Bhakti Song 161

வந்தேன் நானே

சிந்தை மகிழ நானும் வந்தேனே
சேவிக்க உந்தன் அடிபணிந்தேனே
எந்தையே இறைவா என்னுடன் நீயே
இணைபிரியாது நடந்திடுவாயே

உன்னைப்போல் உண்டோ உலகில் எவரும்
உறவென்று சொல்லி வலம் வருவோரும்
அன்னையும் தந்தையும் ஆனாய் எனக்கே
தமயனாய்த் தோழனாய் இருப்பாய் எனக்கே

சொல்லாலே மொழியாலே கூறிடுவேனோ
சிந்தையில் நான் கொண்ட எண்ணங்களையே
உணர்விலும் உள்ளிலும் ஒன்றாகினாயே
உன்னைப் போல் உறவு உண்டோ சொல்வாயே

வேறென்ன வேண்டும் வாழ்வில் எனக்கு
உன் உறவே போதும் இங்கு எனக்கு
உரிமையால் உன்னடி வந்திடுவேனே
உன்னையே தினமும் பணிந்திடுவேனே.

18-06-2013, காலை, 6.30 குருகுலம்