Bhakti Song 185

நீ போதும்

உண்டோ உன் சந்நிதிபோல உவப்பெனக்கு
உண்டோ உன் போல உறவெனக்கு
நன்றோ தீதோ நான் ஒன்றறியேன்
நாதனே உன்திருவடியன்றி வேறறியேன்

ஆயிரம் தேவைகள் உண்டு வாழ்க்கையில்
அத்தனை பெற்றும் இல்லை நிம்மதி சிந்தையில்
எத்தனை நீ தந்தபோதும் என்மனதில்
ஏதோ ஒன்றைத்தேடி ஓடுகிறேன் வாழ்க்கையில்

பொன்னல்ல பொருளல்ல போகமல்ல அது
புகழல்ல பெலனல்ல பேரும் அல்ல அது
உலகமே தருகின்ற உயர்வும் அல்ல அது
உன்னோடு உள்ள உறவு மட்டும் அது

போதும் எனக்கு உன் புகலிடம் மட்டுமே
போதும் எனக்கு உன் திருவடி மட்டுமே
காண்கிலேன் மற்றெதிலும் நிறைவு மட்டுமே
கணம்தோறும் தொழுவேன் உன் திருவடிமட்டுமே

22-08-2013, காலை, 8.45