Bhakti Song 171

மீண்டும் அருள்வதேனோ

மீண்டும் மீண்டும் அருள்வதேனோ
மீளாத் துயரத்தில் கிடந்த எனக்கு

ஆண்டு கொண்டு அருளினைத் தந்தாய்
வேண்டிக்கொண்டேன் இரக்கத்தைத் தந்தாய்
மாண்டு கிடந்தேன் மீட்பினைத் தந்தாய்
நாடியே என்னைத் தேடியே வந்து–மீண்டும்…

எடுத்தத் தீர்மானம் எத்தனை எண்ணுவேன்
கொடுத்த வாக்கினை எவ்விதம் சொல்வேன்
நடித்த நாடகம் கொஞ்சமோ கூறுவேன்
தடுத்தே வந்து தாங்கியே இங்கு–மீண்டும்…

சிந்தையில் இல்லை நிலையான உறுதி
செயலிலே இல்லை நிறைவான இறுதி
மனதிலே இல்லை கனிவான பக்தி
ஆயினும் நீயே நாடியே வந்து–மீண்டும்…

துன்பம் என்பது இறுதி இல்லை
துக்கம் என்பது நிலைப்பதும் இல்லை
மரணம் என்னை வெல்வதும் இல்லை
இறுதி வரையில் நீயே வந்து–மீண்டும்…

13-07-2013 காலை, 8.40. குருகுலம்