Bhakti Song 158

பரிகாரம்

தொங்கினாய் நீயும் சிலுவையில் அன்று
தெய்வமே நீ என் கருமம் கண்டு
உருகினாய் நீயும் மனதில் அன்று
உலகோர் பாவம் போக்க வென்று

மானுடர் பாவம் போக்க வேண்டிச்
செய்த பரிகாரம் கொஞ்சம் உண்டோ
ஏது செய்தும் மாறவில்லை-அவர்
தம்செயல் கொண்டு உய்யவில்லை

ஆயினும் நீயே பரிவு கொண்டு
அவரின் நிலையை மனதில் கொண்டு
பாவம் நீக்க உன்னையே தந்தாய்
பரிகாரம் செய்து அவரை மீட்டாய்

என்ன இதற்குக் கைமாறு உண்டு
ஏது இதற்கு மறுவழி உண்டு
உன் செயல்தன்னை மனதில் கொண்டு
உன்னடி பணிவதே எமக்கு உண்டு.
29-03-2013.