்ந்தேன்
மானுட வாழ்வின் மேன்மையைத் துறந்து
மதிகெட்டுப் பலவழி அலைந்தே திரிந்தேன்—எதற்காக….

உடலின் உருவில் உவகை கொண்டேன்
உயர்குடிப் பிறப்பெனக் கர்வமும் கொண்டேன்
என்திறமையில் நானும் நம்பிக்கை வைத்தேன்
எவரையும் மதிக்கா அகந்தையும் கொண்டேன்—எதற்காக….

இறுதி வரையில் விடைதெரியாது
எவருக்கும் உந்தன் செயல் புரியாது
எதற்கோ என்னை உனக்கென அழைத்தாய்
அதைமட்டும் சொல்லிப் பாடிட வைத்தாய்—எதற்காக….

மத்திகிரி, 24-4-2017, இரவு 9.10

Tamil Song 301

பரிதாப நிலை

என்னிலை எண்ணினால்
எத்தனைப் பரிதாபம்
எப்படிச் சொல்வேன்
அந்தோ பாவம்

அறிவிலும் மனத்திலும்
இருக்குது போராட்டம்
ஆயினும் அதையேற்க
மறுக்குது என்மனம்

வார்த்தைக்கும் வாழ்வுக்கும்
இல்லையே சம்பந்தம்
ஆயினும் அதைப்பற்றி
எத்தனை அலட்சியம்

சொல்லுக்கும் செயலுக்கும்
உள்ளது வெகுதூரம்
ஆயினும் அதையெண்ணி
வரவில்லை எனில்வெட்கம்

வார்த்தையில் வித்தைக்காட்டி
வாதத்தால் மெருகேற்றி
உத்தமன் எனக்காட்டி
நடிக்கிறேன் நாடகம்

பார்க்கவும் ஆட்களில்லை
பாராட்ட எவருமில்லை
ஆயினும் அதைப்பற்றி
கவலையும் எனக்கில்லை

நானே எழுதி
நானே நடித்து
நானே பார்த்து
ரசிக்கிறேன் நாளும்

ஆயினும் ஆட்டம்
முடியும் போது
உலகுக்கு உண்மை
தெரியும் நிச்சயம்

அதுவரை பலவித
வேடமும் போட்டு
அழுது சிரித்து
வாழ்கிறேன் நாளும்

மத்திகிரி, 25-4-17, (26-4-17) இரவு 12.40

Self-Interest

Now to your other question:

Do you agree with me that anything done for promoting survival chances is good (with long-term prospects considered)?

 

My response is a big NO. Your question comes in the context of your statement, “We sacrifice something because we are likely to receive something back and anything that promotes ones survival chances is good.”

Only keeping your personal interest at the core and sacrificing something to receive something back either for short-term or long-term prospects never brings personal satisfaction. At the end of Mahabharata, Vidura clearly states, “For the sake of a family, a member (of that family) may be sacrificed; for the sake of a village, a family may be sacrificed; for the sake of a town, a village may be sacrificed; and for the sake of one’s own soul, the earth may be sacrificed. [Vidura to Dhritarastara] (62:11)— M.N.[Manmatha Nath] Dutt, Mahabharata, Delhi, Parimala Publications, 1988. P. 401

But when we read such statements in any scripture out of context then we will misinterpret and misunderstand them. For example, when a sannyasi sacrifices this world (with all its pleasure) for the personal need of mukti, he becomes selfish. The Upanishads clearly prescribe that “Neither by work, nor by progeny, nor by wealth one attains mukti but only through renunciation.” {Brhad-aranyaka Upanishad, 4.4.22)

But the same sannyasi dharma also demands that once a sannyasi claims that he found his mukti through his sacrifice (not coming back to this world by rebirth etc.), he is under a moral or spiritual obligation to serve others ‘selflessly’ to help them to find the same TRUTH. This is one of the main teachings of Buddhism also (as Bhodisatta comes back to the society to help others).

