Bhakti Song 155

உதவிடுவாயே

அமைதி காத்திட உதவிடுவாயே
அன்பைக் காத்திட உதவிடுவாயே
அருளைக் காத்திட உதவிடுவாயே
மருளை நீக்கிட உதவிடுவாயே

உன்னடி வந்திட உதவிடுவாயே
உள்ளம் கனிந்திட உதவிடுவாயே
பக்தி செய்திட உதவிடுவாயே
பாதம் பணிந்திட உதவிடுவாயே

எண்ணம் சிறந்திட உதவிடுவாயே
என்னை மறந்திட உதவிடுவாயே
உன்னைத் தொழுதிட உதவிடுவாயே
உன்பின் வந்திட உதவிடுவாயே

தொண்டனாய் வாழ உதவிடுவாயே
தொண்டே செய்திட உதவிடுவாயே
உன்னையே உயர்த்திட உதவிடுவாயே
உன்புகழ் பாடிட உதவிடுவாயே.

22-02-2013. மதியம் 2.45. குருகுலம்.