Bhakti Gita Chapter 21

இருபத்தோரம் அதிகாரம்

 

நன்மை, தீமை போராட்டம்

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. நீரில் வாழும் தாமரை இலைபோல்

சீடர்கள் உலகில் வாழ்ந்திட வேண்டும்

 

 1. உலகை நீங்கியே வாழ்ந்திடாமல் அதன்

கறைபடாமல் எந்தை காத்திடவேண்டும்

 

 1. உலகிற்கு மட்டுமே உரியோர் அல்லாமல்

என்போல் அவரும் இருந்திட வேண்டும்.

 

(ஒரு பக்தன் கூறினான்:)

 

 1. உலகப் பொருள்களில் இச்சை கொள்வோரிடம்

இறையன்பு என்றும்நிலை நின்றிடாது

 

 1. கண்களின் இச்சை. தேகத்தின் இச்சை

ஜீவனின் பெருமை, நன்மை பயக்காது

 

 1. உலகாசை கொண்டோரும் இறைவனைச்சாராது

உலகத்தைச் சார்ந்தே வாழ்ந்திருப்பார்

 

 1. இவை அனைத்தும் ஒழியும் உலகவாழ்வோடு

இறைச்சித்தம் செய்வோரே நிலைத்துவாழ்வர்

 

 1. உலகத்தின் நட்பும் உண்டாக்கும் தீமை

இறைவனுக் கெதிராய் ஆக்கிடும் நம்மை.

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. உலகோடு ஒட்டி ஒழுகுவோர் தம்மை

உலகோரும் நிச்சயம் விரும்புவார் உண்மை

 

 1. என்னைப் பின்பற்றி உலகை நீங்கினால்

எல்லோரும் வெறுப்பார் இதுவும் உண்மை

 

 1. ஆனாலும் தளராதே உலகைநீ வெல்வாய்

என்னைப்போல் நீயும் வெற்றியும் காண்பாய்

 

 1. சோதனை தாண்டி தொடர்ந்துன்னைக் காக்க

தினம், தினம் நீயும் தியானித்து வேண்டு.

 

(சீடர்கள் கூறினார்கள்:)

 

 1. நம்முடன் இருக்கும் நாதன் உள்ளவரை

உலகின் வல்லமை நம்மையும் ஆளாது

 

 1. இறைவனின் அருளாலே மறுபிறப் படைந்தோம்

இந்த நம்பிக்கையால் இவ்வுலகை வெல்வோம்

 

 1. அகதிபோல் இவ்வுலகில் வாழ்கின்ற வரையில்

ஓயாமல் போராடு உனைத்தாக்கும் இச்சையுடன்.

 

(ஒரு பக்தன் கூறினான்:)

 

 1. உலகாசை எல்லாம் ஒவ்வொன்றாய் ஒழித்து

ஐயனை ஆக்கு உன்னங்கக் கவசமாய்

 

 1. அவனோடு நானும் அவனுள் மரிக்க

இவ்வுலகம் மரித்தது என்னோடு அங்கு

 

 1. தீமையை வெறுத்து நன்மையை நாடு

தீமை வெல்லாமல் அதனுடன் போராடு

 

 1. இறைவனும் வந்தான் இதற்கென்றே உலகில்

இதைஉணர்ந்து நீயும் நன்மையால் வெல்லு

 

 1. இறைவனுள் பிறந்தோரை அணுகாது தீமை

எந்நாளும் பாவச்செயல் அவராலே வராது

 

 1. தீமையை வல்லமையால் நீயும் மேற்கொள்ள

இறைவனும் உனைமீட்கத் தன்கிருபை அளிப்பான்

 

 1. தீமை உனை அணுகாது வல்லமையால் காப்பான்

திடன்கொள், தளராதே இறைவனே மீட்பான்

 

 1. இந்த உண்மையினை இவ்வுலகில் உரைக்க

ஐயன் அளித்தான் தன்வார்த்தையின் வல்லமை

 

 1. எல்லாத் தீமையிலும் எனைக்காத்து இரட்சிப்பான்

அவனாட்சி வைபவத்தில் என்னையும் சேர்ப்பான்

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. மரண பரியந்தம் உண்மையாய் இருந்தால்

முடிசூட்டி உனையும் மேன்மை யாக்குவேன்

 

 1. உலகை வென்றோர்க்கு வெகுமதியாக

என்னோடு ஆட்சியை என்றுமே தருவேன்

(பக்தன் கூறினான்:)

 

