Bhakti Song 160

உறவினைச் சொல்லி உரிமைகொண்டாட

ஓடி வந்தேன் ஐயா நானும்
என் உறவினைச் சொல்லி உரிமைகொண்டாட

தேடி வந்தாய் நீயும் தானே–என்னை
நாடி வந்தாய் நீயும் தானே
ஆதலால் அந்த உரிமை கொண்டாடி
ஆதரிப்பாய் என்ற நம்பிக்கை கொண்டு

உலகோர் அறிவார் இந்த உண்மை-நான்
உன்பிள்ளை என்ற மேன்மை-அதைக்
கூறவேண்டுமோ உனக்கு-என்னுடன்
இன்னும் உனக்கு என்ன பிணக்கு?

தாயறிவாளே சேயை-நீ
அறியாயோ என்னை-அந்த
உரிமையினால் நானும் வந்தேன்-உன்
உறவைக் கொண்டாடியே நின்றேன்.

குருகுலம், 18-06-2013. காலை, 9.15