Bhakti Song 170

ஆதாரம் நீ.

மனம் மொழி மெய்யாலே பணிந்திடுவேனே
மன்னனே உன்னடி தொழுதிடுவேனே
செயலாலே உன்மேன்மை அறிந்திடுவேனே
மன உயர்வாலே உன்புகழ் பாடிடுவேனே

அறிவாலே உன்னை நான் அறிந்திடுவேனோ
’அகம்’ அழியாமல் உன்னை அண்டிடுவேனோ
உறவாலே அன்றி உனைத் தொழுவேனோ
உலகமே பழித்தாலும் உனை மறப்பேனோ

கேள்விகள் ஆயிரம் மனதிலும் உண்டே
கேள்விக்கே விடையாக நீ ஆனபின்னும்
பதிலாக எதை நான் புரிந்து கொள்வேனோ
பரமனே உனையன்றி அறிந்து கொள்வேனோ

ஆயினும் சிந்தையில் ஆயிரம் தடுமாற்றம்
அறியாத காரணத்தால் மனதிலே போராட்டம்
ஆனாலும் துணிந்தேதான் உன்னடி வந்தேன்
ஆதாரம் நீ என்று உணர்ந்து கொண்டேன்.

7, 10-7-13, இரவு 11. 15