As a sannyasi I never agree with this dictum that only by renouncing everything one can attain mukti. Our same Indian tradition points that to attain mukti there is not only one way.

Here’s what I’m trying to say: no religion promotes sacrificing for the sake of keeping your personal interests in mind, or even just for survival. A normal human being who has a conscience can never do that and still remain happy or survive. That is why we are called ‘social animals’. This is completely different from individualism and an individualistic approach to life.

Bhakti Song 630

வேண்ட வாரீர்

அடியாரே வாரும்
அண்டுவோம் திருவடி
அண்டமெல்லாம் காக்கும்
அவனது மலரடி
ஆதி அந்தமாய்
நிற்கும் பெரும்நிதி
அண்டினோர்க் கெல்லாம்
அவனே இனிகதி

நேற்றாகி இன்றாகி
நாளையும் ஆகி
நிலைநிற்கும் பரம்பொருள்
தானுமே ஆகி
ஆதியாய் அந்தமாய்
அவனியைத் தாங்கி
அருளினான் கிருபையை
எளியவன் ஆகி

உருக்கொண்டு வந்தான்
உலகினைக் காக்க
உதிரம் சிந்தினான்
நம்மையும் மீட்க
உயிர்த்தே எழுந்தான்
விண்ணகம் சேர
விரைந்தே வருவான்
நம்மையும் சேர்க்க

இனியென்ன துன்பம்
எதற்கினி அச்சம்?
மரணத்தின் கூரொடித்த
மன்னவன் இருக்க
நிலையான வாழ்க்கையை
நமக்குமே அருள
நித்தமும் நம்முடன்
வாழ்ந்துமே இருக்க

இதைக் கொண்டாடிட
எம்முடன் வாரீர்
இருகரம் கூப்பித்
தொழுதிட வாரீர்
பதமே பணிந்து
பாடலாம் வாரீர்
பாருளோர் உய்ய
வேண்டலாம் வாரீர்

16-4-17, மத்திகிரி, மதியம் 2.1௦

Discerning the Truth

“How can we know we are on the right path”?

This is a relevant question and issue. What is right or wrong is very relativistic and we cannot give any absolute uniform answer to this. What looks right to one person may be wrong for another person. For example, arranged marriage is considered wrong in western society, but it is considered correct one in our society.

The question of right and wrong is decided by the respective worldviews of the societies. For example in Indian (and other Asian) societies, for the sake of the welfare and interest of the family, the individual has to sacrifice personal desires in his life; and a family should do the same for the sake of the community; and a community should do it for the sake of the society; the society should do it for the sake of the nation. In the west, it is quite the opposite where individual rights get priority.

Though every society is influenced by the worldview of other societies, the basic worldview doesn’t disappear easily or radically. One society may integrate both good and bad views from another society, but it will take a long time and the society has to pay a cost.

For example, due to the outside influence of Islam, Christianity, and the west, Indian society has received many new aspects in its worldview, but it has not given up its core values quickly. That is why even today most of the youths who go outside Indian to earn money, still do it keeping the need of parents and siblings in mind, even sacrificing personal interests and needs.

At the same time, he is also influenced by the values of those societies and countries where he migrated. He cannot overcome his conscience overnight and become a non-Indian completely. Even if he tries to do, his conscience will prick him and won’t allow him to enjoy his life based on the new values which he tries to adopt from another society.

So right and wrong is relativistic and we cannot give a uniform solution. But as change and continuity are the basic tenants of our Indian worldview, we also receive new values while keeping the old ones—both good and bad. Here each individual has to work out her own creed to decide what is right or wrong.

 

In response, the student wrote:

There can be many relativistic rights and wrongs but there can only be THE TRUTH. What should be the aim of our actions. I think it should be survival. We sacrifice something because we are likely to receive something back; anything that promotes one’s survival chances is good. That is why IMMORAL acts like murder, treachery, etc are wrong as they are likely to render trouble when people do it. Do you agree with me that anything done for promoting survival chances is good (with long-term prospects considered)?

