Bhakti Song 178

நான்கொண்ட புண்ணியம்

எந்நேரமும் உன் சந்நிதிதேடி நான்
வந்திடும்போதிலே உள்ளம் மகிழுதே
சிந்தையில் நீ நிறைந்து பக்தியில் நான் திளைக்க
ஊழிகாலம்கூட நொடியினில் போகுதே

இருவரும் தனித்திருந்து இங்கிதமாய்ப் பேச
இனிக்குதே மனமெல்லாம் இன்பமும் பெருகுதே
உறவுக்குத் தடையில்லை உரிமைக்கும் குறைவில்லை
உனையன்றி வேறில்லை உறவென்று ஆனபின்னே

என்ன இப்பேரின்பம் என்ன என் பாக்கியம்
எவருமே அறியாத என் இந்தப் பரவசம்
உன்னிடம் நான் பெற்ற உன்னத ரகசியம்
உரைத்திடப் போகுமோ நான்கொண்ட புண்ணியம்

3-8-13, காலை 9.15