Bhakti Song 183

சுகமென்ன உண்டு

இதனிலும் சுகமென்ன எனக்கு வேண்டும்
மனதிற்கு வேறென்ன நிம்மதி வேண்டும்–இத

என்னை மறந்து நானிருப்பேனே
என்னை உனக்குத் தந்திருப்பேனே
என்னில் நீயும் நிறைந்திருப்பாயே
என்னுடன் ஒன்றாய் இணைந்திருப்பாயே–இத

தேடின சுகங்கள் பலப்பல உண்டு
தேகத்தின் தேவையை மனதினில் கொண்டு
ஆயினும் ஒன்றிலும் நிறைவென்பதில்லை
நீதரும் நிறைவு அவற்றிலும் இல்லை-இத

நாடுவேன் நாளுமே உன்னடிமட்டும்
தேடுவேன் என்றுமே உன்துணைமட்டும்
கூடுவேன் உன்னுடன் வாழ்ந்திடும் மட்டும்
சேருவேன் இறுதியில் உன்பதம் மட்டும்-இத

15-08-2013, காலை. 8.45