Bhakti Song 180

வாக்கு ஒன்று போதும்

இறுதி விடையும் இறைவன் தானே
இந்த உண்மை உறுதி தானே
இடையில் தோன்றும் கேள்வியெல்லாம்
என்மனக் கலக்கத்தின் தோற்றம் தானே

எத்தனைக் கேள்வி எத்தனை விளக்கம்
என்மனதில் தோன்றும் பதில்கள் அதிகம்
அனைத்து வழியில் முயன்று பார்த்தும்
தோல்வி அன்றி வெற்றியே காணும்

நாடிய மனிதர் எண்ணிக்கை அதிகம்
நானே செய்த முயற்சி அனேகம்
என்பெலன் கொண்டு போராடின பின்பு
இறுதியில் அடைந்தேன் இறைவன் பாதம்

அறிவேன் அவனே விடையும் என்று
அறிந்தேன் பலமுறை அதனை நன்று
ஆயினும் மனதின் பெலவீனம் கொண்டு
மீண்டும் முயன்றேன் என்வழி கண்டு

’உன்வழி யெல்லாம் என்வழி அல்ல
உன் சித்தமெல்லாம் என்சித்தமல்ல’
என்ற அவனின் வேத மந்திரம்
ஒன்று மட்டும் உண்மை நிச்சயம்

ஆதலால் மீண்டும் அவனடி அடைந்தேன்
அருள்வாய் மீண்டும் மன்னித்து என்றேன்
என்நிலை அறிந்து ஏற்றுக் கொண்டான்
இறுதி வரையில் காப்பேன் என்றான்

இந்த வாக்கு ஒன்று போதும்
எத்தனை முறை நான் தவறிய போதும்
மீண்டும் மீண்டும் சேர்த்துக் கொள்வான்
மாறா உரிமையால் காத்துக் கொள்வான்.

9-8-13. காலை 9.00