 1. என்னுடன் மட்டுமே போராட்டம் எனக்கில்லை

பல்வேறு நிலையிலும் எனக்குண்டு போராட்டம்

 

 1. இவ்வுலக அதிகாரம் ஏகாதிப வர்க்கம் இருள்

உலகை ஆண்டிடும் பொல்லாத ஆவிகள்

 

 1. ஆதிக்க வெறியுடன் அடக்கி ஆளும்தன்மை

பிறர் உரிமைமறுக்கும் பேய்க்குண மாந்தர்கள்

 

 1. போன்றபல தீமையுடன் போராட்டம் எனக்குண்டு

எழுவோம் நாம் எதிர்க்க, இறைவன் துணைகொண்டு

 

 1. தீங்கு வரும்போது திறனை இழக்காமல்

திண்ணமுடன் நாம்நிற்போம் தீமைக்கு எதிராய்

 

 1. இறுதி வெற்றிமட்டும் என்றுமே நமதாகும்

இதைப்பெற அணிவோம் ஆன்மீகக் கவசம்

 

 1. தீமையுடன் போராடத் தேவையான வல்லமை

இறைவனே தருவான் எல்லாவித ஆயுதமும்.

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. இருளும் உம்மை மேற்கொண்டிடாமல்

ஒளியில் நடவுங்கள் உண்மை மனதோடு

 

 1. ஒளியாய் நானிருக்க என்னையும் நம்புங்கள்

ஒளியின் பிள்ளையாய் உலகில் வாழுங்கள்

 

(பக்தன் கூறினான்:)

 

 1. உண்மைஒளி அளிக்க உலகில் வந்தான்

இருள்தன்னில் இல்லாத இறைமைந்தன் அவனே

 

 1. தீமை செய்வோரும் வெறுப்பாரே அவ்வொளியை

அவர்குற்றம் வெளிக்காட்டும் ஐயனை மறுப்பாரே

 

 1. உண்மைவழிநடப்போர் ஒளியின் பின்செல்வர்

அவரின் செயலெலாம் ஆண்டவனின் செயலாகும்

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. உலகிற்கு ஒளியாக உங்களைவைத்தேன்

என்றும் மாந்தர்முன் ஒளியாக வாழுங்கள்

 

 1. உங்கள் செயல்கண்டு உலகோரும் போற்றட்டும்

எம்பிரான் தந்தையை இணையில்லா இறைவனை

 

(பக்தன் கூறினான்:)

 

 1. நடமாடும் கோயிலாய் நாமிருக்க நாதனுக்கு

இனிஏதுஉறவு உண்டு இருளான செயலோடு

 

 1. தீய செயலுக்குத் துணை என்றும் போகாது

வெளியாக்கி அழிப்போம் உலகில், இல்லாது

 

 1. உண்மை, ஒழுக்கம், உயர்செயல்கள் எல்லாம்

நல்ல விளைவாகும் ஒளியின் பலனாகும்

 

 1. ஆண்டவன் பணிசெய்யும் அருள்தொண்டர் ஆனதால்

அவனிக்கு நாம் உரைப்போம் அவன்தொண்டர் என்று

 

 1. இருளில் வாழ்ந்த நம்மை ஒளிகாட்டி

அழைத்தவன் அவனே உண்மைஒளி என்று

 

 1. உலகிற்குச் சொல்வோம் உண்மைவழி உரைப்போம்

ஐயனின் தொண்டராய்ச் சேவைநாம் செய்வோம்.

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. உலகை வென்றோர்க்கு உவந்து அளிப்பேன்

ஞானக்கனிதனை நாளும் உண்பதற்கே

 

 1. அண்டசராசரத்தின் ஆதிக்கம் என்கையில்

ஆதலால் அளிப்பேன் அழிவில்லா வாழ்வுதனை.

 

(பக்தன் கூறினான்:)

 

 1. மரணத்தின் கூரொடித்து மீட்டானே நம்மை

அழிவில்லா வாழ்வுடனே ஜீவன் அளித்தான்

 

 1. நன்மையினால் தீமையை வென்றோர்க்கு இனிமேல்

மரணத்தின் கூரெங்கே மாயையின் ஜெயமெங்கே

 

 1. என்றென்றும் நாம்சொல்வோம் இறைவனுக்கே நன்றி

நம்நாதன் மூலமே நமக்களித்தான் வெற்றி.

 

 1. நன்மை, தீமை போராட்டம் என்ற

இருப்பத்தோராம் அதிகாரம் இத்துடன் நிறைவுற்றது.]