Bhakti Gita Chapter 19

பத்தொன்பதாம் அதிகாரம்

 

உலகநாதன்.

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. படைப்பிற்கு முன்னிருந்து பரமதந்தையே

பகிர்ந்து எனக்களித்த உந்தன் மகிமையில்

 

 1. பாருலகோரெல்லாம் மீண்டும் அறிந்திட

மேன்மை யாக்கிடு உந்தன் மாட்சியில்.

 

 1. ஆதியும், அந்தமும் ஆகி நின்றேனே

முதலும், முடிவும் ஆகி வந்தேனே.

 

(பக்தர்கள் கூறினார்கள்:)

 

 1. இறைவனின் பூரணமகிமை தன்னை

ஆண்டவன் தன்னிலே கொண்டிருந்தான்

 

 1. அகிலம் முழுதும் தன்வார்த்தை யாலே

ஆதரித்து அவன் காத்து வந்தான்

 

 1. ஆதியில் உலகைப் படைத்தவன் நீயே

விண்ணும், மண்ணும் உன் கைவண்ணம்

 

 1. ஆயினும் அனைத்தும் மறைந்து போக

அனைத்தையும் நொடியில் மறைத்திடுவாய்

 

 1. என்றென்றும் உள்ள ஏகன் நீயே

இல்லை உனக்கு முடிவு என்றும்

 

 1. அனைத்தும் படைத்துக் காத்த உன்போல்

உலகில் ஒன்றும் தோன்ற வில்லை

 

 1. படைப்புத் தொடங்கிய காலம் முதல்

பரமனாக நீ மட்டும் இருந்தாய்

 

 1. தோன்றிய அனைத்தும் பறைசாற்றும்

தெய்வமே உன் உயர் மகிமையினை

 

 1. உருவமே இல்லா இறைவனைப் போலே

முக்தேசன் வந்தான் உலகினிலே

 

 1. விண்ணும், மண்ணும் அனைத்துடனும்

தோன்றி மறைந்திடும் காட்சியிலும்,

 

 1. படைத்தவை அனைத்தும் அவனின் மூலம்

என்றே அவையும் பறை சாற்ற,

 

 1. முதலும் ஆகி நின்றவனே இங்கு

முழுமையாக்கினான் வையகத்தை,

 

 1. இறைவனின் சாட்சியாய் என்றுமவன்

இருக்கிறான் படைப்பின் மாட்சியிலே.

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. ஆகாயம், பூமி அனைத்தின் மீதும்

அதிகாரம் என்னிடம் கையளித்தான்

 

 1. அனைவரின் ஆன்மா மனசாட்சி

அறிவேன் நானே உள்ளபடி

 

 1. அவரவர் செயலுக்கு ஏற்ற பலன்களை

அளிப்பவன் நானே அறிந்திடுவாய்

 

 1. அபயம் என்னிடம் உனக்குண்டு

தோற்றமும், மரணமும் என்கணக்கு

 

 1. ஆதியும், அந்தமும் ஆனதினால், நீ

அஞ்சாமல் என்னைச் சரணடைவாய்.

 

(பக்தர்கள் கூறினார்கள்:)

 

 1. பரம்பொருளாக நம்மிடை இருந்து

பக்தர் சகாயம் என்றானான்

 

 1. இறைவன் நமக்கே அவனானான்

அனைத்துமே படைத்தும் நம்மிடைவந்தான்.

 

 1. நாமும் அவனுள் நிலைத்திருப்போம்

நம் ஆதாரம் அவன் ஆனதினால்.

 

 1. இருபுறம் கூருள்ள ஆயுதமாம் [

இறைவனின் ஒவ்வொரு வார்த்தையுமே.

 

 1. ஆவியும், மனதையும் பிரித்தெடுக்கும்

உயிருள்ள வார்த்தை அவன் வாக்கே

 

 1. மறைவான ஒன்றும் அவனுக்கில்லை

மண்ணிலும், விண்ணிலும் வேறெங்கும்

 

 1. பதுங்க நமக்கோர் இடமில்லை

பரமனின் பார்வையில் நாமொளிய

 

 1. தூய்மையும், உண்மையும் ஆகிவந்தான்

துங்கவன் பாரினை உய்க்க வந்தான்

 

 1. அவன் காக்க ஒன்றும் அழிவதில்லை

அவன் நீக்க ஒன்றும் இருப்பதில்லை

 

 1. ஞானமும், அறிவும் நாதனுள்ளே

நாடியே நின்று நிலைத்திருக்கும்

 

 1. அனைத்தையும் ஆளுகை செய்திடவே

உண்டு அவனுக்கு அதிகாரம்

 

 1. மண்ணான நம் தேகத்தையும்

மாற்றுவான் அவன்தன்மகிமையாலே

 

 1. அனைத்தையும் அவன்தன் வரம்பினுள்ளே

அழைத்திடும் வல்லமை கொண்டுள்ளான்

 

 1. உன்னாட்சி என்றும் நிலைநிற்கும்

உன்கை செங்கோல் உயர்ந்திருக்கும்

 

 1. நீதியின் அரியணை நிலைத்திருக்கும்

நீதியாய் உன்னாட்சி நடப்பதாலே

 

 1. முக்தேசன் என்ற நாமத்தின் முன்

முழங்கால் யாவும் பணிந்து நிற்கும்

 

 1. வாயால் போற்றி வணங்கிடுவர்

வையத்து மாந்தர் உன் நாமத்தையே

 

 1. ஆண்டாண்டு காலம் ஆண்டிடுவான்

அவனாட்சி என்றும் முடிவதில்லை.

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. உண்மை, சத்தியம், ஜீவனும் நானே

உலகம் உய்ய வழியும் ஆனேன்

 

 1. பரம்பொருளை எளிதில் அடைந்திடவே

பாரில் வேறு வழியும் இல்லை

 

 1. ஆன்ம உணவாகி, அவனிவந்தேன், எனை

அண்டினோர் என்றும் பசித்திருக்கார்

 

 1. ஜீவ நீராய் நானிருக்க, எனை

நாடினோர் தாகத்தால் தவித்திருக்கார்

 

 1. அவர்க்கு நான்தரும் அமிர்த தீர்த்தம்

முக்தியின் ஊற்றாக நிலைத்திருக்கும் வாழ்வில்

 

(பக்தர்கள் கூறினார்கள்:)

 

 1. மரணத்தை அழித்து மீட்டெடுத்தான்

முக்தேசன் நமக்கு வாழ்வளித்தான்

 

 1. நித்திய வாழ்வினை நிலைநிறுத்தும்

நற்செய்தி அவன் நமக்களித்தான்

 

 1. நேற்று, இன்று, நாளையாகி

நிலைநிற்கும் ஈசன் முக்தேசன்.

 

உலகநாதன் என்ற பத்தொன்பதாம் அதிகாரம்

இத்துடன் நிறைவுற்றது].