Bhakti Song 473 – வேறுவழி இல்லை

தெரியாது வந்தேன்

புரியாது நின்றேன்

தெளிவின்று மனதில்

குழம்பியே நின்றேன்

 

அருள்வேண்டும் எனக்கு

அதைசொன்னேன் உனக்கு

ஏன்கொண்டேன் பிணக்கு

தெரியாதா உனக்கு

தெளிவில்லை மனதில்

திறனில்லை உடலில்

மனதுடன் மதியில்

சோர்ந்தேன் விரைவில்

 

புலம்பலே வாழ்வாச்சு

போராட்டம் நிதமாச்சு

அதனாலே உன்னோடு

வழக்காடி பார்த்தாத்சு

 

இனிசொல்ல மாட்டேன்

உனைக்கேட்க மாட்டேன்

உனக்கென்ன தெரியாதா

நான் வரமாட்டேன்

 

நானின்றி நீமட்டும்

நலமாய் வாழ்ந்திடு

என்பாரம் வீணாய்

சுமப்பதை இனிவிடு

 

பிடிவாதம் பிடித்தால்தான்

புரிந்திடும் உனக்கு

இதுவன்றி வேறு

வழியில்ல எனக்கு

 

மத்திகிரி, 22-7-16, மதியம் 2.15