Bhakti Song 159

புதியகாலை

புதிய காலையில் புனிதனைத் தொழுவோம்
புதிய கிருபை பெறுவதில் மகிழ்வோம்
இன்றைய நாளும் நலமுடன் இருக்கக்
கிருபை அளிக்க இறைவனும் இருக்க–புதிய…

இன்றைய நாளிலும் பாடுகள் உண்டு
அதனை வெல்ல உறுதி கொண்டு
செயலில் இறங்கிச் செய்து முடிக்க
உடன் வந்து அவன் நம்முடன் நடக்க–புதிய…

தோல்வி எண்ணிச் சோர்ந்திட வேண்டாம்
வெற்றி எண்ணிப் பெருமையும் வேண்டாம்
வெற்றியும் தோல்வியும் வாழ்வில் உண்டு
அதில் மேன்மை அளிக்க இறைவனும் உண்டு–புதிய

வாருங்கள் செல்வோம் வள்ளளை அண்டி
வாழ்த்துவோம் அவனை நாளும் வேண்டி
ஒருநாள் வாழ்வதும் அவனின் அருளால்
அவனே தருவான் அதனை நிறைவாய்–புதிய….

10/04/2013, குருகுலம், காலை, 6.45