Bhakti Song 475 – ஒவ்வொன்றாய் எண்ணு

ஒவ்வொன்றாய் எண்ணினால் மனமே

ஓயாமல் துதிப்பாய் தினமே

நன்றி நன்றி என்று சொல்லும்படியாக

நாள்தோறும் உனக்கு அள்ளித்தந்தானே–ஒவ்வொன்றாய்….

 

உன் எண்ணம் போலவே வாழ்கிறாய்

ஒன்றிலும் குறையின்றி இருக்கிறாய்

உன் சித்தம் நிறைவேறப் பார்க்கிறாய்

இதை உணர்ந்தபின் வாய்மூடி ஏன்னிருக்கிறாய்–ஒவ்வொன்றாய்….

 

கடன் பட்டவன்போல் வந்து நிற்கிறான்

உன் கட்டளை ஏற்றுமே செய்கிறான்

குறைபட்டால் கோபிப்பாய் என்பதால்

உன் குணமென்னி அவனுமே நடக்கிறான்–ஒவ்வொன்றாய்….

 

தெய்வமே ஆயினும் பாவம்–உனக்கு

தொண்டுமே செய்கிறான் நாளும்-இதை

தெரிந்தபின் வீணிலே கர்வம்-கொண்டு

திரிவதும் எவ்விதம் நியாயம்–அதை–ஒவ்வொன்றாய்….

 

வேண்டாத எண்ணத்தை போக்கிவிட்டு

வீணான செயலெல்லாம் நீக்கிவிட்டு

நன்மைகள் செய்வோனைப் பாடிக் கொண்டு

நாளெல்லாம் அவற்றை எண்ணிக் கொண்டு–ஒவ்வொன்றாய்….

 

மத்திகிரி, காலை, 6.00, 28-7-16