Bhakti Song 173

பக்தனாக நான் வாழ வேண்டும்

எத்தனை மேன்மை உனது கிருபை
எத்தனை உயர்வு உனது அன்பு
எத்தனை பொறுமை உனது இரக்கம்
எவ்விதம் உரைப்பேன் வார்த்தையாலே

கொஞ்சமோ எனது மீறுதல் யாவும்
எண்ணவும் தகுமோ எனது பாவம்
சொல்லவும் கூசுமே செயல்கள் யாவும்
சொல்லிவிட்டேன் யாவும் உன்னிடம் நானும்

அறியத் தகுமோ நமது உறவு
அளக்க முடியுமோ உனது அன்பு
பகர முடியுமோ எனது பக்தி
பெற்றேன் அதனால் நானும் முக்தி

எழுதத் துணிந்தேன் எழுத்தினாலே
எண்ணத் துணிந்தேன் சிந்தையாலே
ஆயினும் அனைத்திலும் தோற்றதாலே
சரணடைந்தேன் உன் பாதமதிலே

இதற்கும் மேலே என்ன வேண்டும்
இந்த உயர்வே எனக்கும் போதும்
பக்தனாக நான் வாழ மட்டும்
இறுதிவரை உன் கிருபை வேண்டும்

17-7-13, காலை 8.45