 

Dear Sherlock

Again the so-called TRUTH is relativistic. What is true to one need not be true to another and what is true in one situation need not be true in another time. And this truth, if it is related with ethics and moral issues, definitely becomes relativistic. Each situation demands its own assessment. But if it is related with God, religion or spirituality, there is no shortcut and clear-cut one time answer to this. If there is only one universal TRUTH, then why all are not following it?

Killing a person is murder and will receive punishment. But if it is done to defend oneself or one’s nation (like in war) then it is not considered murder but self-defence. But can self-defence always be decided from the person’s point of view? For example all the claims about so-called ‘fake encounters’ by the police cannot be decided by common people. The courts can decide about them, based on the evidence and arguments presented before it. Several war-time crime trials in international courts are not acceptable by others according to their self-defence. How we are going to judge about the killing of several thousands of Tamilians in Sri Lanka? Though I am against all kinds of militant activities, war-time crimes cannot be justified in the name of opposing militants.

This is a big subject and we two cannot resolve it.

Now to come to the question about Truth in religion/spirituality. Every religion/sect claims that what it promotes is the only absolute truth and the rest are not. But how can we judge this? My solution is to make some serious commitment which convinces you. Then travel in that path with single-minded devotion to see whether that particular claim is true or not for you.

At the same time I have to warn you that you should not think that I am promoting some kind of ‘situation ethics’. I am dead against it. And this is also a big subject for two of us to discuss and decide. However I can say out of my personal experience how I found my absolute TRUTH.

This I can explain by giving a personal example. As a sannyasi I am not suppose to take care of anyone. But for the last twenty years I have been taking care of my mother she has been living with me permanently for the last seven. Though my other siblings literally begged her to come and stay with them, she refuses to go and only wants to stay with me as I take care of her 24×7. That is why I cannot even go out much and am confined within the house. I only see three people in a day: my mother, one of my shishyas who lives on the first floor, and the domestic help. My everyday life is confined within the four walls of my room, hall, kitchen and bathroom. Rarely do I go outside even the gate.

Even I abandoned my ashram for the sake of my mother, though I prefer to go and live there with my own quiet and calm life as a recluse. It is situated in a beautiful quiet and calm place near the national forest in a cool place. Now I’ve come and live a city for the sake of my mother. When others hear about it, they were really surprised to see how I manage to survive.

Here comes the Indian worldview in which mother is even worshiped more than God.1 But as a sannyasi I am not expected to take care of her as there are other relatives who are ready to take care of her. At the same time I cannot fulfil my other dharma as a sannyasi: to serve my shishyas. They also request me to come and visit them, which I cannot do as I have to take care of my mother. In such a scenario, I found my dharma and truth in Muktinath.

As a bhakta of my guru Muktinath, whom others call Jesus, He helps me to understand my dharma based on His absolute Truth: love God and love your neighbour. If you cannot love those whom you see and serve, you cannot love and serve God whom you cannot see.

For the last 35 years I have chosen my path as I found my Truth in Muktinath. Then I made a personal commitment and gave some time to prove that He is the guru whom I was searching to found answer to my questions in life (as you ask now). When I was convinced that He is the one, I never made a permanent commitment to Him, but gave Him a chance to prove Himself that He is that TRUTH. Then it was a long but very difficult journey. It took several years for me to understand to make a final total commitment to Him—even with several mistakes along the way.

To give a short summary: Truth is not absolute; but once you find the TRUTH which you are searching for then it becomes absolute for you.

So this is my long response to your one line question about Truth.

