Bhakti Song 179

யுகமாகுதே

ஒருநாள் போவது ஒரு யுகமாகுதே
ஒரு நாழி கழிவது ஒரு நாளாகுதே
விரைவாய் நீவந்து விரும்பியே எனைச்சேரா
ஒவ்வொருநாளும் எனக்கு வீணாகுதே

ஏன் இந்தப் பிரிவு எத்தனை தாபம்
ஏழை என்மீது உன்னக்கென்ன கோபம்
உன்கரத்தினில் இருந்து மார்பினில் தவழாது
காலம் வீணானால் யாருக்கு லாபம்

இன்னும் என்தாபத்தை எவ்விதம் சொல்வேன்
இன்னும் நீ இரங்கா நிலைக்கென்ன செய்வேன்
தலைவா உன்னடி சேராமல் நானும்
புகலிடம் உலகில் வேறெங்கு காண்பேன்

5-8-2013. மாலை 6.30