Bhakti Song 168

நீயே கதி

உதய கீதம் பாடிடுவேன்
உன்னை மனதில் போற்றிடுவேன்
சத்திய வேதத்தைத் தியானித்திடுவேன்
சன்மார்க்க நெறியைச் சார்ந்திடுவேன்

முரண்பாடு கொண்ட உலகினிலே
மும்மலம் மனதைக் கலக்கயிலே
முக்தி வழிதேடி ஓடிடுவேன்
முக்தேசன் பாதம் நாடிடுவேன்

என்னென்ன சிந்தை எழுந்தவுடன்
எத்தனை போராட்டம் வாழ்க்கையுடன்
எல்லாமே ஏமாற்றம் என்றபின்னே
உன்னடி நாடியே வந்தேனே

மாறிடுதே மனம் கணந்தோறும்
மாற்றிடுதே என்னைத் தினந்தோறும்
ஒன்றுமே நிலையாக நிற்பதில்லை
உன் அன்பு மட்டுமே மாறவில்லை

ஆதலால் நானும் வந்து நின்றேன்
ஆதாரம் நீயென்று கண்டுகொண்டேன்
வேறெங்கும் தேடேனே உன்னையன்றி
பாதார விந்தமே எந்தன் கதி

04-07-2013. காலை, 8.30. குருகுலம்