Bhakti Song 412 – நாளும் துதிப்பேன்

சிரம்மீது கரம் வைத்து

சிந்தையில் உனை வைத்து

நான் உனைக் கொண்டாடி

நாதனே உனில் மகிழ்வேன்

 

உவகை உள் பெருக

ஊனுடல் உனில் உருக

ஆனந்தம் மிகப் பெருக

ஆடி நான் பாடிடுவேன்

 

என்ன தவம் செய்தேன்

ஏது அறம் செய்தேன்

ஏதோ இரங்கி நீ

ஏழையை ஆட் கொண்டாய்

 

அருளும் நான் அறியவில்லை

அன் பெது புரியவில்லை

ஆயினும் ஏனோ நீ

அருகில் நாடி வந்தாய்

 

இனி நான் என்செய்ய

எவ் விதம் பதில்செய்ய

என் ஏழ்மை உணர்ந்தபின்

எளியனாய் வந்தேனே

 

வெறும் கையால் கரம்கூப்பி

இரு கண்ணில் நீரேந்தி

நாவிலே தழும் பேற

நாளுமே துதி செய்வேன்.

 

18-4-16, சென்னை, இரவு 11.40