Bhakti Gita Chapter 10

பத்தாம் அதிகாரம்

 

முக்தி

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. உண்மையை உலகுக்கு எடுத்துரைக்க

உலகினிலே வந்தேன் மனுவாக.

 

 1. உண்மையை உள்ளபடி தேடுவோர்கள்

என்வாக்கை நல்லபடி நாடுவார்கள்.

 

 1. சத்தியத்தை நீங்கள் அறிந்ததனால்

சத்தியம் அளிக்கும் முக்தியினை.

 

 1. என்னடி யாராய் வாழ்பவர்கள்

இந்த உண்மையை அறிந்தவர்கள்.

 

(மானிடர்கள் அதற்குக் கூறியது)

 

 1. எதற்கும் அடிபணிந்து வாழவில்லை

பிறர்தரும் முக்தியோ தேவையில்லை.

 

(முத்தேசன் கூறினான்:)

 

 1. பாவத்திற்கென்றே தம்மைவிற்றோர்

அதற்கே அடிமை ஆகிடுவார்.

 

 1. பரிவுடன் உங்களை மீட்பதனால்

பெறுவீர் உண்மை முத்தியினை.

 

(முனிவர் கூறினார்:)

 

 1. உங்களை மேற்கொண்டு ஆளுவோர்க்கு

உள்ளபடி நீங்களும் அடிமையாவீர்.

 

 1. நன்மை எதுவென அறிந்திருந்தும்

நாடி அதன்படி வாழ்ந்திராமல்

 

 1. மனம்போன போக்கினில் வாழ்வதினால்

குற்றமே செய்தீர் மனசாட்சியில்.

 

 1. ஊத்தைச் சடலத்தை, உப்பிருந்த பாண்டத்தை

பாவத்திற்கென்றே விருந்தாகப் படைத்து

 

 1. இச்சைகளுக்கென்று மனதில் இடமளிக்க

வித்தாகி அவைஉம்மைப் பாவத்தில் வாழவைக்கும்.

 

 1. பாவத்தில் போட்ட வித்துமோ முளைத்து

மரணத்தை நிச்சயம் உண்மைiயாக்கிடும்.

 

 1. பாவத்தின் முடிவோ நிலைநின்ற மரணம்

பரமனின் அருள் தரும் முக்தியும், வாழ்வும்.

 

 1. அந்தகாரத்தினின்று நம்மையும் மீட்டு

முக்தேசன் தரவந்தான் உன்னதவாழ்வு.

 

 1. முக்தி அளிக்க அவனும் வந்ததால்

முக்தேசன் என்ற திருப்பெயர் கொண்டான்.

 

 1. பரிகாரம் அவனாகிப் பாவத்திற்கென்று

பாவியை மீட்கும் இறைவனு மானான்.

 

 1. தேகத்தில் நாம்செய்த பாவமும் போக்க

மானிட உருக்கொண்டு நம்மிடைவந்தான்.

 

 1. நம்தன்மை அவனுமே தன்னுடலில் ஏற்று

நமக்காகப் பலியாகி நம்மையும் மீ.ட்டான்

 

 1. மரணத்தின் நித்தியக் கொடுங்கோலை நீக்கி

தன்மரண சாசனத்தால் வாழ்வும் அளித்தா.ன்

 

 1. மரண இருளிலே வாழ்ந்திடும் நமக்கு

முக்தி அருளினான் தானும் மரித்தே.

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. நித்திய வாழ்க்கை நான் அளிப்பதனால்

நிச்சயம் அவருக்கு அழிவு இல்லை.

 

 1. அபயம் அளிக்க நானிருக்க

ஆபத்து இல்லை அவருக்கென்றும்.

 

(முனிவர் கூறினார்:)

 

 1. கறை, குறை நம்மில் படியாவண்ணம்

ஒளியின் மைந்தராய் வாழவென்று

 

 1. பாவம் நிறைந்த உலகினின்று

காத்தான் நம்மைத் தன்னை யளித்து.