 

Endnotes

  1. Greater than ten teachers is the preceptor: greater than ten preceptors is the father: and greater than ten fathers is the mother. The mother is greater than even the earth. There is no guru greater than the mother. [Anushasana-parva, 105.14-5; also Shanti-parva, 108.16-7.]— Chaturvedi Badrinath, The Mahabharata: An Inquiry in the human condition, New Delhi, Orient Longman, 2007, p.360

It is only the mother who gives comfort and heals those in distress. Only that long does a person feel protected as long as the mother is alive; without her, he feels he is unprotected wholly. [Shanti-parva, 266.26]—ibid. p.361 [There is a Tamil Proverb that says, “Once mother is gone, one won’t get welfare”]

maybe poor, he is still rich on entering his home, calling out to his mother.[Shanti-parva, 266.27]—ibid. p.361

Himself now a father, and a grandfather too, and of age one hundred, he behaves with his mother as if two years old.[Shanti-parva, 266.28]—ibid. p.361

Therefore, in the Mbh., and in the dharmashastra-s too, there is nothing more reprehensible than to disregard one’s mother.[See Shantiparva, 108.13,28-30] The father may be repudiated but never the mother.—ibid. p.361

Bhakti Song 629

புதுப்பாடல் தோன்றும்

உனக்காக ஒருபாடல்
நானிங்கு பாட
உணர்வோடு இதயத்தில்
நானுன்னை நாட
எனக்காக வாழ்கின்ற
எண்ணத்தை நீக்க
இதுபோன்ற தருணங்கள்
ஆயிரம் வாய்க்க

நடமாட முடியாத
நிலைவந்த போதும்
நாள்தோறும் வாதைகள்
பலவந்த போதும்
தேகமும் ஒடுங்கியே
செயலற்ற போதும்
தெய்வமே உனைப்பாடும்
பேறுஒன்றே போதும்

எந்த நிலையிலும்
எனைநீ வைத்தாலும்
எதிர்க்காத மறுக்காத
மனமொன்றைத் தாரும்
வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
உன்செயல்என்று எண்ணி
வள்ளலே உனைப்போற்றும்
மானமொன்றே வேண்டும்

இதுபோன்ற உறவொன்றை
எவரிங்கு காண்பார்
என்போன்ற நீசனை
எவரிங்கு ஏற்பார்
உன்போன்ற உயர்ந்தவன்
ஒருவனே அன்றி
என்போன்ற எளியோரை
எவரிங்கு மீட்பார்

தொங்கினாய் தருவினில்
தெளிவாகக் காட்ட
தெய்வத்தின் தன்மையைப்
பாரோர்கள் பார்க்கச்
சிந்தினாய் குருதியை
எம்மையும் மீட்க
தேகத்தைத் தந்தாய்
ஆகுதி ஆக்க

இதை எண்ணும்போது
என்னுள்ளம் நெகிழும்
என்னிலை எண்ணிடத்
தளருது உள்ளம்
ஆயினும் உன்னருள்
அதனையும் மீட்கும்
அதை எண்ணும்போது
புதுப்பாடல் தோன்றும்

மத்திகிரி, 14-4-17, மாலை 6.45

Bhakti Song 628

வீணாகச் சுமக்கிறேன்

வேண்டாத சுமையாக
என்னையே சுமக்கிறேன்
விழுந்தாலும் எழுந்தாலும்
திருவடி வருகிறேன்

மாறாத மனதினிலே
மாற்றமும் காண்கிலேன்
மனதுடன் போராடி
நாள்தோறும் தோற்கிறேன்

ஏதேனும் செய்யென
ஏங்கியே வருகிறேன்
இதற்குமேல் ஆகாது
தாங்காது தவிக்கிறேன்

வேறேதும் காரணம்
நீயுமே சொல்லாதே
வேதனைத் தீயிலே
மீண்டுமே தள்ளாதே

நானாக மீண்டிட
வழியேதும் காணேனே
வேறேதும் வழியின்றி
மீண்டுமே வந்தேனே

கேட்டாலும் மறுத்தாலும்
இனியுன் பாடு
வேறொரு புகலிடம்
எனக்கினி யேது

மத்திகிரி, 12-4-17, இரவு 11.05