Bhakti Song 169

அருள் வேண்டும்

இந்த நாளும் உன் அருளே வேண்டும்
எண்ணம் முழுதும் உன் நினைவே வேண்டும்
சொல்லிலே செயலிலே உண்மை வேண்டும்
சொந்தம் உனதென்ற உணர்வு வேண்டும்

பக்தருடன் நல் உறவு வேண்டும்
முக்தி நெறிநிற்கச் சிந்தை வேண்டும்
பக்தி செய்யவே மனமும் வேண்டும்
முக்தி மறையறிய அறிவு வேண்டும்

புதிய பாடல் தினம் பாடவேண்டும்
புனிதன் உன்னைப் போற்ற வேண்டும்
உன்புகழ் மட்டும் உயரவேண்டும்
உன் தொண்டனாக வாழ வேண்டும்

7/7/13. காலை. 8.30. குருகுலம்