Bhakti Song 162

ஆளவா

என்னை ஆள நீ வந்திட வேண்டும்
என்னை அதற்கு நான் தந்திட வேண்டும்
உன்னுள் என்னைப் பொதித்திட வேண்டும்
அதற்கு உந்தன் அருளும் வேண்டும்

என்னில் நானே பெலன் இல்லாதவன்
என்மீது நானே வெற்றி காணாதவன்
உன்னடி வந்திடத் துணிவு இல்லாதவன்
உனதருள் இல்லையேல் வாழ்வு காணாதவன்

எத்தனை முறையோ முயன்று பார்த்தவன்
எண்ணில்லாத் தீர்மானம் செய்து தோற்றவன்
அறியாமல் செய்தேன் என்றும் கூறேன்
அதனைநீ அறிவாய் என்பதை அறிவேன்

தஞ்சம் என்று மீண்டுமே வந்தேன்
கொஞ்சம் கருணை வேண்டியே நின்றேன்
தாமதம் செய்வதேன் நீயும் இன்னும்
தயக்கம் கொள்வது எவ்விதம் நியாயம்

உரிமை இல்லையோ எனக்கு உன்னிடம்
உறவு இல்லையோ உனக்கு என்னிடம்
பிறர் அறியும் முன் வந்திடு நீயும்
பிறகு தொடுப்போம் வழக்கு மீண்டும்

தோற்பது இல்லை இந்த வழக்கில்
வெல்வது நிச்சயம் இறுதித் தீர்ப்பில்
இடையில் நடக்கும் இந்த நாடகம்
என்றும் முடியாது வாழும் வரைக்கும்

கதையும் உனது காட்சியும் உனது
அதன்படி நடிக்கும் கடமை எனது
சொல்லை மீறாத் தொண்டன் நானே
ஆள்வது என்பது உந்தன் கடனே

20-06-2013. காலை 9.00, குருகுலம்.