Bhakti Song 177

நிலைக்க வேண்டும்

வேண்டாத உறவுகள் போக்க வேண்டும்
வேண்டும் என்ற எண்ணம் நீக்க வேண்டும்
மாறாத உன்னருள் காட்சி வேண்டும்
மறவாது உன்னடி நான் பணிய வேண்டும்

ஆகாத எண்ணங்கள் போக்க வேண்டும்
அகந்தையை அடியோடு நீக்க வேண்டும்
ஆதாரம் நீ என்றே அறிய வேண்டும்
அனுதினம் உன்னடியே பணியவேண்டும்

தீய செயல்களைத் துறக்க வேண்டும்
தீமையை மனதிலே நீக்க வேண்டும்
தெய்வம் நீ என்று உணரவேண்டும்
தினமும் உன்னடியே பணிய வேண்டும்

உறவோடு எண்ணங்கள் செயல்கள் யாவும்
உனக்காய் மட்டுமே இருக்க வேண்டும்
ஒருபோதும் மாறாத உன் அன்பிலே
ஒன்றாகி நானுமே நிலைக்க வேண்டும்

2-8-13. காலை, 8.30 குருகுலம்