Bhakti Song 401 – மாற்ற முடியாது

சந்தேகம் கொண்டவர்

சஞ்சலம் கொள்ளுவார்

சட்டெனப் பிறர்மேல்

கோபமும் கொள்ளுவார்

 

இருமனம் கொண்டவர்

நிலையாக நில்லார்

எல்லோர் மீதும்

எரிச்சலும் கொள்ளுவார்

 

தான்செய்த தவரை

நியாயப் படுத்தி

பிறர்செய்யும் எதனிலும்

குறையுமே காண்பார்

 

தன்னுள் அமைதியை

தானும் இழந்து

பிறரையும் அவர்போல்

புலம்ப வைப்பார்

 

என்ன செய்தாலும்

இவர்குணம் மாறாது

எப்படி உரைக்கினும்

புத்தியும் ஏறாது

 

இறுதி வரையிலும்

போராட்டம் ஓயாது

என்ன முயன்றும்

மாற்ற முடியாது

 

முடிந்த வரையில்

பொறுமை காக்கனும்

முடியாது போனால்

தப்பிக்கப் பார்க்கனும்

 

திருத்த எண்ணி

தலையை நுழைத்தால்

தினம்தினம் அவசியம்

அடிபட்டு சாகனும்

 

31-3-16, மதியம் 2.45, மத்திகிரி