 

 1. ஆண்டவன் ஆன்மா உள்ள இடத்தில்

அண்டா அடிமைத் தன்மை என்றும்.

 

 1. முக்தி அளித்த ஈசனுமே

தந்தான் ஆன்ம சுதந்திரமே.

 

 1. மீண்டும் அடிமை ஆகாவண்ணம்

நிற்போம் உறுதியாய் உலகின்முன்னம்.

 

 1. பாவவிடுதலை பெற்ற நாமும்

பரமனின் சீடராய் ஆனதினால்

 

 1. பரிசுத்த வாழ்வுடன் பரமபதம்

நிச்சயம் பெறுவோம் பலனாக.

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. என்னுடன் என்றும் நீங்கள் வாழ

ஏற்ற இடம் ஒன்று என்னிடம் உள்ளது

 

 1. அவ்விடம் வந்து என்னுடன் வாழ

வருவேன் மீண்டும் அழைத்துச் செல்ல.

 

(முனிவர் கூறினார்:)

 

 1. தன்னுடைய பிள்ளையாக நம்மையும் மாற்ற

தன்மைந்தன் தன்னையும் தானே அளித்து

 

 1. ஏற்ற சமயம் வந்த போது

மீட்பை நமக்கு அளித்தான் இறைவன்.

 

 1. ஆகையால் இனியும் அடிமைகள் அல்ல

ஆனீர் சொந்தம் அவனுக்கென்றும்.

 

 1. உங்கள் நிமித்தம் உவந்தே நாங்களும்

இறைவனுக்கென்று நன்றியும் உரைத்தோம்.

 

 1. பரிசுத்த ஆவியால் புனிதம் அடைந்து

உண்மையில் நீங்களும் நம்பிக்கைவைக்க

 

 1. அநாதியாய் உம்மை அறிந்த ஆண்டவன்

அன்புடன் மீட்டான் ஆவியை அளித்து.

 

(மானுடர் கேட்டனர்:)

 

 1. ’அனைவரும் மீட்பைப் பெறவும் முடியுமா?

அறிந்திடநாங்களும் விரும்பியேவந்தோம்’.

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. பரம பதமடையப் பலரும் முயன்றும்

பாடுகள் கண்டு பயந்து விலக

 

 1. குறுகிய வழியில் துன்பங்கள் அடைந்து

நித்திய வாழ்வில் நுழைவோர் குறைவே.

 

 1. வழியாய் நானும் வந்தேன் உலகில்

அழிவே இல்லை என்வழி வந்தால்.

 

(முனிவர் கூறினார்:)

 

 1. பெருமை படைத்தோர், பெரும்பலம் படைத்தோர்.

உய்யும் வழியை நன்கு உணர்ந்தும்

 

 1. மாந்தரின் மதிப்பை மட்டுமே நாடி

மறுத்தனர் ஐயன் திருவடி தேட.

 

(முத்தேசன் கூறினான்:)

 

 1. ஒருவர் துதியை மற்றவர் விரும்பி

மனிதர் அளிக்கும் மாண்பை நாடுவோர்

 

 1. எவ்விதம் நம்பி என்னிடம் வருவர்

இறைவன் அருளும் மாண்பை ஏற்க?

 

 1. துச்சமாய் உலகில் கருதப்பட்டோரும்

துன்பப்பட்டோரும் திருந்திய தீயரும்

 

 1. நிச்சயம்நுழைவர் இறைவன் ஆட்சியில்

என்மேல் வைத்த நம்பிக்கையாலே.

 

 1. இதனைக் கண்டு இதயம் திருந்தா

மாந்தர் என்றும் இறைவனையறியார்.

 

 1. படித்த பலரும் பழமைவாதியும்

மறுத்தனர் இவ்விதம் முக்திவாழ்வை.

 

[முக்தியோகம் என்ற பத்தாம் அதிகாரம்

இத்துடன் நிறைவுற்றது.]