Bhakti Song 195

உறவாட இது நேரமே

உறவாட இது நேரமே-என்
உளமாற உனைப்பாடி உனைநாடி உன்னுடன்–உற..

புரியாத புதிரல்ல அறியாத கலையல்ல
தெரியாத உறவல்ல உருகாத மனதல்ல
எனைநாடி எனைத்தேடி என்னுடன் நீவர
உளமாற உனைப்பாடி உனைநாடி உன்னுடன்–உற..

மலைத்தேன் நான்களைத்தேன் மனதிலே திகைத்தேன்
தொலைந்தேன் நான் அழிந்தேன் தூரமே இருந்தேன்
எனைத்தேடி அன்புடன் எனைநாடி நீவர
உளமாற உனைப்பாடி உனைநாடி உன்னுடன்–உற..

வருந்தேன் நான் கலங்கேன் வாடியே புலம்பேன்
வந்தேன் நான் தந்தேன் வாழ்த்தியே நின்றேன்
வினைகளை நீக்கிட விரும்பியே நீவர
உளமாற உனைப்பாடி உனைநாடி உன்னுடன்–உற..

24-09-2013, காலை, 8.40