Bhakti Song 184

உண்மை இல்லாதவன்

உண்மை இல்லாதவன் நான்
என்வரை நான் அறிந்தபடி
உள்ளம் உருகாதவன் நான்
உன்வரை உளம் கனிந்தபடி
நன்மை செய்யாதவன் நான்
பிறர் நலம்மட்டும் விரும்பியே
நேர்மை இல்லாதவன் நான்
நீ வகுத்த நீதியின்படி
வாய்மை இல்லாதவன் நான்
என்மனமே குற்றம் சாற்றும் படி
நீதி செய்யாதவன் நான்
நான் கொண்ட கொள்கைப்படி
யாது மற்றவன் நான்
நீ வந்தே மீட்கா வரை
ஏதுனக்குக் கூறுவேன் நான்
எல்லாம் நீ பறிந்தபின்னே?

19-08-2013, காலை. 8.45