Bhakti Song 153

புகலிடம் இல்லை

உன்னடி தேடி நான் வரவேண்டும்
அது என்னுள் உவப்பைத் தரவேண்டும்
தன்னிகரில்லாத தலைவனே உன்
மலரடி என்றும் நான் தொழவேண்டும்

காலை மதியம் மாலைப் போது
கடவுள் அடிதேடி ஓடும்போது
கணநேரமும் என்னைக் கைவிட மாட்டான்
கண்ணின் இமைபோல் வைத்துக் காப்பான்

என்னதான் அவனும் தந்திட வில்லை
என்னையும் அவனே கைவிட வில்லை
வேறு உண்டோ புகலிடம் எனக்கு
வேறெதுவும் வேண்டாம் இனியும் எனக்கு.

13-02-2013, மதியும் 2.45, குருகும்.