Bhakti Song 166

எம் சித்தாந்தம்

இரக்கத்தினாலே கரை சேர்த்தாய், உன்
இதயத்திலே நீ எனைச் சேர்த்தாய், மன
உருக்கதிலே மனு உருவெடுத்தாய்
உலகோர் உய்ய உனையளித்தாய்

மன மயக்கத்தினாலே வாழ்விழந்தேன்
மதி குழப்பத்தினாலே உருக்குலைந்தேன்
கலக்கத்தினாலே நான் வழி மறந்தேன்
உன் கருணையாலே நான் உய்வடைந்தேன்

பக்தியினாலே நான் உனையறிந்தேன்
பக்தர் குழாத்தாலே நிலைத்து நின்றேன்
முக்தியின் மேன்மை அறிந்து கொண்டேன்
முக்தேசனே உனைத் தொழுது நின்றேன்

முக்தி வேதமே எம் துணையாம்
பக்தர் குழாமே எம் பெலனாம்
முக்தி நெறியே எம் மார்க்கம்
பக்தி ஒன்றே எம் சித்தாந்தம்

அறிந்தே இதை நாங்கள் கூறுகின்றோம்
அறியாதோரும் நன்கு அறிந்துகொள்ள
புரிந்தோர் யாவரும் வந்திடுவீர்
புனிதன் அடியைச் சேர்ந்து தொழ.

30-06-2013, காலை 6.30