Bhakti Song 181

உண்மை அறிந்தேன்

எல்லாப் புகழும் இறைவனுக்கே
எல்லாப் பெருமையும் என் தலைவனுக்கே
தன்னேரில்லா தெய்வம் என அறிந்து
தாள் பணிந்தேன் உன் ஒருவனுக்கே

அனைத்தும் படைத்தாய் ஒரு சொல்லால்
அனைத்தும் காப்பாய் உன்னருளால்
ஆயினும் என்மேல் இரக்கம் கொண்டு
அனைத்தும் துறந்தாய் மன உருக்கத்தால்

உண்டோ உன்போல் தெய்வமொன்று
உலகோர் உய்ய இரக்கம் கொண்டு
உவந்தே வந்தாய் மனு வடிவம் கொண்டு
உலகோர் அறியார் மதி மயக்கம் கொண்டு

என்ன தவம் நான் செய்து விட்டேன்
எத்தனை புண்ணியம் நானும் பெற்றேன்
என்னையும் மீறி நீ ஆட்கொள்ள
என்ன காரியம் நானும் செய்தேன்

விரும்பிபே நானும் வரவில்லை
விரும்பியே என்னைத் தரவில்லை
தடுத்து நீயே ஆட்கொள்ளத்
தாழ்மையாய் உன்னடி பணியவில்லை

என்நிலை அறிந்தாய் நீயும் நன்று
அதனால் என்மேல் இரக்கம் கொண்டு
தேடி என்னிடம் நீயே வந்தாய்
தோழன்போல் என்னிடம் நட்புக் கொண்டாய்

பழகிய பின்னே நானும் அறிந்தேன்
பரமன் நீயே என்றும் உணர்ந்தேன்
பக்தியினால் உன் பதமே பணிந்தேன்
பாவிக்கு நீமட்டும் போதும் என்றேன்

இந்த உண்மை அறிந்த பின்னே
என்ன வேண்டும் இனியும் எனக்கு
எல்லாப் புகழும் உன் ஒருவனுக்கு
என்றே உணர்ந்து உன் தாள்பணிந்தேன்

10-08-13, காலை. 9.00