Bhakti Song 414 – பற்று

உனைப்பற்றும் பற்றொன்றே

என்னுள்ளே இருக்க

உன்னைக்காணும் வேட்கையே

என்னையும் நிறைக்க

உன்னன்பு ஒன்றிலே

நானுமே திளைக்க

உன்பாதம் பணிந்தேனே

உன்சித்தம் நடக்க

 

என்தேவை நிறைவேற

தேடினேன் அதிகம்

எத்தனைப் பெற்றாலும்

நிறைவில்லா மயக்கம்

ஆயினும் அதைவிட

கொண்டேனே தயக்கம்

அதனாலே நாடினேன்

நீகாட்டும் இரக்கம்

 

உருண்டோடும் வாழ்வில்

நிலைப்பதும் எதுவோ

உருவாகும் எண்ணத்தில்

நிலையான தெதுவோ

நான்கொண்ட வேட்கையில்

நிறைவான தெதுவோ

நானிதைப் புரிந்தாலும்

மீட்பதும் எதுவோ

 

பற்றற்ற உன்பாதம்

பற்றிட வேண்டும்

பறந்தோடும் வாழ்விலே

விடுதலை வேண்டும்

பற்றிய உன்பாதம்

நழுவ விடாமல்

உனைப்பற்றும் பற்றாலே

எனைக்காக வேண்டும்

 

27-4-16, மத்திகிரி, மதியம் 2.00