Bhakti Song 413 – புலனுக்குப் புறம்பே

கண்களும் காணவில்லை

காயம்பட்ட மேனியை

கரங்களும் உணரவில்லை

வடுவேறிய விலாவினை

சிரமுமே தொட்டதில்லை

ஆணிபட்ட அடிகளை

சிந்தைக்கும் புரியவில்லை

நீகொண்ட கலக்கத்தை

 

ஆயினும் புரிந்தேனே

அன்பிற்கு இலக்கணம்

அத்துடன் அறிந்தேனே

அருளுக்கு விளக்கம்

இவற்றுடன் உணர்ந்தேனே

ஈடில்லா உன்னறம்

என்னுள்ளே கொண்டேனே

என்றைக்கும் உன்குணம்

 

புலன்களால் தீண்டவேண்டாம்

புண்பட்ட மேனியை

புரிந்தபின் புலம்பவேண்டாம்

நீகொண்ட கலக்கத்தை

அறிவினால் அறியவேண்டாம்

அன்பின் உன் விளக்கத்தை

அடிபணிய வந்தால்போதும்

அடிமைஉன் சரணத்தை

 

சென்னை, இரவு, 12.40, 18-4-16