Bhakti Song 156

தந்தாய்

உயர்வை நீயே தந்தாய்-உன்னருளாலே
உனதென்ற எண்ணம் தந்தாய்-உன் செயலாலே
என தென்ற எண்ணம் நீத்தாய்-என் மனதாலே
எல்லாம் எனக்கானாய்-என் வாழ்வாலே

கேட்டால் தருவார் பெற்றோரும்-என் தேவை எண்ணி
கேட்காமலே தருவாய் நீயும்-என் உறவை எண்ணி
சேர்ந்தால் மகிழ்வார் உற்றோரும்-அவர் மனதின்படி
சேர்ந்தே மகிழ்வாய் நீயும்-என் மனதை எண்ணி

நமக்குள்ள உறவும் புதிராம்-உலகோருக்கு
நாம் மட்டும் அறிவோம்-அதன் கணக்கு
உன்னருள் ஒன்றே போதும்-நாளும் எனக்கு
உவப்புடன் என்றும் நான் வாழ்வேன்-உனக்கு.

06-03-2013. 5.30 காலை, குருகுலம்.