Bhakti Song 157

துதிக்கும் நேரம்

உன்னைத் துதிக்கும் நேரமிது
உன்னடி வந்திடும் காலமிது
என்னை மறந்திடும் வேளையிது
எல்லாம் நீயென்று ஆனபின்பு

காலமெல்லாம் கீதம் பாடிடுவேன்
காலையும் மாலையும் துதித்திடுவேன்
நடுப்பகல் உன்னை நினைத்திருப்பேன்
நாளும் உன்னில் வாழ்ந்திருப்பேன்

உன் சொல் எனக்கு மந்திரமாம்
உன் செயல் எனக்குத் தந்திரமாம்*
உன்னடியார் எனக்குச் சொந்தமுமாம்
உலகே எனக்கு ஒருபோர்க்களமாம்

ஆயினும் வெல்வேன் அதனை இனி
அதற்கு நீயும் உண்டு துணை நீ இனி
என்னில் கலக்கமும் இனி உண்டோ
வெற்றியே அன்றித் தோல்வி உண்டோ
*ஆகமம் = செயலுக்கான விதிகள்

08-03-2013. காலை 8.30