Bhakti Song 163

வாழ்வளித்தாய்

எனக்கும் நீயே வாழ்வளித்தாய்
என்னை நீயே உய்வித்தாய்
உனக்குள் வாழும் நிலையளித்தாய்
உலகோர் காண உய்வித்தாய்

என்னை நானும் நன்கறிவேன்
எந்தன் மனதின் நிலையறிவேன்
உனக்காய் வாழ முடிவெடுத்தேன்
உலகோர் அறிய வாழ்ந்திடுவேன்

நமது இந்த உறவினையே
யாரும் அறியா உணர்வினையே
நாளும் தொடர்வோம் இருவருமே
யாரும் புரியா வகையினிலே

பக்தி என்பது இதன் பெயராம்
பரவசம் என்பது இதன் நிலையாம்
முக்தி என்பது இதன் முடிவாம்
முழுமை என்பதே இதன் உயர்வாம்

வார்த்தையால் சொல்ல முடிந்திடுமோ
வாழ்ந்தே காட்டினால் புரிந்திடுமோ
மனம்மொழி கடந்த உன்னதமே’
பக்தியில் மட்டும் விளங்கிடுமே

முழுமுதற் பொருளே போற்றுகிறேன்
முக்திக்கு ஈசனை வாழ்த்துகிறேன்
முதலும் முடிவும் ஆனவனே
முழுதும் உனதாய் ஆனேனே!

24-06-2013. காலை, 9.00, குருகுலம்